’எங்கு பார்த்தாலும் அடியாட்கள்; இப்படியொரு பொதுக்குழுவை பார்த்ததேயில்லை’ – மருது அழகுராஜ்

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருக்கக்கூடிய மருது அழகுராஜ் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்து கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்… ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இணைந்து இயக்கத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்துபோய் அதனின் பொன் விழா ஆண்டில் பிளவை நோக்கிச் செல்கிறது என்ற வருத்தத்தில் இருந்ததால் விடுவித்து கொண்டேன். யாருடைய சுயநலம் இந்த பிளவிற்கு காரணம் என தெரியும். … Read more

காளி போஸ்டரால் சர்ச்சை: கைதுக்கு பதில் லவ்யூ ஹேஷ்டேக் போடச் சொன்ன பெண் இயக்குனர்

‘காளி’ படத்தின் போஸ்டர் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் கோபத்தைத் தூண்டிய நிலையில், பலர் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம்சாட்டி, இயக்குனர் லீனா மணிமேகலையைக் கைது செய்யக் கோரியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று ட்வீட் செய்யப்பட்ட இந்த போஸ்டரில், இந்து தெய்வமான காளி போல் உடையணிந்த பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பதையும், எல்.ஜி.பி.டி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வானவில் கொடியை கையில் வைத்திருப்பதையும் காட்டுகிறது. சுயாதீன திரைப்படத் தயாரிப்பாளரான லீனா மணிமேகலை தனது சமீபத்திய ஆவணப்படமான காளி பட போஸ்டரை … Read more

#பரபரப்பு || பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தும் வகையில், கருப்பு பலூன் விட்ட காங்கிரஸ் கட்சியினர்.!

பிரதமர் மோடியின் ஆந்திரப் பயணத்தின் போது ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கருப்பு பலூன்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட்டவுடன், கருப்பு பலூன்களை வீசியதற்காக 3 காங்கிரஸ் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்,  மேலும், விமான நிலையத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்று, கிருஷ்ணா மாவட்ட எஸ்பி சித்தார்த் கவுஷல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  … Read more

திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு !

திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க, மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். பட்டியல் எழுத்தர் பணிக்கு,  பட்டப்படிப்பு படித்தவர்களும், உதவியாளர் பணிக்கு 12ஆம் வகுப்பும், பாதுகாவலர் பணிக்கு 8ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

கரோனா பாதித்தோரில் 40% பேர் மருத்துவமனைகளில் அனுமதியானால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “கரோனா தொற்று பாதித்தோரில் 40 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து முதலியார்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 12-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் … Read more

நீலகிரி: ஊராட்சி அலுவலம் முன்பு அமர்ந்து படிக்கும் மாணவர்கள் – காரணம் இதுதான்!

முதுமலை வனப்பகுதிக்குள் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் அங்கு படிக்கும் மாணவர்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து பெற்றோர்களிடம் பாடம் படித்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் உள்ளது முதுகுளி, நாகம்பள்ளி, புளியாலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூவக்கொல்லி பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் வனப்பகுதியில் உள்ள மண் சாலை வழியாக சென்று … Read more

அ.தி.மு.க பொதுக்குழு; இ.பி.எஸ் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Chennai High court order to EPS to answer about ADMK general council meeting: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, ஜூன் 23 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம், தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல், சலசலப்புடன் நிறைவடைந்தது. 23 தீர்மானங்களையும், … Read more

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்.! 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (3-7-2022) கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இந்த நிலையில், மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இன்று (4-7-2022) கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், “15-6-2022 அன்று முடிவடைந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு தமிழக … Read more

குடிபோதையில் ஸ்வீட் கடையில் ரகளை செய்த இளைஞர்கள்.. பக்கோடாவிற்கு பணம் கேட்ட உரிமையாளருக்கு அடி, உதை..!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் ஸ்வீட் கடைக்குள் புகுந்த இளைஞர்கள் சாப்பிட்ட பகோடா-விற்கு பணம் கேட்ட உரிமையாளரை தாக்கினர். காளிமுத்து என்பவரின் கடைக்கு குடிபோதையில் வந்த 2 பேர் அங்கிருந்த பக்கோடா-வை எடுத்து சாப்பிட்டுள்ளனர். பணம் கொடுத்து பக்கோடா வாங்கி கொள்ளுமாறு காளிமுத்து கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரை டிரேயால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இடது கண் அருகே ரத்தம் வழிந்த போதும் வலியை பொருட்படுத்தாத ஸ்வீட் கடை உரிமையாளர், இருவரில் ஒருவனை பிடித்து போலீசில் … Read more

தென் மாவட்டங்களில் பலத்த காற்று: மின் விபத்துகளை தவிர்க்க செய்ய வேண்டியவை

தென் மாவட்டங்களில் பலத்த காற்று – மின் விபத்துகளை தவிர்க்க செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து மின்வாரிய தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் கி.செல்வகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த காற்று காரணமாக ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்பாதைகளில் விழுந்ததால், மின்தடைகள் ஏற்பட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. … Read more