நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்த டெய்லர் கொலை: ராஜஸ்தானில் பதற்றம்

முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கட்சியில் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்த நுபர் சர்மா என்பவர் சமீபத்தில் இஸ்லாமியர் புனிதரான முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியது பலரின் எதிர்ப்புகளுக்கு உள்ளாகியது. இவருக்கு நாடு முழுவழும் பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து அவர் பாஜகவில் இருந்து … Read more

#BigBreaking || உதய்பூரில் டெய்லரின் தலையை துண்டித்து கொலை செய்த இஸ்லாமிய இளைஞர்கள் கைது.., கொலை செய்த கத்தியுடன் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.!

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பதிவைப் பகிர்ந்ததால், உதய்பூரில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டார்; பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வீடியோவை தாக்குபவர்கள் வெளியிட்டுள்ளனர் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் மால்தாஸ் தெரு பகுதியில் இன்று கன்னையா என்ற நபர் இருவரால் தலை துண்டித்து கொலைசெய்யப்பட்டார். அவர் சில நாட்களுக்கு முன்பு நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஒரு சமூக ஊடக பதிவு ஒன்றையும் பகிந்துள்ளார்.  கொலையாளிகள் இருவரும் தலை துண்டிக்கப்பட்டதை பெருமைப்படுத்தும் வீடியோவை ஒன்றை வெளியிட்டு, பிரதமர் மோடியின் உயிருக்கும் … Read more

பொது நிகழ்ச்சிகளை நடத்த அரசு தடை எதுவும் விதிக்கவில்லை: மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு தடை எதுவும் விதிக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முகக்கவசம் அணியதாவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டம் ஜூலை 11-ம் தேதி … Read more

முடிவு எழுதிய ரயில் பயணம்.. தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆவடி அருகே தனியார் கல்லூரி மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரிப்பால நரேஷ். இவர் ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த அவர், தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்குச் செல்ல இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் மின்சார புறநகர் ரயிலில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது … Read more

படப் பிடிப்புக்கு நடுவே இங்கிலாந்து பறந்த அஜித்… காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் அஜித். தொடர்ந்து ஒரே இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பதில் பெயர் பெற்ற அஜித், ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் 4 படங்களில் தொடர்ச்சியாக நடித்து வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்தில் இயக்குநர் எச.வினோத்துடன் இணைந்த அஜித் தொடர்ந்து வலிமை படத்திலும் அவருடன் பணியாற்றினார் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது 3-வது முறையாக அஜித் எச்.வினோத் கூட்டணி இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் … Read more

திருநெல்வேலி.! மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி.!

திருநெல்வேலி மாவட்டத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் சேந்திமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த உச்சிமுத்து என்பவரின் மகன் கணேசன்(25). இவர் உடையார்பட்டியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த கணேசன் மொட்டை மாடியில் படுத்து உறங்கி உள்ளார். இதையடுத்து இன்று அதிகாலை எழுந்த கணேசன் தூக்கக்கலக்கத்தில் நிலைதடுமாறி மொட்டை மாடியில் … Read more

தொட்டபெட்டாவில் 50 அடி பள்ளத்திற்குள் விழுந்த காரில் சிக்கிக்கொண்ட 6 பேர்…

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில், 50 அடி பள்ளத்திற்குள் விழுந்த காரில் சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகள் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த 6 பேர் தொட்டபெட்டா வியூ பாயிண்ட்-டில் இருந்து உதகைக்கு வாடகை காரில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. காருக்குள் இருந்த சுற்றுலா பயணிகளை அவ்வழியாக சென்றவர்கள் கீழே இறங்கி மீட்டனர். லேசான காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி சிகிச்சை … Read more

திமுகவின் கதை என்பது சாமானியர்களின் கதை: மு.க.ஸ்டாலின்

சென்னை: “திமுகவின் கதை என்பது சாமானியர்களின் கதை” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949 – 1967” என்ற ஆங்கில நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ் மற்றும் ஐசிஏஎஸ்எம்பி இணைந்து பதிப்பித்துள்ள “Rule of the Commoner: DMK and the … Read more

‘அவனுக்கு 10 வயசு அதிகம்’.. போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி.. புகார் கொடுத்த பெற்றோர்

ஓமலூர் அருகே ஒரு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காதலனை விட 10 வயது குறைவான பெண்ணை ஏமாற்றியதாகக் கூறி பெண்ணின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுக்காவில் கணவாய்புதூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், பட்டப்படிப்பு முடித்துவிட்டு திருப்பூர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதேபோன்று ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தென்றல். இவர் தருமபுரி பகுதியில் உள்ள … Read more

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது: சென்னை ஐகோர்ட் அதிருப்தி

Chennai high Court Tamil News: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சீனிவாசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் … Read more