கார் மோதியதில் பைக்கில் சென்ற காவலர் 4வயது மகனுடன் பரிதாபமாக பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கார் மோதியதில் பைக்கில்  சென்ற காவலர் மற்றும் அவரது 4வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.  வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மார்சல் என்பவர் காடல்குடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் ஜவுளி எடுத்துவிட்டு வீடு திரும்பும் போது எட்டயபுரம் சாலையில் அவரது பைக் மீது வேகமாக வந்த கார் பலமாக மோதியது. இதில் தந்தை, மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மனைவி மற்றும் … Read more

கோவை மாநகர காவல் உளவுத்துறை உதவி ஆணையர் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம்

கோவை: கோவை மாநகர காவல்துறையின் உளவுத்துறை உதவி ஆணையர் பணியாற்றி வந்த முருகவேல், கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல்துறை நிர்வாகம், மாநகர காவல் ஆணையர் தலைமையில் இயங்குகிறது. மாநகர காவல்துறையில் முக்கியப் பிரிவுகளில் ஒன்றாக நுண்ணறிவுப் பிரிவு (உளவுத்துறை) உள்ளது. உதவி ஆணையர் தலைமையில் இப்பிரிவு செயல்படுகிறது. உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 35-க்கும் மேற்பட்டோர் இப்பிரிவில் … Read more

Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

நேற்று தமிழக முதலமைச்சரிடம் இணையதள விளையாட்டுகளை தடை செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கொடுத்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த 71 பக்க அறிக்கையில் ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுகிறது என சொல்லப்படுவது தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பிற முக்கிய விவரங்கள்: “கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளனர். பொதுமக்களின் உடல் நலம் இந்த விளையாட்டுக்களால் … Read more

சென்னையில் இந்த பகுதிகளில் இன்று (ஜூன்:28) மின்வெட்டு!

சென்னையில் பராமரிப்பு பணிக்காக சேப்பாக்கம், போரூர், மயிலாப்பூர், கொட்டிவாக்கம், கே.கே.நகர், கிண்டி, பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம்: டி.எச்.ரோடு, பெல்ஸ் ரோடு, பெரிய தெரு, சிஎன்கே ரோடு, ஐயாப்பிள்ளை … Read more

பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த பரபரப்பு..!

இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு – காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்றுகொன்டிருந்தார்.  அப்போது அங்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த சரவணம் என்பவர் நண்பர்களுடன் வந்துள்ளார். அவர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயாமாக மது அருந்த வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த … Read more

பூமிக்கடியில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திருப்பம் – தந்தை, மகன் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாக்கம்புதூரில் தலையில் பலத்த காயங்களுடன் பூமிக்கடியில் இருந்து பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல்களை ஆராய்ந்த 3 தனிப்படை போலீசார், வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் வீராசாமி, அவரது மகன் விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் உயிரிழந்தது அதே ஊரைச் ஆண்டாள் என்றும், மகளை வெளிநாடு அனுப்ப … Read more

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தபோது தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கி விழுந்த முதியவர்கள்

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 2 முதியவர்கள் தனுஷ்கோடி கோதண்டராமர் கடற்கரை பகுதியில் மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரமாக, மார்ச் 22 முதல் இதுவரை 90 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் கடற்கரையில் இலங்கையைச் சேர்ந்த 2 முதியவர்கள் … Read more

ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படவில்லை.. புதிய சட்டம் கொண்டுவர பரிந்துரை.!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம் தொடர்பாக, ஒய்வு பெற்ற சென்னை தலைமை நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரங்களை ஆராயவேண்டும். ஆன்லைனில் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் ஆன்லைன் கட்டணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்கான அம்சங்கள் பற்றி பரிந்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் … Read more

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் படிப்புக்கான ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியது. இதுதொடர்பாக, துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் கோவை, மதுரை, மேட்டுப்பாளையம், திருச்சி, தேனி, கிள்ளிக்குளம் உள்ளிட்ட 8 கல்லூரிகளில் 32 துறைகளில் எம்.எஸ்.சி. முதுநிலை பட்டப்படிப்பும், 28 துறைகளில் முனைவர் (பி.ஹெச்டி) பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகின்றன. இரண்டாண்டுகளை கொண்டமுதுநிலை பட்டப் படிப்பில் 400இடங்களும், மூன்றாண்டுகளை கொண்ட முனைவர் பட்டப்படிப்பில் 200 இடங்களும் உள்ளன. … Read more

Tamil News Live Update: இலங்கையில் எரிபொருள் நெருக்கடி.. அத்தியாவசிய சேவைகள் இயங்காது என அறிவிப்பு!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்! அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு … Read more