65 வயது நடிகருக்கு ஜோடியாக மீனா: அவரே வெளியிட்ட போட்டோ

90-களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த மீனா 32 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு நடிகருடன் ஜோடி சேர உள்ளார். தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை மீனா. 1985-ம் ஆண்டு சிவாஜி கனேசன் நடிப்பல் வெளியான நெஞ்சங்கள் படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகனமான இவர், 1990-ம் ஆண்டு வெளியான நவயுகம் படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்தார். தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி … Read more

நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள மகளை காப்பாற்றுங்கள்.. தந்தை புகார்..!

நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள மகளை மீட்டு தர கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ நாகேஷ். இவருக்கு மாலா என்ற மனைவியும் வர்தினி  என்ற மகளும் உள்ளனர். ஸ்ரீ நாகேஷும் மாலாவும் நித்யானந்தரின் சீடர்களானவர். இவர்கள் அனைவரும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நித்யானந்த ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார்.  இந்நிலையில், தற்போது அவரது மகளை அங்குள்ள நிர்வாகிகள் தொடர்பு கொள்ள விடவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் … Read more

“அரசு பணத்தில் ராணுவப் பயிற்சி அளித்து இளைஞர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ப்பதே மறைமுக நோக்கம்” – நாராயணசாமி

புதுச்சேரி: அரசு பணத்தில் ராணுவப் பயிற்சி அளித்து, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இளைஞர்களை கொண்டு வருவதே மத்திய பாஜக அரசின் மறைமுக நோக்கமாக உள்ளது என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசின் அக்னி பாதை திட்டத்தை கண்டித்து சத்தியாகிரகப் போராட்டம் (காலையில் 3 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம்) 16 இடங்களில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா … Read more

பிரபல குணச்சித்திர நடிகர் ” பூ” ராமு மரணம் : திரைத்துறையினர் இரங்கல்

சசி இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பூ படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகமானவர் ராமு. அந்த படத்தின் மூலம் பெரிய பிரபலமான இவர், பூ ராம் என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சுரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூ ராமு இன்று சிகிச்சை … Read more

அரசு உண்டு உறைவிடப்பள்ளி இரவு காவலரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை.!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுகோணாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் நொச்சிகுட்டை அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 45). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.  இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி விஷம் குடித்து விட்டு … Read more

பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக பணம் ஈட்டலாம் எனக்கூறி 484 பேரிடம் ரூ.2 கோடி அளவில் மோசடி.!

மதுரையில் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக பணம் ஈட்டலாம் எனக்கூறி 484 பேரிடம் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. அனுராதா என்பவரிடம் ஐஸ்வர்யா என்பவர் பிட் காயினில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக ஈட்டலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதனை நம்பிய அவர் முதலீடு செய்த நிலையில், துவக்கத்தில் அதற்குரிய பணத்தை இருதயராஜ் என்பவர் வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அனுராதா தனக்கு தெரிந்தவர்களிடம் கூறிய நிலையில், 2 ஆண்டுகளில் பலர் அதில் … Read more

“பறிகொடுத்த மாநில உரிமைகளை  மீட்டெடுக்கவே பணியாற்றுகிறோம்” – ஆளுநர் தமிழிசை பேச்சு

புதுச்சேரி: ஆளுநராக எப்போதும் தனியாக சுயநலமாக செயல்படவில்லை, அதிகாரத்தை கையில் எடுக்கவில்லை. இணைந்து பணியாற்றுவதில் தான் விருப்பம். சில பிரச்சினைகளால் பறிகொடுத்த புதுவையின் மாநில உரிமைகளை மீட்டு எடுக்கவே பணியாற்றுகிறோம் என்று என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ரங்கசாமி முதல்வராக மே 7-ம் தேதி பதவியேற்றார். அதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அமைச்சரவை அமைக்கப்படாமல் இருந்தது. இறுதியில் ஒரு சுமூக உடன்பாடு … Read more

திடீரென தீப்பற்றி எரிந்த கோரைப்புற்கள்.. புகை மூட்டத்தால் சூழ்ந்த திருவாரூர் நகரம்

திருவாரூர் ரயில் நிலையம் அருகே வயல்களில் உள்ள கோரைகள், வெட்டிப் போடப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் தீபிடித்து எரிந்ததால் நகர்புறம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. திருவாரூர் ரயில் நிலையம் அருகே உள்ள வயல்களில் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி செய்யாததால், அதில் கோரை புற்கள் வளர்ந்திருந்தன. இந்நிலையில், அந்த கோரை புற்கள் மற்றும் வெட்டி போடப்பட்ட சீமை கருவேல மரங்கள்  திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காற்று அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவியது. இதனால் ஏற்பட்ட … Read more

காலையில் கிழிக்கப்பட்ட ஒபிஎஸ் பேனர்… உடனடியாக சரி செய்த தொண்டர்கள்

அதிமுகவில் கடந்த 2 வாரமாக ஒற்றை தலைமை யார் என்பதில் இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில். இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கபட்டிருந்த ஒபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் கடந்த வாரம் தொடக்கத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து கட்சியில் ஒறறை தலைமை யார் என்பதில் இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. … Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சூப்பர் ரெசிபி…!

காலையில் வித்யாசமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அவர்களுக்காக பீட்ரூட் இட்லி செய்து கொடுங்கள். தேவையானவை: வறுத்த ரவை – 2 கப்தயிர் – 1 கப்பீட்ரூட் – 1தண்ணீர் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவு மாவு தயாரிக்க: வறுத்த ரவை, தயிர் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.  தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி மிருதுவான மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.  இந்த கலவையை சிறிது நேரம் … Read more