மரம் விழுந்து பெண் பலி | முறைமன்ற நடுவம் அறிவுரை, அமைச்சர் உத்தரவை அலட்சியப்படுத்தியதா சென்னை மாநகராட்சி?

சென்னை: மரக்கிளைகளை அகற்றுவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு முறைமன்ற நடுவம் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் உத்தரவுகளை சென்னை மாநகராட்சி அலட்சியப்படுத்தியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை கேகே நகரில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார். மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது, அதில் மண் சரிவு ஏற்பட்டு, மரம் சாய்ந்து, காரில் விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக … Read more

முக்குலத்தோர் சமுதாயத்திற்கு ஒரு நன்மையும் செய்யாதவர் ஓ.பி.எஸ்: திருச்சி குமார் பேட்டி

ADMK Pa Kumar says OPS not doing anything to Mukkulathor community: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற அதேவேளையில், திருச்சியில் இ.பி.எஸ் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் தமது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சுயநலத்திற்காக சாதியை பயன்படுத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று கூறினார். “ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக சாதியை ஒரு … Read more

இவர்களுக்கெல்லாம் 1000 ரூபாய் கிடையாது – தகுதியை வெளியிட்ட தமிழக அரசு.! 

அரசு பள்ளியில் படித்த மாணவியருக்கான ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2022-2023ம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதி : 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார்ப் பள்ளியில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை … Read more

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் வசூலிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை!

போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10 மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளை மீறுவோருக்கு அபராதத்தொகை 10 மடங்கு அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக, தலைக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும் அபராதத்தொகை உயர்த்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்த … Read more

ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தை ஜூலையில் முதல்வர் தொடங்கிவைப்பார்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: “6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்கு, ரூ.1000 மாத உதவித் தொகை தொடர்பாக நிறைய விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதல் நாளிலேயே 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இத்திட்டத்தை முதல்வர் ஜூலை மாதத்தில் தொடங்கிவைப்பார்” என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அரசுப் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் … Read more

நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் – அற்புதம்மாள் பேட்டி

மே 18-க்கு பிறகு சிறைவாசிகளின் நிலை மாறியுள்ளதாகவும், நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் எனவும், இரண்டொரு மாதத்தில் அரசு இதனை கவனிக்கும் எனவும் பேரறிவாளனின் தாயார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையாகி சென்ற நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் … Read more

ஓபனராக வந்த தீபக் ஹூடா… அப்போ ரிது ராஜ் இனி அவ்வளவுதானா?

Ruturaj Gaikwad – Deepak Hooda Tamil News: அயர்லாந்து மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இளம் படையை கொண்ட இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த அணியை ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ரிஷப் பண்ட், மிடில் -ஆடர் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இணைந்துள்ளனர். … Read more

கன்னியாகுமாரி.! பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் உதியார்விளை பகுதியை சேர்ந்த இளைஞர் உறவுக்கார சிறுமியுடன் திங்கள்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சாலையின் வளைவான பகுதியில் முன்னாள் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் … Read more

தொலைதூரக் கல்வி, திறந்தவெளி பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறும் திட்டம் பொருந்தாது – தமிழக அரசு

தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் திட்டம் பொருந்தாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. குழந்தை திருமணத்தை தடுப்பது, கல்வி இடைநிற்றலை குறைப்பது போன்ற நோக்கங்களுக்காக உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு அத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதற்கான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவிகள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் உயர்கல்வி பயிலவேண்டும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. Source … Read more

சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக குறை தீர்வு கூட்டம் நடத்த ஆலோசனை

சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக குறைதீர்வு கூட்டங்களை நடத்த மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம், துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர், ‘‘சென்னை மாநகராட்சி, குடிநீர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உள்ளிட்ட பல்துறை அடங்கிய ஒருங்கிணைந்த குழுவை ஏற்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, மாநகராட்சி வளர்ச்சியை மேம்படுத்த முடியும்,’’ என்று தெரிவித்தனர். இதற்கு பதலளித்த மேயர், ‘முதல்வரிடம் … Read more