திருப்பூர்: வடமாநில பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு!

திருப்பூர்: ஆட்டோவில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்த, திருப்பூரில் பணியாற்றும் பெண் காவலர் கோகிலாவுக்கு பாராட்டு குவிகிறது. இந்தச் சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில், சுதந்திரதினத்தை முன்னிட்டு போலீஸார் நேற்று அதிகாலை வரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில், அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் பெண் கதறி அழுவதை பார்த்த போலீஸார், ஆட்டோவின் அருகில் சென்று … Read more

நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம்!

இன்று நாளையும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பள்ளி மாணவர்களை கட்டிட பணிகளில் ஈடுபடுத்துவதா? – தமிழக பாஜக கண்டனம்

சென்னை: “அரசுப் பள்ளியில் மாணவர்கள் சீருடையுடன் பள்ளியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாணவர்களைப் பள்ளி கழிவறைகளைச் சுத்தப்படுத்துவது தொடங்கி இதுபோன்ற கொடூரங்கள் திமுக ஆட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது” என்று தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் சீருடையுடன் பள்ளியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தன்னை சமூக நீதி அரசு என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது … Read more

இரண்டு கூலியும் தோல்வியடைந்துவிட்டது… ரஜினி மீது மறைமுக அட்டாக்? சீமான் சொல்வது என்ன?

Seeman Press Meet: திமுகவின் கூலியும் தோற்றுவிட்டது, ரஜினியின் கூலியும் தோற்றுவிட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி உள்ளார்.

‘வாக்கு திருட்டு’ விவகாரத்தை திசை திருப்பவே ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: திமுக

சென்னை: “‘வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத் துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. திமுகவினர் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள், ஈடி-க்கும் அஞ்சமாட்டார்கள்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், “ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். 2006 – 2011 திமுக … Read more

திருநங்கைகளுக்கு அதிக சலுகைகள், இதிலும் தமிழ்நாடுதான் டாப்: கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

Transgender Social Awareness Meeting: பொதுமக்கள் திருநங்கைகளை கடவுளாக மதிக்கிறார்கள். அந்த மரியாதையை உயர்த்திக் கொள்ள வேண்டும்: கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு: ஜி.கே. வாசன் இரங்கல்

சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இல கணேசன் பாரதிய ஜனதா கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். அவர் தனது சிறுவயதிலேயே ராஷ்ட்ரிய சுயசேவக் சங்கத்தில் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். தன் தொடர் மக்கள் பணியால், இயக்கப் பணியால் பாரதிய ஜனதா கட்சியின் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிய விண்ணப்ப பரிசீலனை எப்படி நடக்கும்?

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் எப்படி பரிசீலிக்கப்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் 

காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: ​காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு திருவள்ளூர் மாவட்​டங்​களில் கிராம சபைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. ஏகனாபுரம் கிராமத்​தில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதி​ராக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. சுதந்​திர தினத்தை முன்​னிட்டு காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து ஊராட்​சிகளி​லும் கிராம சபைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. கீழம்பி ஊராட்​சி​யில் நடை​பெற்ற கிராம சபைக் கூட்​டத்​தில் ஆட்​சி​யர் கலைச்​செல்வி பங்​கேற்​றார். இந்த ஊராட்​சி​யில் 16 தீர்​மானங்​கள் வாசிக்​கப்​பட்​டன. இதனைத் தொடர்ந்து … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! டிப்ளோமா, இளங்கலை படிப்புக்கு உடனே விண்ணப்பிக்கவும்

TNAU 2025 admission : டிப்ளோமா, இளங்கலை வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.