இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் புகுந்த நல்ல பாம்பு… லாவமாகப் பிடித்த தீயணைப்பு வீரர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பு உயிருடன் பிடிபட்டது. திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலரான தினேஷ்குமார், வழக்கம் போல் அவரது இருசக்கர வாகனத்தில் அலுவலகம் வந்துக்கொண்டிருந்தார். அப்போது  வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டதால் வண்டியை நிறுத்தி பார்த்தபோது அதில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி வாகனத்தின் முன்பகுதியில் இருந்த பாம்பை லாகவமாக உயிருடன் பிடித்து … Read more

ஜெயக்குமார் மீது ராயபுரம் போலீஸ் பதிவு செய்த வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்ட முயன்றதாக காவல்துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டார். 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் … Read more

தாராபுரம்: முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் மீது பண மோசடி வழக்குப்பதிவு

பண மோசடி தொடர்பாக மூலனூர் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாராபுரம் அருகே, 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், மூலனூர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகரை தேடி வருகின்றனர். திருப்பூர் … Read more

ரஜினியை கவர்ந்த இழுந்த ‘சாருகேசி’ – நாடக குழுவுக்கு விருந்து வைத்து நெகிழ்ச்சி

நடிகரும் நாடக கலைஞருமான ஒய்.ஜி.மகேந்திரனின் சாருகேசி என்ற நாடகத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நாடக குழுவினருக்கு தனது இல்லத்தில் விருந்து அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் தமிழ் நாடகக் குழுவான ஒய்.ஜி.மகேந்திரனின் தலைமையில் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்டின் (யுஏஏ) ‘சாருகேசி’ நாடகத்தை பார்த்துள்ளார். இந்த நாடகத்தால் ஈர்க்கப்பட்ட ரஜினிகாந்த் நாடக குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது நடிகர், ​​ரஜினிகாந்த் ‘சாருகேசி’ … Read more

திருவண்ணாமலை.! விஷம் குடித்து பெண் தற்கொலை.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் படவேடு வேடக்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி விஜயலட்சுமி(30). இவர் நேற்றிரவு விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு விஜயலட்சுமியை சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சந்தவாசல் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து, … Read more

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?

வேலூர் மாநகராட்சியில் இரவோடு இரவாக சாலைக்கு காங்கிரீட் கலவையை கொட்டிச் சென்ற ஒப்பந்த பணியாளர்கள்,  கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனத்தையும் சேர்த்து சாலைபோட்டுச்சென்ற  சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். காளிகாம்பாள் கோவில் தெருவில் வசித்து வரும் சிவா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது. வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் சேர்த்தும் … Read more

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் முகக்கவசம் அணியாத மன்ற உறுப்பினர்கள்

சென்னை: கரோனாவை காரணம் காட்டி விரைந்து முடிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், பெரும்பாலான கவுன்சிலர்கள் முகக்கவசம் அணியாமல் அமர்ந்திருந்தனர். சென்னை மாநகராட்சியின், மாதந்திர மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் இன்று காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில், மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில், 17 பேருக்கு கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்பட்டது. கேள்வி நேரம் முடிந்து, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய திமுகவைச் சேர்ந்த கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர், ‘‘இந்த கூட்டத்தில், … Read more

பழைய இரும்பு கடை ஊழியர் மீது தாக்குதல் – சிசிடிவி காட்சியால் சிக்கிய திமுக பிரமுகர்

சென்னையில் உள்ள பழைய இரும்பு கடையில் புகுந்து ஊழியர் மற்றும் உரிமையாளரை தாக்கிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பரணிபுத்தூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அண்ணாநகரில் பழைய இரும்பு கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 26-ம் தேதி திமுக பிரமுகரான பிரவீன் குமார் என்பவர் வந்து, தனது கலவை இயந்திரத்தை பழைய இரும்புக்கு தெரியாமல் போடப்பட்டதாகக்கூறி அதனை தேடியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்படவே அதனை தடுக்க வந்த கடை … Read more

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சின்னகவுண்டனூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் கார்த்திக்(24). இவர் நேற்று இரவு கரூரில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளைபாறை பகுதி அருகே எதிரே வந்த சரக்கு வேன் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். … Read more

சல்மான் கானுக்கு ‘ஹார்ட் எமோஜி’ பறக்க விட்ட சமந்தா: காரணம் இதுதான்!

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றீயா மாமா பாடல் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் புஷ்பா. செம்மர கட்டை கடத்தலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தில் சமந்தாவின் அசத்தலான நடனத்தில் … Read more