உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் கேவியட் மனு: ‘எனது கருத்தை கேட்காமல் முடிவு எடுக்கக் கூடாது’

அதிமுகவில் கடந்த வாரம் தொடக்கத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து கட்சியில் ஒறறை தலைமை யார் என்பதில் இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசைனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை தீவிரமடைந்து வந்த நிலையில். பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி கட்சி பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி ஒபிஎஸ் இபிஎஸ்க்கு கடிதம் எழுதினார். … Read more

அதிமுகவில் வெடிக்கும் பூகம்பம்.. முக்கிய முடிவை அறிவிக்க போகும் எடப்பாடி பழனிசாமி.?

அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 65 தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டு, புதிய பொருளாளராக கேபி … Read more

இளம்பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது.!

செங்கல்பட்டு அருகே இளம்பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கூட்டாளிகளை தேடி வருகின்றனர். ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த 25-ந்தேதி செங்கல்பட்டு-காஞ்சிபுரம் பைபாஸ் சாலை பேருந்து நிலையத்தில் வேலூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆத்தூரைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவனது நண்பர்கள் சேர்ந்து, அப்பெண்ணை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவில், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர்த்து புதிதாக வேறு தீர்மானம் நிறைவேற்றவோ, கட்சி விதிகளில் திருத்தம் செய்யவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 23-ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரதுசார்பில் வழக்கறிஞர் கவுதம் சிவசங்கர் தாக்கல் செய்த மனுவில், … Read more

சாதம் வடித்த கஞ்சியுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து… இவ்வளவு நன்மை இருக்கு!

அரிசியை நாம் வேக வைக்கும் முன்பாக பல முறை தண்ணீரில் கழுவ வேண்டாம். ஒரு முறை கழுவினால் போதும். அப்படி இரண்டாவது முறை கழுவினால் அந்த தண்ணீரை வீணாக்காமல் எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொள்வோம். இரண்டாம் முறை அரிசி கழுவிய தண்ணீரில் அதிக சத்துக்கள் உள்ளதால் வீட்டில் உள்ள செடிகளுக்கு நாம் பயன்படுத்தலாம். இதுபோல சாதம் வடித்த தண்ணீரில் அதிக ஊட்டசத்து உள்ளது. இதில் உப்பு போட்டு குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது. உடலில் நீரின் அளவு குறையும் … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை.!!

மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் … Read more

சென்னையில் மின்சார பைக்குகள் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ.!

பெங்களூருவிலிருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் எதிரே வந்த போது லாரியின் முன்புறத்தில் இருந்து திடீரென புகை வந்து தீப்பிடித்தது. தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்த நிலையில், வாகனத்தில் பின்பகுதியில் தீ பரவுவதற்குள் கட்டுபடுத்தியதால் லாரியிலிருந்த 18 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது. … Read more

அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

சென்னை: ராணுவ ஆள்சேர்ப்புக்கான ‘அக்னிபாதை’ திட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருத்தாசலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். இந்திய ராணுவத்தில் 4 ஆண்டு சேவைக்கான ‘அக்னி பாதை’திட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ‘‘வலிமையும், வீரமும் மிகுந்த பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டது இந்தியராணுவம். அதன் வலிமையை ஆங்கிலேயர் … Read more

நள்ளிரவில் சென்னையை குளிர்வித்த மழை… தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்த நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. அண்ணாநகர், வடபழனி, கோயம்பேடு, சாலிகிராமம், அசோக் நகர், வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், போரூர், மதுரவாயல், முகப்பேர் மற்றும் புறநகரிலும் மழை பெய்தது. பகல் முழுவதும் வெயில் வாட்டிய நிலையில், இரவில் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை தொடரக்கூடும் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் முக கவசம் கட்டாயம்.. 500 ரூபாய் அபராதம்.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முககவசம் கட்டாயம் என்ற ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு … Read more