திருச்சி மக்களே உஷார்… செவ்வாய்க் கிழமை இந்த ஏரியாக்களில் மின்தடை!

திருச்சி கிழக்கு கோட்டம் துவாக்குடி உப கோட்டம் துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியிருப்பதால் நாளை (28.06.2022) காலை 09.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் உள்ளது. துவாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகள் நேரு நகர் அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், M.D.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், … Read more

திமுக அரசு மீது பெருத்த சந்தேகங்களை எழுப்பும் கமலஹாசன்.! 

முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் ஏன்? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்,  “சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் … Read more

தந்தைக்கு நைட் டியூட்டி போட்ட ஈ.பி.அதிகாரியை வெட்டிக் கொன்ற சிறுவர்கள்..!

தூத்துக்குடி அருகே மின்வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றிய ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக, லைன் மேனுக்கு  இரவு பணி கொடுத்த மின்வாரிய அதிகாரியை சிறுவர்கள் சேர்ந்து  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை கே.டி.சி, நகரைச் சேர்ந்தவர் ஆனந்தபாண்டி . 51 வயதான இவர் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். லைன் மேன்களை கண்காணிப்பது அவர்களுக்கு பணி நேரம் ஒதுக்குவது … Read more

ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை பெற தகுதிகள் என்ன? எங்கு விண்ணப்பிப்பது? முழுத் தகவல்

சென்னை: அரசு பள்ளியில் படித்த மாணவியருக்கான ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, … Read more

’’துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்’’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம் எனவும், கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா? என்பது பொதுக்குழு கூட்டத்தில் தான் தெரியும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் தலைமையில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்கிய கூட்டம் 11.30 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி … Read more

அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்துள்ளார் ஓ.பி.எஸ் – ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

ஓ.பன்னீர்செல்வம் ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்துள்ளார் என்றும் ஓட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதல் சூறாவளியாக வீசி வரும் நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

#BREAKING || தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை … Read more

11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாட்டில் பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், 90 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.  99 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில், 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி பயன்பாடுகள் பாடத்தில் இரண்டாயிரத்து 186 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக தாவரவியலில் 3 பேர் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாவட்டங்களைப் … Read more

துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்: ஜெயக்குமார்

சென்னை: “துரோகத்தின் அடையாளம் என்று பார்த்தால், அண்ணன் ஓபிஎஸ்-தான் என்று கூற வேண்டும். துரோகம் என்பதே அவருடன் உடன்பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட நிலையில், நமது அம்மாவில் அவரை எப்படி ஒரு அங்கமாக வைத்திருக்க முடியும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று (ஜூன் 27) கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைமைக் கழக … Read more

`பொருளாளர் பதவியை ஓபிஎஸ் விட்டுக் கொடுக்கணும்’-ராஜன் செல்லப்பா

அதிமுகவை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஒ.பி.எஸ் என சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். மேலும், `பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கு முன் ஒ.பி.எஸ் பதவியை விட்டு கொடுத்து செல்ல வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார். மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “அதிமுகவுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அறிவிக்க … Read more