திருவண்ணாமலை : சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி மயக்கம்.. 43 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் சத்துணவு மற்றும் சத்து மாத்திரை சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வயிற்று வலி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கம் அருகே உள்ள படி அக்ரகாரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 61 மாணவ மாணவிகளுக்கு காலையில் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மதியம் சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட 43 மாணவ மாணவிகளுக்கு … Read more

ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லி பயணம்..!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். இது குறித்து தெரிவித்த அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க டெல்லி செல்வதாக கூறினார். மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் சென்றுள்ள ஓ.பி.எஸ்., பொதுக்குழு கூட்டம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது பற்றி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. Source … Read more

சென்னை சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம்: முதற்கட்டமாக 80 சாலைகள் தயார்! 

சென்னை : சென்னை சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 80 சாலைகள் தயார் நிலையில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தி.நகரில் பல அடுக்கு வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதில் 246 கார்களையும், 562 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். இதனைத் தவிர்த்து சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. … Read more

5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – 47 வயது ஆசிரியரிடம் போலீசார் விசாரணை

ஆத்தூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் 5 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மண்மலை பாலக்காடு அடுத்துள்ள சித்தன்பட்டி குட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், இங்கு ஒரு … Read more

அ.தி.மு.க கதை முடியும் தருவாயில் ஓ.பி.எஸ்ஸை வீழ்த்திய இ.பி.எஸ்

Arun Janardhanan  EPS vanquishes OPS as an ADMK story nears end; P.S.: Two alike is a crowd: அதிகாலையில் நீதிமன்றத் தலையீட்டில் இருந்து அதன் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரை முழுவதுமாக மக்கள் பார்வையில் சிதைப்பது வரை, அதிமுக தலைமைக்கான நாடகம் வியாழன் அன்று எதிர்பார்க்கப்பட்ட சுவாரஸ்யத்தை முழுமையாக நிறைவேற்றியது. புழுதி படிந்தபடி நிமிர்ந்து நின்றவர் எடப்பாடி கே.பழனிசாமி; மொத்தத்தில் தோல்வியை சந்தித்தவர் போட்டியாளர் ஓ.பன்னீர்செல்வம். கடைசி வரை, 71 வயதான ஓ.பி.எஸ், … Read more

ஒரே நாளில் இரு சம்பவம்… நேரம் வரட்டும்… முதல்வர்கள் ஸ்டாலின், மம்தாவுக்கு செய்தி அனுப்பிய அண்ணாமலை.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒட்டன்சத்திரத்தில், உணவுத்துறை அமைச்சர் திரு சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு பழனி கனகராஜ் அவர்களின் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக பாஜக. இந்நிலையில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது திமுக அரசு. கைது … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | “வாய்ச்சொல்லில் மட்டுமே திமுக, விசிக, காங். கட்சிகளின் சமூக நீதி” – அண்ணாமலை

சென்னை: “இந்திய குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினத்தவர் வருவதை எதிர்த்து உயர்சாதி வகுப்பினரை வேட்பாளராக நிறுத்தும் திமுக, திருமா, காங்கிரஸ் கட்சிகளின் சமூக நீதி என்பது வாய்ச்சொல்லில்தான் இருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, “பாஜக சார்பில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒடிசா மாநிலத்தின் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒரு பெண்மணிக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவராக … Read more

வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறினால் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதி மீறும் வாகன உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தவது மற்றும் கட்டணம் செலுத்தாமல் செல்வோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி காவல்துறையுடன் இணைந்து முடிவு செய்துள்ளது. மொத்தமாக … Read more

திருச்சி சிவா மகன் திடீர் கைது: பா.ஜ.க ஷாக்

BJP Annamalai condemns Trichy Surya Siva arrest: தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளருமான சூர்யாசிவா திருச்சி போலீசாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா தன் தந்தை மீதுள்ள கருத்து வேறுபாட்டால் தி.மு.க.,வில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.  அங்கு அவருக்கு மாநில சிறுபான்மை பிரிவு செயலாளராக கடந்த வாரம் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 11 ம் தேதியன்று, உளுந்தூர் … Read more

திருமாவளவனை சுத்துப்போட்ட அதிமுகவினர்.! இது எப்போ நடந்துச்சு… சொல்லவே இல்லை.!

சென்னை, வானகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது தாயைக் காண்பதற்காக சென்ற திருமாவளவனை, அங்கு பொதுக்குழு கூட்டத்திற்காக வந்த அதிமுகவினர் சுத்துப்போட்டு, திருமாவளவனின் கையை பிடித்து குலுக்கி உள்ளனர். சென்னை வானகரத்தில் இன்று அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக வானகரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதும் அதிமுகவினர் திரளாக கூடி இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருமாவளவனை அதிமுகவின் சூழ்ந்துகொண்டு கை குலுக்கியதாக … Read more