தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், … Read more

போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபர் கொலை… பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் செய்த சம்பவம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபரை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்தனர். பாண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை,  திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தந்தையான முருகன் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முருகன் கடந்த வாரம் ஜாமீனில் வெளியேவந்துள்ளான். இந்நிலையில், இன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள தைலமர தோப்பில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது சிலர் … Read more

புதுச்சேரிக்கு வருகிறார் திரவுபதி முர்மு: முதல்வர், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்

புதுச்சேரி: தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு புதுச்சேரிக்கு நாளை மறுநாள் (ஜூலை 2) வருகிறார். முதல்வர், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். குடியரசுத்தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக- கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்கா போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து … Read more

நாகர்கோவில் காசியின் ஃபோன், லேப்டாப்பில் இத்தனை ஆபாச வீடியோக்களா? – ஷாக்கான நீதிபதி!

1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் நாகர்கோவில் காசியின் மடிக்கணினி மற்றும் செல்போனில் இருந்ததாக சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதி தெரிவித்திருக்கிறார். ஆசை வார்த்தைகளைக் கூறி சமூக வலைதளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றியதோடு, பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி கடந்த 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த … Read more

ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி

ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை பணியில் அமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ட்ரோன் மூலம் கொசு மருந்தை தெளிக்கும்  பணிகளை சென்னை  மாநகராட்சி கடந்த ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள 5 முக்கிய கால்வாய்களிலும், 31 சிறிய கால்வாய்களிலும் கொசு மருந்து ட்ரோன் மூலம் தெளிக்கப்படுகிறது. இந்நிலையில் ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்க உள்ளதாக சென்னை மாநகரட்சி தெரிவித்துள்ளது. சிங்கார் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இது நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற அதிகாரி கே. … Read more

இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து.! கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!

திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது வான் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். திருப்பூர் வேலம்பாளையம் செட்டியார் வீதியை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் மணிகண்டன்(19), அன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பர்களான விஜய், சஞ்சய் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அன்னூரில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவிநாசி அருகே கருவலூர் நோக்கி சென்ற வேன் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது … Read more

உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை; எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றம்: திருமாவளவன் கண்டனம் 

உதய்ப்பூர்: உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றமாகும், அதிதீவிர சனாதன பயங்கரவாதிகளின் வெறுப்பு அரசியலில் சிக்கிய ஒரு அப்பாவியை மதத்தின் பெயரால் படுகொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார் . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை இஸ்லாமியச் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்பதை அறிவோம். நுபுர் சர்மாவும் சனாதன பயங்கரவாத அரசியலின் விளைச்சல்தான். எனவே அழித்தொழிக்கப்பட வேண்டியது நபர்களல்ல; வெறுப்பை … Read more

‘உரம் நீ வாங்குறியா?’ மீடியாவிடம் எகிறிய அமைச்சர் எம்.ஆர்.கே! வைரல் வீடியோ

உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பக்கத்து மாவட்டத்துக்கு சென்று உரம் வாங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோபமாக ஒருமையில் பேசிய வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 25.5 லட்சம் ரூபாய் மதிப்பில் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு அதிதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழக வேளாண் மற்றும் … Read more

#திண்டுக்கல் || குடிபோதையில் மதுபாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்தி இளைஞர் தற்கொலை முயற்சி.!

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் மது பாட்டிலை உடைத்து, இளைஞர் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தேனியை சேர்ந்த திப்பு சுல்தான் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கலையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் குடித்து வந்தார். இதைத்தொடர்ந்து நேரம் அதிகமாக அதிகமாக குடிபோதை தலைக்கேறிய நிலையில் திப்பு சுல்தான் திடீரென மது பாட்டலை உடைத்து தன்னைத்தானே குத்திக் கொண்டார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more

இரட்டை இல்லை சின்னம் கிடைப்பதில் சிக்கல்: உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணித்த அதிமுக

சென்னை: இரட்டை இல்லை சின்னம் கிடைப்பதில் உள்ள சிக்கல் காரணமாக உள்ளாட்சி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி நிறைவு பெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள் ஆகும். … Read more