#BigBreaking || கூடவே இருந்து ஓபிஎஸ்க்கு உலை வைத்த வைத்தியலிங்கம்… சரியான பாயிண்ட்டை பிடித்து… எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பரபரப்பு பேட்டி.!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயகுமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நத்தம் விஸ்வநாதன் தெரிவிக்கையில், “அதிமுகவின் அனைத்து அதிகாரங்களையும் படைத்த பொதுச் செயலாளர் பதவியில் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், தமிழகத்தின் உடைய எதிர்க்கட்சித் தலைவர், அருமை அண்ணன் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுக்குழு மூலமாக தேர்வு செய்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் இந்த … Read more

“யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு எடப்பாடியிடம் ராகுல் காந்தி கேட்டாரா..?”

குடியரசுத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு, அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமியை ராகுல் காந்தி தொடர்பு கொண்டதாக வெளியான செய்தி தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் விளக்கமளித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சிகள் நடக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.  Source link

சுகாதாரமற்ற நிலையில் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை அம்மா உணவகம்:  மாநகராட்சிக்கு RMO கடிதம் 

சென்னை: சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு, மருத்துவமனையில் நிலைய மருத்துவ அலுவலர் (RMO) கடிதம் எழுதியுள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய அரசு பொது மருத்துவமனையாக ராஜீவ்காந்த அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் சென்னை தவிர்த்த பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு … Read more

ஓமலூர்: ஏழு தலைமுறையினர் ஒன்று கூடி கொண்டாடிய சந்திப்பு திருவிழா

ஓமலூரில் ஏழு தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களின் சந்திப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஓமலூரில் ஏழு தலைமுறை குடும்பங்களின் இணைப்பு மற்றும் சந்திப்பு திருவிழா நடைபெற்றது. ஓமலூரைச் சேர்ந்த உறவுகள், நண்பர்கள் திருமணம், வேலை, இடமாற்றம் என தமிழகம் முழுவதும் பிரிந்து சென்று வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பணி நிமித்தம் குடும்பம் என அங்கங்கே குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதனால், கடந்த ஒருசில தலைமுறைகளாக குடும்ப உறவுகளின் மாண்பு, சந்திப்பு இல்லாமல் போனது. மேலும், … Read more

மகாராஷ்டிரா சபாநாயகராக பா.ஜ.க.,வின் ராகுல் நர்வேகர் தேர்வு

BJP’s Rahul Narwekar elected as Maharastra speaker: மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சபாநாயகராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் கோவாவில் இருந்து சனிக்கிழமை மும்பை திரும்பிய நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் மாநில சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இதில், சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, இதில் பாஜகவின் ராகுல் நர்வேகர் … Read more

திடீர் திருப்பம் – முதல்முறையாக பதவி காலி என்பதை ஒப்புக்கொண்ட ஓபிஎஸ் தரப்பு… வரும் 11 ஆம் தேதி என்ன நடக்கும்?!

கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் மூலம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக எடப்பாடி கே பழனிசாமி, ஒ பன்னீர்செல்வத்திற்கு எழுதிய கடிதத்தில் தங்களுடைய ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து டுவிட்டர் பக்கத்திலும் எடப்பாடி பழனிசாமி தான் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதை குறிக்கும்படி சுயவிவரத்தில் திருத்தம் செய்திருந்தார். இந்நிலையில், இன்று ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான … Read more

ஆன்லைன் ரம்மி விளையாடி சொந்த வீட்டிலேயே கை வைத்த நபர்.. அழுது ஓவர் பில்டப் கொடுத்து போலீசில் சிக்கிய சம்பவம்..

நெல்லை மாவட்டம் உவரி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்காக சொந்த வீட்டிலேயே 12 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிய நபரை பிடித்த போலீசார், நகைகளை மீட்டனர். அந்தோணி பாபு ஜார்ஜ் – சோபனா தம்பதி வங்கியில் அடமானம் வந்த நகையை மீட்டு வந்து வீட்டில் பீரோவில் வைத்துள்ளனர். நேற்று சோபனா பீரோவை திறந்து பார்த்த போது நகையும் 15 ஆயிரம் பணமும் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்தார். அவருடனே காவல்நிலையம் சென்ற அந்தோணி, நகை காணாமல் … Read more

கேலிக்குள்ளான வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்: சாலை பணிக்கான டெண்டரை ரத்து செய்ய நடவடிக்கை

வேலூர் மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் சமூகவலை தளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது. வேலூர் பேரி காளியம்மன் கோயில் தெருவில் கடந்த 28-ம் தேதி காலை அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை பணியின்போது சாலையோரம் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தையும் சேர்த்து சாலை அமைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரம், அந்த சிமென்ட் சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்ட தாகவும் புகார் எழுந்தது. அதேபோல், வேலூர் சாயிநாத புரம் பொன்னியம்மன் … Read more

மீண்டும் ஒரு கொடூர விபத்து… கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?

உதகை கல்லட்டி மலைப்பாதையில் நேற்று இரவு நேரத்தில் 30 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் சென்னையை சார்ந்த மென்பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். சென்னை சோலிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மென்பொறியியல் நிறுவனத்தை சேர்ந்த 18 பேர் உதகையை சுற்றி பார்க்க சென்றபோது இச்சம்பவம் நடந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் புதிய தலைமுறை டிஜிட்டல் யூ-ட்யூப் தளத்தில், கல்லட்டி சாலை பற்றியும் அங்கு ஏற்படும் விபத்துகள் பற்றியும் சில முக்கிய விஷயங்களை … Read more

22 ஆயிரம் மரங்கள், 2 குளங்கள்; தனிப் பெண்ணால் எப்படி சாத்தியம் ?.. நெல்லை நூலகரின் சாதனைக் கதை

தமிழக அரசு வழங்கும் 2021ம் ஆண்டின் கிரீன் சாம்பியன் விருதை பெற்றிருக்கிறார் திநெல்வேலியைச் சேர்ந்த  முனைவர் ஆ. திருமகள். 2010ம் ஆண்டு முதல் 2022 வரை சுமார் 22 ஆயிரம் மரங்களை நட்டு அதை பராமரித்து வருகிறார். விதைகளை சேரகரித்து விதை பந்துகளை உருவாக்குவது, வீட்டிலே மரக்கன்றுகளை உருவாக்கி, அதை நட்டு பராமரித்தும் வருகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ். காம்-காக அவரை சந்திக்க சென்றிருந்தோம். மரங்கள் சூழ, மான்கள் துள்ளி குதித்தோட,  நிழல் நிறைந்த சாலையில் மாணவர்கள் நடந்து … Read more