தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் மேற்கு திசை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பின்னர் ஒன்றாம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் … Read more

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்ற பெல்லோஷிப் பணியாளர்களுக்கு இளம் திறமையான இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu school education Department பதவி பெயர்: Fellows and Senior Fellows மொத்த காலியாக உள்ள பணியிடங்கள் : 152 கல்வி தகுதி: Any Degree சம்பளம்:  Fellows – Rs.45,000/- Senior Fellows – Rs.32,000/- கடைசி தேதி: 30.06.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.tnschools.gov.in https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform Source link

பாலியல் புகார் – கானா இசையமைப்பாளர் கைது!!

ஆபாச படத்தை வெளியிடுவேன் என கானா பாடல் பாடியே, காதலியை மிரட்டிய கானா இசையமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தானும், தன் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு கானா பாடல்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் தனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் … Read more

சி.பி.எஸ்.இ, சி.ஐ.எஸ்.இ-யின் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை-15 வெளியாக வாய்ப்பு.!

சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ வாரிய 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 2021-22ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தேர்வுகளை இரண்டு பருவங்களாக பிரித்து சி.பி.எஸ்.இ மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ நடத்தியது. தமிழகம் உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ‘சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.  Source link

இந்திய ரயில்வே மகுடத்தின் மாணிக்கம் ராயபுரம் ரயில் நிலையம்: ஜூன் 28-ல் 166 ஆண்டுகளை நிறைவு செய்தது

சென்னை: இந்தியாவின் பழமையான ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம் நேற்று முன்தினம் (ஜூன் 28) 166 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையம், இந்திய ரயில்வேயின் மகுடத்தில் ஒரு மாணிக்கமாகத் தொடரும் என்று தெற்கு ரயில்வே புகழாராம் சூட்டியுள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை புறநகர் வலையமைப்பில் ராயபுரம் ரயில் நிலையம் முக்கிய நிலையமாகும். இது, இந்தியாவில் தற்போது இயங்கி வரும் பழமையான ரயில் நிலையமாகும். சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை-அரக்கோணம் மார்க்கத்தில் இந்நிலையம் அமைந்துள்ளது. இங்கு … Read more

வளர்ப்பு கிளியை காணவில்லை.. போஸ்டர் ஓட்டி தேடும் பாசக்கார குடும்பம்..!

காணமால் போன பச்சைகிளியை போஸ்டர் ஒட்டி தேடி வருகின்றனர். மதுரை தெற்கு வெளியை சேர்ந்தவர் சுப்புராமன். இவரின் வீட்டில் கடந்த  சில மாதங்களாக வெல்வெட் என்ற பச்சைகிளியை வளர்த்து வருகின்றனர். அந்த கிளியை குடும்பத்தினர் மிகவும் பிரியமாக வளர்ந்து வந்தனர். கடந்த 20-ந் தேதி வீட்டின் கதவு திறந்து இருந்ததால் கிளி அங்கிருந்து வெளியே பறந்து சென்றுவிட்டது. கிளி மாயமானதால் சுப்புராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.  கிளியை காணவில்லை என மதுரை மாநகர் முழுவதும் கிளியின் … Read more

எம்பிசி வகுப்பில் மூன்றாம் பாலினத்தவர்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!

மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய போதும், அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும், இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது … Read more

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 5 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில … Read more

சமூகநலத் துறை சார்பில் குழந்தைகள் நலனுக்கான 3 புதிய திட்டங்கள் தொடக்கம் – ரூ.7.32 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு

சென்னை: சமூகநலத் துறை சார்பில் குழந்தைகளின் வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் தொடர்பாக ரூ.7.32 கோடியில் 3 திட்டங்களை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைகள் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி, ஊட்டச்சத்து, சுகாதாரம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், சமூகநலத் துறை அமைச்சர் இந்த ஆண்டுக்கான துறையின் மானிய கோரிக்கையை தாக்கல் செய்து அறிவிப்புகள் வெளியிட்டார். அதில், … Read more