வாகனச் சோதனையில் பறித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வல்லம் சிறப்பு எஸ்.ஐ: ‘கண்டுக்காம’ காப்பாற்றும் உயர் அதிகாரிகள்!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாகன சோதனையின்போது தேங்காய் வியாபாரியிடம் பறித்த ரூ.46,300ஐ தனது உறவினர் ஒருவர் மூலம் திருப்பி கொடுத்துள்ளார் குற்றஞ்சாட்டப்பட்ட வல்லம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன். தனக்கு எதிராக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவை வாபஸ் வாங்குமாறு தேங்காய் வியாபாரியை தனது நெருங்கிய உறவினர் மூலம் சிறப்பு எஸ்ஐ பாண்டியன் நிர்பந்தம் செய்து  வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே குற்றச்சாட்டுக்குள்ளான சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். … Read more

வெளியான செய்தி.., இதெல்லாம் ஏற்புடையதல்ல… டிடிவி தினகரன் பரபரப்பு டிவிட்.!

அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்து உள்ளது. அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கக் கூடாது என்று, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், “ஜிஎஸ்டி கவுன்சில் … Read more

ஓபிஎஸ் பெயர் நீக்கம்.. ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு.. மருது அழகுராஜ் விலகல் !!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா உயிரிழந்த பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு நமது எம்ஜிஆர் நாளிதழ் சென்றது. இந்நிலையில், சித்திரகுப்தன் எனும் புனைபெயரில் “காவி அடி, கழகத்தை அழி” என்ற கவிதையை மருது அழகுராஜ் நமது எம்ஜிஆர் நாளிதழில் எழுதியிருந்தார். காவி என குறிப்பிட்டு எழுதியதால் பாஜகவை விமர்சித்தாரா என்ற குரல் எழுந்தது. இதையடுத்து, அவர் நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், ஓபிஎஸ்- எடப்பாடி … Read more

இறுதி சடங்குக்கு வந்தபோது கைவரிசை… சொந்த பெரியப்பா வீட்டில் 48 சவரன் நகைகளை திருடிய இளம்பெண் கைது..!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சொந்த பெரியப்பா வீட்டில் 48 சவரன் நகைகளை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கருப்பையா என்பவரின் மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் இறுதி சடங்குகளுக்கு பின் வீட்டில் இருந்த 48 சவரன் நகைகள் மாயமானது. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், இறுதி சடங்குகளுக்கு வந்த குடும்ப உறுப்பினர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். அதில், கருப்பையாவின் தம்பி மகள் கெளசல்யா, பீரோவில் … Read more

திருப்பத்தூர் | புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பத் தூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி யில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.109 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கவுள் ளார். இதனை … Read more

'கழகத்தை காத்திட கட்சி அலுவலகம் வருக'- சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

‘கழகத்தை காத்திட, எங்களை வழிநடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக’ என சசிகலாவை வரவேற்று அதிமுக தலைமைக் கழகம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் யார் தலைமை என உட்கட்சி பிரச்னை உச்சத்தில் இருந்து வருகிறது. ஏற்கெனவே ஒ.பி.எஸ், இ.பி.எஸ் அணி யுத்தத்தில் இருக்கும் நிலையில், தொண்டர்களை சந்திக்க சசிகலா சுற்றுப் பயணம் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில், ‘அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரம், கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே, கழகத்தை காத்திட எங்களை … Read more

IND vs ENG Test: ‘எதிரி யாராக இருந்தாலும் எங்க வியூகம் இதுதான்’- பென் ஸ்டோக்ஸ்

IND vs ENG 5th Test Tamil News: 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, ​​சேட்டேஷ்வர் புஜாரா நான்கு டெஸ்டில் 1,258 பந்துகளை எதிர்கொண்டு 521 ரன்களை எடுத்தார். மேலும், இந்தியாவின் முதல் தொடர் வெற்றிக்கு அடிக்கல் நட்டவராகவும் இருந்தார். அவர் தனது வளைந்து கொடுக்காத பேட்டிங்கின் மூலம் ஷுப்மான் கில் போன்ற புதிய வயது கிரிக்கெட் வீரரைக் கூட வீழ்த்தினார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் ரிஷப் பண்ட், தீவிர … Read more

#BREAKING || MBC பிரிவில் இவர்களுக்கும் இனி இட ஒதுக்கீடு.! அரசாணை பிறப்பித்த தமிழக அரசு.!

மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாணையை தாக்கல் செய்தது தமிழக அரசு.  மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநங்கைகள் சார்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் … Read more

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்.!

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகையைச் சேர்ந்த நெடுமாறனுக்கு டயாலிசிஸ் சிகிச்சையும், பாம்பு கடித்த இடத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாலையில் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெடுமாறன் உயிரிழந்தார். பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு தவறாக சிகிச்சை அளித்ததாலேயே நெடுமாறன் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி அவரது தங்கை வீடியோ வெளியிட்டார். இது குறித்து விளக்கமளித்த … Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது. தொழில்நுட்பமும், நாகரிகமும் அதிகரித்துவிட்ட நிலையில் குக்கிராமங்களில் கூட … Read more