ரேபிஸ், பாம்புக் கடி மருந்துகள் தேவையான அளவு  இருக்க வேண்டும்: தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: ரேபிஸ், பாம்புக் கடி மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரேபிஸ் (வெறி நாய்க்கடி) மற்றும் பாம்பு கடி மருந்துகள் தேவையான அளவு இல்லாமல் இருப்பது சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வின் போது தெரியவந்து. எனவே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரேபிஸ், பாம்பு கடி மருந்துகள் தேவையான இருப்பு வைக்க வேண்டும் என்று தமிழக பொதுக … Read more

கடலுக்குச் செல்லாத மீனவர்கள்: கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள் – காரணம் என்ன?

அரசு வழங்கும் மானிய டீசலை வழங்கவில்லை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் சுமார் 288 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர். தலா ஒரு விசைப்படகுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை அரசு வழங்கி வருகிறது. இதனை மாதம் 1800 லிட்டர் என கணக்கிட்டு ஒவ்வொரு முறையும் கடலுக்குச் செல்லும்போது ஒரு படகுக்கு 250 லிட்டர் டீசல் … Read more

‘செயற்கை ஒளிச்சேர்க்கை’ மூலம் இருளில் தாவரங்களை வளர்க்கும் விஞ்ஞானிகள்!

யுசி ரிவர்சைடு மற்றும் டெலாவேர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், “செயற்கை ஒளிச்சேர்க்கை” மூலம் இருளில் தாவரங்களை வளர்ப்பதற்கு ஒரு வழியை உருவாக்கியுள்ளனர். உயிரியல் ஒளிச்சேர்க்கைக்கு பதிலாக “அசிடேட்”(acetate) ஊடகத்தில் முழுமையான இருளில் தாவரங்களை ஆராய்ச்சியாளர்கள் வளர்த்தனர். கார்பன் டை ஆக்சைடு, மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றை அசிடேட்டாக மாற்ற இரண்டு-படி மின்னாற்பகுப்பு செயல்முறையை (electrocatalytic process) பயன்படுத்தினர். உணவு உற்பத்தி செய்யும் தாவரங்கள்’ வளருவதற்கு இந்த அசிடேட்டை உட்கொண்டன. சுவாரஸ்யமாக, சூரிய சக்தி பேனல்களுடன் இணைந்தால், சில உணவுகளில் … Read more

கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வு வேளாண், தொழில் வளர்ச்சியை பாதிக்கும் – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.!

வெட் கிரைண்டர்கள், விவசாய பம்ப்செட்டுகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 18% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜூலை 18-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜி.எஸ்.டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி, குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சண்டிகரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை உயர்த்த … Read more

மதுபோதையில் காவல்துறையினரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்ட இளைஞர்.!

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ஒரு இளைஞர் காவல்துறையினரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. பெரியார் சிலை ரவுண்டானா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த இரு இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது ஒரு இளைஞர், போலீசாரை ஒருமையில் பேசியதோடு, அங்கிருந்த தடுப்புகளை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார். இதனையடுத்து அந்த இளைஞரை அடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார்,  விசாரித்ததில், ரகளையில் ஈடுபட்டது கூத்தாநல்லூர் … Read more

வேளாண், தொழில் வளர்ச்சி பாதிப்பு; கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வை குறைக்கவும்: ராமதாஸ்

சென்னை: வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வெட் கிரைண்டர்கள், விவசாய பம்ப்செட்டுகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) 18% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஜூலை 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில் வளர்ச்சி, … Read more

'ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் டிஸ்மிஸ்' – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வருபவர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள், பள்ளிக்கு அருகே வசிப்பவர்கள், மாவட்டத்துக்குள் வசிப்பவர்கள் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும். காலிப் பணியிடங்களின் விவரங்கள் அனைத்தையும் இன்று அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் … Read more

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர்களே – பா.ஜ.க

BJP Annamalai addresses OPS and EPS as ADMK Co-Ordinator’s: ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக அ.தி.மு.க.,வின் ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-ஐ ஒருங்கிணைப்பாளர்கள் என்றே குறிப்பிட்டுள்ளது. குடியரசு தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக, பா.ஜ.க அறிவித்துள்ள வேட்பாளர் திரவுபதி முர்மு, சென்னையில் இன்று கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருகிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள … Read more

'நல்லாட்சியின் நாயகன்' வெட்கக்கேடானது! எப்போது, எங்கே நிறைவேற்றினீர்கள் முதல்வரே? – சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்

காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில் அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்வதா? உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சனநாயகத்தால் நிறுவப்படும் ஓர் அரசை நாட்டின் குடிகள்தான், மதிப்பிட வேண்டும். ஆட்சி முறைமைகளில் நன்மைகள் நிகழ்ந்தால் அவர்களாகத்தான் போற்றிக் கொண்டாட வேண்டும். ஆனால் இங்கோ, ‘நூறாண்டு போற்றும் ஓராண்டு சாதனை’ என ஆட்சியாளர்களே அரசுப் பணத்தில் விளம்பரம் செய்துச் … Read more

நிலத் தகராறில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைப்பு.. பா.ஜ.க.வினர் சாலை மறியல்..!

மயிலாடுதுறை மாவட்டம் எருக்கட்டாஞ்சேரியில் பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்தவரை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். மாவட்ட செயலாளர் பாலாஜி என்பவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கும் இடத்தகராறு இருப்பதாகவும், அதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாலாஜியின் கீற்றுக் கொட்டகை அலுவலகத்திற்கு உதயகுமார் தீ வைத்ததாக, பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலாஜி அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் உதயகுமாரை தேடி வருகின்றனர். Source link