10 ஆம் வகுப்பு படித்து இருந்தால் போதும்… இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது.! 

வடகிழக்கு எல்லை ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்புப் பிரிவின் மூலம் அப்ரண்டிஸ் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த பதவிக்கு 5636 திறந்த நிலைகள் உள்ளன. வயது வரம்பு :  ஏப்ரல் 1, 2022 இன் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 15 ஆக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் 24 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. SC/ST விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் குறைக்கப்படலாம், மேலும் OBC விண்ணப்பதாரர்களுக்கு, அது குறைக்கப்படலாம். கல்வி : விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்வில் … Read more

டெபாசிட் செய்யும் எந்திரத்திற்குள் பவுடர், தண்ணீரை ஊற்றிச் சென்ற விஷமி..

திருவள்ளூர் மாவட்டத்தில், ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் டெபாசிட் செய்யும் எந்திரத்திற்குள் பவுடரையும், தண்ணீரையும் ஊற்றிச் சென்ற விஷமியை போலீசார் தேடி வருகின்றனர். திருவாலங்காட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த பணம் டெபாசிட் செய்யும் எந்திரம் திடீரென பழுதடைந்தது. ஊழியர்கள் அந்த எந்திரத்தை திறந்து பார்த்த போது உள்ளே தண்ணீரும், பவுடரும் இருந்துள்ளது. எடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காலை 10:30 மணியளவில் வந்த மர்ம நபர் ஒருவர் … Read more

இஸ்லாமியர்கள் நலனுக்கு எனக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக வழக்கு: என்ஐஏ, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: ரமலான் பண்டிகைக்காக பணம் வசூலிக்கப்பட்டு, அதை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில் என்ஐஏ, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த ஜகுஃபர் சாதிக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்காக உதவுவது உள்ளிட்ட நலப்பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி சென்னையில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகையின்போது அதிகளவில் வசூலிக்கப்பட்டது. ரம்ஜான் முடிந்த பின்னரும் பணம் வசூலிக்கப்பட்டு சட்டவிரோத … Read more

வீடியோ எடுத்து மிரட்டியதாக பெண் பாலியல் புகார் – சென்னை கானா பாடல் இளம் இசையமைப்பாளர் கைது

ஆபாச படத்தை வெளியிடுவேன் என கானா பாடல் பாடியே, காதலியை மிரட்டிய கானா இசையமைப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்று வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சபேஷ் சாலமன் என்ற கானா பாடல் இசையமைப்பாளர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடன் பலமுறை தனியாக இருந்ததாகவும், பின்னர் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யூ-டியூப்பில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார். மேலும் சபேஷின் … Read more

தமிழ்ப் பிராமி எழுத்தில் திருக்குறள்; சாதனை படைத்த முனைவர் சைவ சற்குணம்; குவியும் பாராட்டுகள்

க.சண்முகவடிவேல், திருச்சி தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட ஒலிப்பியல் ஓர் எழுத்து முறைமையும், இது தமிழ் மொழிக்கு முன்னோடி எழுத்து முறைமையும் ஆகும். இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்து முறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்து முறைகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய முறைமையாகும். தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் … Read more

விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு.. சோகத்தில் குடும்பத்தினர்.!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த, நிலையில் சேதுராகுப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு தங்கராசு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது பம்புசெட்டில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த தங்கராஜ் … Read more

“மேயர் அங்கியுடன் உதயநிதியின் காலில் விழுவதுதான் திராவிட மாடலா?” – ஆர்.பி.உதயகுமார் சாடல்

மதுரை: ”மேயர் அங்கியை அணிந்துகொண்டு சுயமரியாதையைக் காற்றில் பறக்கவிட்டு உதயநிதியின் காலில் விழுவதுதான் திராவிட மாடலா?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் கூறியது: ”திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதிமுக உள்ளது. ஜெயலலிதா காலத்தில் தேசிய அளவில் அதிமுகவை மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கினார். எங்களை வழிநடத்திச் சென்ற ஜெயலலிதா காலில் விழுவதை கேலி செய்தும், நையாண்டி செய்தனர். ஆனால், இன்றைக்கு திமுகவின் தன்மானம், சுயமரியாதை எங்கே போனது? தஞ்சையில் … Read more

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்குக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-2006 ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை, கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..!

மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, முகப்பேரு பகுதியில் உள்ள பள்ளியில் அங்குள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் வேதியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவர் அந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக  அவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் பெயரில் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் … Read more

ஒ.பி.எஸ் தான் தலைமை… இ.பி.எஸ் விட்டுக் கொடுக்கணும்… ஜூனியர் எம்.ஜி.ஆர் பேட்டி

அதிமுகவில கடந்த 2 வாரங்களாக ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், கட்சியில் ஒற்றை தலைமை என்பதை தவிர்க்க வேண்டும். அப்படியே ஒற்றை தலைமை அவசியம் என்றால் அதில் ஒபிஎஸ்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று ஜூனியர் எம்.ஜி.ஆர். என அழைக்கப்படும் எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்சியின் முக்கிய … Read more