தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா? – அண்ணாமலை கேள்வி

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து லாக்அப் மரணங்கள் நிகழ்ந்து வருவது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடின்றி இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில்,” கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல்நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்ற 22 வயது இளைஞர் அஜித் என்பவர் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு மரணித்ததாக … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் வருகிறது அவசர சட்டம்?

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக ஆன்லைன் ரம்மி குறித்து ஆராய்ந்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது. தொடர்புடைய செய்தி: ஆன்லைன் ரம்மி குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அந்த அறிக்கை, இன்று முதல்வர் … Read more

Today Gold Rate: தங்கம் ரஷ்ய இறக்குமதிக்கு தடை? எந்தெந்த நகரங்களில் இன்று என்ன விலை?

Gold, Silver Prices Today in Chennai tamil: ஜெர்மனியில் G7 உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மீதான படையெடுப்பைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தடைக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்த முன்னேற்றங்கள் தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பணவீக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் … Read more

#BigBreaking || அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு… உச்சகட்ட கொந்தளிப்பில் எடப்பாடி ஆதரவாளர்கள் செய்த சம்பவம்.! 

அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. ஏற்கனவே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக இந்த தகவல் தெரிவிக்கின்றது.  இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்றுள்ளார். சுமார் 75 தலைமை கழக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் … Read more

மாநில அளவிலான ஆணழகன் போட்டி.. 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். 60,65,70,75,80 ஆகிய எடை கொண்டவர்களுக்கு தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மாநில அளவிலான சாம்பியன் பட்டத்தை கன்னியாகுமரியை சேர்ந்த அணிஷ் பிரசாந்த் என்பவர் கைப்பற்றினார். பெருமுடா பிரிவில் சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெற்றி பெற்றார். Source link

ஆன்லைன் ரம்மி தடை| முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை அளித்தது நீதிபதி சந்துரு குழு: இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை 

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை இன்று முதல்வரிடம் சமர்பித்தனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை இன்று முதல்வரிடம் சமர்பித்தனர். இது தொடர்பாக இன்றை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” … Read more

திருநெல்வேலி: ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் உயிரிழப்பு; 5 குழந்தைகள் காயம்

திருநெல்வேலியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் வெட்டியபந்தி பகுதியிலிருந்து கேடிசி நகர் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு ஆறு மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளது. வசவப்பபுரம் – செய்துங்கநல்லூர் சாலையில் வந்தபோது ஆட்டோ எதிர்பாராமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவிற்கு அடியில் சிக்கிய 5 வயது செல்வ நவீன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் … Read more

பீச் பக்கம் போனீங்கனா இத சாப்பிட மறக்காதீங்க: வறுத்த மக்காச்சோளத்தில் இவ்ளோ நன்மைகளா ?

நாம் கடற்கரைக்கு சென்றால் தவறாமல் வாங்கி சாப்பிடும் மக்காச்சோளம். தீயில் வறுபட்டு, அதில் உப்பு,  மிளகாய்த்தூள் தூவி எலுமிச்சை சாறி பிழைந்து தருவார்கள். இந்த சுவை அசத்தலாக இருக்கும் . இது மிக எளிதில் கிடைத்தாலும். நமக்கே தெரியாமால் இதில் அதிக நன்மைகள் இருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின்  ஏ உங்கள் கண்களுக்கு நல்லது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி உடல் பொலிவை தருவதோடு தோல் சுருக்கத்தையும் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதில் வைட்டமின் பி1 … Read more

இலங்கையில் இருந்து மேலும் 2 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு … Read more

தனியார் நிறுவன மேலாளரின் வீட்டுப் பூட்டை உடைத்து திருட்டு… 80 சவரன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளையில் தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் 80 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலாளர் ஆண்டேஸ்வரன் தன் மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோருடன், சென்னையில் தங்கி படிக்கும் மூத்த மகனை காணச் சென்ற நிலையில் நகை கொள்ளை போனது தெரிய வந்தது. நகையுடன் சேர்த்து சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆரையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றதால் கைரேகை உள்ளிட்டவைகளை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link