கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவச்" ஒத்திகை! கடலோரங்களில் பரபரப்பு

“சாகர் கவச்” பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடல்மார்க்கமாக நாட்டிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் வகையிலும், நாட்டின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையிலும் “சாகர் கவச்” (கடல் கவசம்) என்ற தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 48 மணி நேர ஒத்திகை இன்று காலை 8 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு ஒத்திகை … Read more

நீதிமன்றம் தலையிட எதுவும் இல்லை – சுப்ரீம் கோர்ட்டில் இ.பி.எஸ் தரப்பு அப்பீல்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரிய பரபர்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த 23-ந் தேதி வானகரத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதி என்பது போல் தகவல் வெளியானது. இதனால் கட்சியில் இருந்து ஒபிஎஸ் ஓரம்கட்டப்படுவது ஏறக்குறைய உறுதியாகவிட்டதாக கூறப்பட்டது இந்நிலையில். … Read more

#BigBreaking: கொரோனாவுக்கு பலியானார் நடிகை மீனாவின் கணவர்.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வருகின்றது. மேலும், கொரோனாவின் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில், பிரபல தென்னிந்திய நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்.  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் … Read more

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர பிற தீர்மானங்களை, நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

கையில் வேலுடன் இபிஎஸ்… ‘சூரசம்ஹாரம் ஸ்டார்ட்’ – சேலத்தில் கவனம் ஈர்க்கும் போஸ்டர்கள்

சேலம்: சூரசம்ஹாரம் ஆரம்பமாகிவிட்டதாக கையில் வேலுடன் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்ள போஸ்டரை சேலத்தில் அதிமுக தொண்டர்கள் ஒட்டியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன் வைத்து முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஆதரவாக பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனிடையே அதிமுகவில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு … Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கோனாப்பட்டு அடுத்த வேங்கடத்தான் வட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் விஜயன். தற்போது அந்த பள்ளியில் 9 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆசிரியர் விஜயன், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்குச் சென்ற மாணவி, ஆசிரியர் … Read more

மாதவன் கெட்டப்பை பார்த்து அசந்துபோன சூர்யா – வைரல் வீடியோ

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ராக்கெட்ரி தி நம்பி வளைவு என்ற படத்தில் நடிகர் சூர்ய கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழக்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் ராக்கெட்ரி தி நம்பி வளைவு. நடிகா மாதவன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணன் கேரக்டரில் அவரே நடித்துள்ளார். அவரது … Read more

தன்னை சந்திக்க வந்த செங்கோட்டையனை திருப்பி அனுப்பிய எடப்பாடி பழனிசாமி..

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மனைவிக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள வீட்டில் பழனிசாமி தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பழனிசாமியின் இல்லத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவரை சந்திக்காமல் திரும்பிச் சென்றனர். Source link

அதிமுக பொதுக்குழு | சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

சென்னை: நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே அவமதித்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, … Read more

முதுகுளத்தூர்: ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ஆர்பாட்டத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு

முதுகுளத்தூரில் இபிஎஸ் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினருக்கு இடையிலான யுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதாக கூறி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தென் மாவட்டங்களின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ்க்கு எதிராக கோசங்களை எழுப்பி இபிஎஸ் உருவ பொம்மையை தீ … Read more