ரூ.10 லட்சம் மோசடி | விசாரணயை ரத்து செய்யக் கோரிய பெண் காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

மதுரை: வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர், துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்தவர் வசந்தி. இவர், வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது வசந்தி ஜாமீனில் உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வசந்தி மீது குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக … Read more

உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்… காலரியில் விளக்கு எங்கே இருக்கு கண்டுபிடிங்க பார்க்கலாம்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. இதற்கு காரணம் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிப்பவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு வகையில் டிஜிட்டல் கண்ணாமூச்சி என்று … Read more

நான் பின்வாங்குவதாக இல்லை.., எது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறேன் – லீனா மணிமேகலை.!

சிகரெட் பிடிப்பது போன்ற சுவரொட்டியை வெளியிட்டு, இந்து கடவுள் காளி தேவி அவமதித்ததாக திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலை மீது, வடமேற்கு டெல்லி காவல்துறை துணை ஆணையரிடம் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகார் அளித்துள்ளார். அவரின் அந்த புகாரில், காளி தேவி புகைபிடிக்கும் ஒரு போஸ்டர் மற்றும் வீடியோ கிளிப்பை சமீபத்தில் லீனா மணிமேகலை தனது ட்விட்டரில் “காளி” என்ற ஆவணப்படத்தை விளம்பரப்படுத்தினார்.  இந்த போஸ்டர் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் இந்து நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை இழிவுபடுத்துகிறது. … Read more

திருநெல்வேலியில் சோலார் பேனல் தயாரிப்பு ஆலை அமைக்கும் டாட்டா பவர்.. முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பம்..!

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் மூவாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 4 ஜிகாவாட் சோலார் பேனல் உற்பத்தி ஆலையை அமைக்க டாட்டா பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமாகியுள்ளதாக டாட்டா பவர் தெரிவித்துள்ளது. Source link

ரூ.1,25,244 கோடி முதலீடு, 74,898 பேருக்கு வேலை – முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சென்னை: “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் … Read more

குரூப் 4, 7பி, 8 தேர்வர்கள் உடனே இதை செய்யுங்க… TNPSC முக்கிய அறிவிப்பு!

TNPSC announces re upload certain documents to aspirants: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, குரூப் 7பி மற்றும் குரூப் 8 பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 7பி மற்றும் குரூப் 8 … Read more

பள்ளி மாணவியை கடத்திச் சென்று சீரழித்த வாலிபர்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை.!

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேவியர் காலனியில் ஜாக்கோப் மெல்கி எத்தேன்(வயது 25) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் … Read more

“ஜூலை 11 அதிமுக பொதுக்குழுக் கூட்ட விவகாரத்தில் தலையிட முடியாது” – உயர்நீதிமன்றம்

ஜூலை 11ஆம் தேதியன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்ட விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் இது குறித்து தனி நீதிபதியை தான் நாட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 வரைவு தீர்மானங்களை பொதுக்குழுக் கூட்டத்தில் நிராகரித்ததும், தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக நியமித்ததும், பொதுக்குழுவை ஜூலை 11ம் தேதி கூட்ட தீர்மானங்கள் நிறைவேற்றியதும் நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு … Read more

“வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் அதிமுக இனி தேறாது” – டிடிவி தினகரன் கருத்து

தருமபுரி: “அதிமுக என்ற இயக்கம் வீழ்ச்சியை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது, இனி அந்தக் கட்சி தேறாது” என்று தருமபுரியில் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். தருமபுரியில் அமமுக சார்பில் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று (4-ம் தேதி) நடந்தது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: ”பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் பணம் பெற்றுக் கொண்டு அவருக்கு … Read more

விழிப்புணர்வு பேரணியில் இந்தியில் பேனர்கள்! வருத்தம் தெரிவித்த ரயில்வே மேலாளர்!

ரயில்வே பாதுகாப்பு படை விழிப்புணர்வு பேரணி, தமிழில் இல்லாமல் இந்தியில் இடம் பெற்றதற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார். 75ஆவது ஆண்டின் சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் விதமாக, சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இருசக்கர வாகன பேரணி மற்றும் விழிப்புணர்வு காணொளி அடங்கிய வாகனம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் விழிப்புணர்வு காணொளியில் வாசகங்கள் தமிழில் இடம்பெறாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இடம் பெற்றிருந்ததால் … Read more