சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம் – வளர்ப்பு நாயை வேட்டையாடியதால் பீதி

பொள்ளாச்சி அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் அணையை ஒட்டிய புளியங்கண்டி கிராமத்தைச் சேர்ந்த ராசு என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று, வளர்ப்பு நாயை வேட்டையாடியுள்ளது. இதுபற்றி ஆய்வு செய்த வனத்துறையினர் கால் தடங்களைக் கொண்டு சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்தனர். அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க அந்த இடத்தில் 4 கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். ஆனால் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோருகின்றனர். Source : … Read more

அப்போ சீரியல் நாயகி… இப்போ சினிமா நாயகி… மகிழ்ச்சியில் பூவரசி

சீரியலில் நாயகியாக நடித்து வரும் பலரும் அடுத்து திரைபபட வாய்ப்பை தேடி செல்வது வழக்கமான நடைபெறும் ஒன்று. ஆனால் சன் டிவி சீரியல் நடிகை ஒருவர் சீரியலுக்கு நடிக்க வரும் முன்பே நடித்த படம் தற்போது வெளியாக உள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராதிகா ப்ரீத்தி. தமிழில் பூவே உனக்காக சீரியல் மூலம் அறிமுகமான இவர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக … Read more

சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான்பூச்சி.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ..!

சிக்கன் பிரியாணி கரப்பான் பூச்சி  இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள 5 ஸ்டார் பிரியாணி சென்டர் நேத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் அவரது மனைவியுடன் பிரியாணி சாப்பிட வந்துள்ளார். அப்போது அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மூர்த்தி சாப்பிட்ட சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்சியடைந்த அவர் மேலாளரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் சரிவர பதிலளிக்காததால் உணவுகளுக்கு … Read more

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்”-பழந்தமிழ் வரிகளை மேற்கோள் காட்டி வாக்கு கேட்ட திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்மு, புதுச்சேரி மற்றும் சென்னையில் கூட்டணி கட்சித் தலைவர்களிடம் ஆதரவு திரட்டினார். இன்று காலை புதுச்சேரி சென்ற முர்மு, முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும், சுயேச்சைகள் 4 பேரும் ஆதரவு தெரிவித்தனர். இதனை அடுத்து, சென்னை வந்த முர்மு, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கோரினார். நிகழ்ச்சியில் … Read more

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த ரூ.4.96 கோடி: தமிழக அரசு உத்தரவின் முழு விவரம்

சென்னை: சென்னை போன்று எல்லா மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்த மாவட்டங்களை 3 ஆகப் பிரித்து ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை புத்தகக் காட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “மாவட்டங்கள்தோறும் புத்தகக் காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும்” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தில், தமிழகத்தில் சென்னை புத்தகக் காட்சி போன்று மாவட்டம்தோறும் புத்தகக் காட்சிகள் அமைக்கப்படும் … Read more

காத்திருந்த ஓபிஎஸ்.. முதலில் சென்ற இபிஎஸ்.. திரௌபதி முர்மு வரவேற்பில் நடந்தது என்ன?

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு தமிழகத்தில் இன்று ஆதரவு திரட்டினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். இதனையொட்டி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அவர் ஆதரவு சேகரித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்திற்கு இன்று வந்த திரௌபதி முர்மு, அதிமுகவிடம் ஆதரவு கோரினார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான, பாஜக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் … Read more

இந்த நிகழ்ச்சி பாத்தப்ப கூட இவ்ளோ சிரிப்பு வரல… ப்ரீத்தி சர்மாவின் லேட்டஸ்ட் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் நடிகைகள் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சித்தி 2 சீரியல் நடிகை வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. சன்டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சித்தி 2. நடிகை ராதா சரத்குமார் லீடு ரோலில் நடித்து வந்த இந்த சீரியல் 90-கிட்களில் பேவரெட் சீரியலான சித்தியின் 2-ம் பாகமாக உருவானது. ஆனால் சீரியல் தொடங்கியதில் இருந்தே இதில் நடிகர் நடிகைகள் மாற்றம் நடந்துகொண்டே … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியர்.. நையப்புடைத்து காவல்துறையில் ஒப்படைத்த உறவினர்கள்..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்டம் பாப்பிரெட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பெற்று வருகின்றனர். தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலவோளி என்பவர் கடந்த ஆண்டு வகுப்பின் போது தன்னிடம் படித்த மாணவிகள் சிலரை ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளார். இந்நிலையை அண்மையில் அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவி ஒருவர் பெற்றோரிடம் தமிழ் ஆசிரியர் … Read more

மட்டன் பிரியாணியில் ’கரப்பான் பூச்சி’..“5 ஸ்டார் பிரியாணி“ ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் வழங்கப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி ஊழியரிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆரணி டவுன் மணிகூண்டு அருகே “5 ஸ்டார் பிரியாணி“ என்ற பெயரில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு வந்த மூர்த்தி மற்றும் அவரது மனைவி, மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்த போது அதில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த உணவக நிர்வாகம், தாங்கள் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இல்லை … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | புதுச்சேரியில் ஆதரவு திரட்டிய பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு

புதுச்சேரி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று புதுச்சேரிக்கு வருகை தந்து, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு … Read more