திருப்பதிக்கு மீண்டும் தினசரி ரயில்: தமிழக பக்தர்கள் நோட் பண்ணுங்க

திருப்பதி – காட்பாடி இடையே, வரும் 11ம் தேதி முதல், தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து, தினமும் காலை 10:55 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:30 மணிக்கு, வேலுார் மாவட்டம் காட்பாடி சென்றடையும். காட்பாடியில் இருந்து, இரவு 9:55 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:50 மணிக்கு திருப்பதி சென்றடையும்.விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் மயிலாடு துறைக்கு, வரும் 11ம் தேதி முதல், முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் … Read more

தொடரும் அத்துமீறல்…, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாமக  தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!. 

தொடரும் சிங்களப் படையின் அத்துமீறல்கள் : கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி காங்கேசன் துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது! காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது … Read more

ஜூலை 11 பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். உயர் நீதிமன்றத்தில் மனு..!

ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓ.பி.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கான நோட்டீஸை 15 நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டிய நிலையில், நேற்றுதான் வந்ததாக மனுவில் ஓ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்ட நிலையில், நாளை விசாரிப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார். Source link

மதுரையில் இருந்து ஜூலை 23-ல் தனியார் காசி யாத்திரை ரயில்

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், 2-வது தனியார் ரயில் (திவ்ய காசி-ஆடி அமாவாசை) காசி யாத்திரை ரயில் வரும் 23-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. உள்ளூர் சுற்றுலாக்களை மேம்படுத்தும் வகையில், ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்த திட்டம் பாரத் கவுரவ் திட்டம். இத்திட்டத்தின் கீழ் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து ஷீரடிக்கு இயக்கப்பட்டது. இதையடுத்து, பாரத் கவுரவ் திட்டத்தில் இரண்டாவது ரயில் சேவையை டிராவல் டைம்ஸ் நிறுவனம் வழங்க உள்ளது. இந்த நிறுவனம், … Read more

மிருதுவான உதடுகளுக்கு.. பிரியங்கா சோப்ரா ஹோம்மேட் லிப் ஸ்க்ரப்!

இந்தியர்கள் தங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்க ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஸ்க்ரப்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். நம்மில் பெரும்பாலோர் நம் முகத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்போது, ​​​​ அடிக்கடி நம் உதடுகளை மறந்துவிடுகிறோம் – இது முகத்தின் மிகவும் மென்மையான அம்சங்களில் ஒன்றாகும். தோல் மருத்துவ நிபுணர் கீதிகா மிட்டல் குப்தாவின் கூற்றுப்படி, “உங்கள் உதடுகள் உங்கள் முகத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருக்கலாம், ஆனால் அவை மேக்கப் இல்லாமல் சிறப்பாக இருக்க நிலையான கவனிப்பும் … Read more

#BigBreaking || அன்போடு அழைத்த எடப்பாடி பழனிச்சாமி…. ஓபிஎஸ் தரப்பில் சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்.!

கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கூறி, ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தது.  இதனை தொடர்ந்து, வருகின்ற 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு … Read more

ஜூலை 11 பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். உயர் நீதிமன்றத்தில் மனு..!

ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓ.பி.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கான நோட்டீஸை 15 நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டிய நிலையில், நேற்றுதான் வந்ததாக மனுவில் ஓ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்ட நிலையில், நாளை விசாரிப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார். Source link

அதிமுக பொதுக்குழு தொடர்பாக இபிஎஸ் மேல்முறையீடு: தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக பழனிசாமி உள்ளிட்டோர் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று நாளை (ஜூலை 6) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றும், கட்சி விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உத்தரவிட்டிருந்தது. … Read more

புதுக்கோட்டை: ‘திருமணத்தை மீறிய உறவு‘ – தாய் மகள்களுடன் எடுத்த விபரீத முடிவு

சித்தன்னவாசல் அருகே மலையடிபள்ள தண்ணீரில் விழுந்து தாய் மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மாஞ்சான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மனைவி மாரிக்கண்ணு மற்றும் அவரது மகள்களான கோபிகா, தாரணிகா ஆகிய மூவரும் நேற்று சித்தன்னவாசல் அருகே உள்ள மலையடி பள்ளத்தில் உள்ள நீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரின் சடலத்தையும் மீட்டு … Read more

கொரோனா அதிகரிப்பு; ஊரடங்கு விதிக்கப்படாது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஊரடங்கும் மற்றும் கூடுதல் கட்டுபாடு விதிக்க தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவுதல் கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. கோவை மற்றும் செங்கல்பட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  தற்போது பரவிவரும் கொரோனா எண்ணிக்கையை வைத்து புதிய கட்டுபாடுகளும், ஊரடங்கும் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஊரடங்கு விதிக்கப்படாது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 5% கொரோனா நோயாளிகள் … Read more