தமிழக செய்திகள்
சரியான உச்சரிப்புடன் தமிழில் பேசி ஆச்சரியமளித்த ஆளுநர்
வேலூரில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பாக புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசினார். 5வது நாள் நடைபெற்ற பாலாறு பெருவிழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி சந்நியாசிகள் முன்னிலையில் சனாதன தர்மம் பற்றி பேசினார். அதைவிட, அவர் முழுக்க முழுக்க தமிழில் பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி வைத்து பார்த்து … Read more
இறங்கி வந்த ஓபிஎஸ்.. ஏற்க மறுத்த இபிஎஸ்.. திக்குமுக்காடும் 34 வேட்பாளர்கள்.!!
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு என 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற … Read more
படிக்கிற வயசுல இது தேவையா..!! பேருந்தின் கூரைமீது நடனமாடிய பள்ளி மாணவர் படுகாயம்..!!
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கொளத்தூர், பெரியார் நகருக்கு நேற்று மாலை ஒரு மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சம்பத் (53), மாதவரம் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் (42) ஆகிய இருவரும் பணியில் இருந்தனர். பேருந்து பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை அருகே சென்றபோது, அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர். இதில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த … Read more
மூக்குத்தியை கூட விடல.. இதை வெளிய சொன்னா ரத்தம் கக்கி செத்துரூவீங்க..! சொல்வதெல்லாம் பொய்யான சோகம்.!
79 வயது முதியவரின் நோய் தீர்க்க பூஜை செய்வதாகக் கூறி, மாமியார் மற்றும் மருமகளிடம் இருந்து 20 லட்ச ரூபாய் பணத்தையும், 37 சவரன் நகைகளையும் ஏமாற்றிய பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்று மாந்த்ரீகத்தை நம்பி வீதிக்கு வந்த பெண்ணின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. மாமியார் மற்றும் மருமகளிடம் நோய்களை குணப்படுத்த பரிகார பூஜை செய்வதாகப் பேசி மயக்கி மொத்தமாக நகை பணத்தை ஆட்டையை போட்டுச்சென்றதாக போலீசில் … Read more
குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி
சென்னை: குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது. முதல்நிலை,முதன்மை, நேர்முகத் தேர்வுகள்அடிப்படையில் இதற்கான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். … Read more
எலும்பு வலிமை, சர்க்கரையை கட்டுப்படுத்தும் ராகி சிமிலி… சிம்பிள் ஸ்டெப்ஸ் பாருங்க!
Ragi Simili Recipe in Tamil: ராகி அல்லது கேப்பை அல்லது கேழ்வரகு தென்னிந்தியாவில் மிக முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. இந்த அற்புத தானியத்தில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இவை சரும ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, முடி வளர்ச்சி போன்றவற்றுக்கும் பயன்படுகின்றன. இப்படியாக ஏராளமான … Read more
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மேலும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.!!
இந்தியாவில் மூன்றாவது அலையை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளின் எதிரொலியாக கட்டுக்குள் வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று … Read more
குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது. அந்த வகையில், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த … Read more