பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டவர்களை விசாரிக்க வந்த காவலரை தாக்கிய 3 பேர் கைது.!

சென்னை அடுத்த அம்பத்தூரில் தகராறில் ஈடுபட்டதை விசாரித்த காவலரை தாக்கி கைப்பேசியை உடைத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  ஓரகடம் சாலையை சேர்ந்த மோனிஷ், தனியார் நிறுவன ஊழியரான அவரது தோழியை ஆபிஸ் கேப்-ல் ஏற்றி விட அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியாக காரில் வந்த 3 பேர், மதுபோதையில் இவர்களிடம் தகராறு செய்ததோடு பெண்ணிடம் வம்பு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வந்த, ரோந்து பணியில் இருந்த காவலரையும், 3 பேர் தாக்கி … Read more

திமுக அரசைக் கண்டித்து அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரதம்: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில், பாஜக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடந்த போராட்டத்தில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு மானியம் குறைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத … Read more

''நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே?”- அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு, விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதுவரை பணி வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார … Read more

குடிசை வீடு… செங்கல் அடுப்பு… கட்டிட வேலை… அசல் கிராமத்து பெண்ணாக மாறிய சீரியல் நடிகை

சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது அவைரும் அறிந்த ஒன்று. இந்த வரவேற்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சின்னத்திரை நடிகைள் பலரும் தங்களது சமூ வலைதளங்களில் ஆக்டீவாகஇருந்து வருகிறது. இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் அவர்கள், சில சமயங்களில் வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். எதுவுமே வித்தியாசமாக இருந்தால் அனைவரையும் கவரும் என்று சொல்லாம். அந்த வகையில் பிரபல சீரியல் … Read more

அதிமுக பொதுக்குழு.. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.  கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் … Read more

இருசக்கர வாகனம் மீது கம்பு தட்டியதில் நிலைதடுமாறி விழுந்த இருவர் மீது கார் மோதி விபத்து.!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பந்தல் அமைப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட கம்பு, இருசக்கர வாகனம் மீது தட்டியதில் நிலை தடுமாறி பைக்குடன் கீழே விழுந்த இருவர் மீது கார் மோதிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. பட்டகசாலியின்விளை என்ற பகுதியில் சுடலை மாடசுவாமி கோவில் திருவிழாவிற்காக பந்தல் அமைக்க இருவர் தோளில் வைத்து கம்பு எடுத்து சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது. பைக்கில் சென்ற இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிரே வந்த கார் மோதி … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கும் கனமழை

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு … Read more

’’என் மாமனார் பாலியல் தொல்லை கொடுக்கிறார்’’ – துணை நடிகை பரபரப்பு புகார்

மாங்காட்டில் தன்னுடைய மாமனார் தன்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக துணை நடிகை புகார் அளித்துள்ளார்.  சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், பாலகிருஷ்ண நகர் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனா நாச்சியார் (என்ற) ரஞ்சனா(37). தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், சின்ன திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தனது மாமனார் சரவணவேல் தனக்கும் தனது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து, கொலைவெறி தாக்குதல் … Read more

ஓ.டி.பி எண் சொல்வதில் தாமதம்… ஓலா கார் டிரைவரால் ஐ.டி ஊழியர் அடித்துக் கொலை

Ola cab driver killed IT employee for delaying OTP: சென்னையில், ஓ.டி.பி எண்ணை கூறுவதில் ஏற்பட்ட தகராறில், மென்பொறியாளர் ஒருவர், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் ஓலா கார் டிரைவரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த எச்.உமேந்தர் (34), தனது மனைவி பவ்யா (34), இரண்டு குழந்தைகள் மற்றும் பவ்யாவின் சகோதரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் நாவலூரில் உள்ள ஒரு மாலில் படம் பார்க்க சென்றிருந்தார். படம் முடிந்து அனைவரும் … Read more

பள்ளிப்பட்டு முதியவர் தற்கொலை விவகாரம்… பெரும் அதிர்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்.!

வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை: பழங்குடி சாதிச்சான்றுகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை தேவை என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பழங்குடியின மக்களுக்கான சாதிச்சான்றிதழ்களை வழங்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்துவதாகக் கூறி, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் 80 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பழங்குடியின மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்த முதியவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, … Read more