தொழில் புரிய ஏதுவான மாநிலங்களில் தமிழகத்துக்கு 3-வது இடம் – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றதற்காக தொழில்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுள் தமிழகம் இடம்பெற்றுள்ளது. புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தாவியுள்ளோம். தொடர்ச்சியான, திட்டமிட்ட நடவடிக்கைகளால் முதலீடுகளுக்கான முக்கிய மையமாக தமிழகத்தை உயர்த்தியுள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், துறை … Read more

காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு

திருச்சியில் பாஜக மாநகரச் செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 11 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் அருகே பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யாவின் கார் மீது, ஒரு தனியார் பேருந்து மோதிய விபத்தில், சூர்யாவின் கார் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றை ஜுன் 19 ஆம் தேதி சூர்யா கடத்தி சென்றுவிட்டதாக, அவர் மீது … Read more

அமராவதியில் கடை உரிமையாளர் கொலை.. நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவான சமூக ஊடகப் பதிவுதான் காரணமா?

உதய்பூரில் தையல்காரர் வெட்டிக் கொல்லப்படுவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு, ஜூன் 21 அன்று மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 54 வயதான கடை உரிமையாளர் உமேஷ் பிரஹலாத்ராவ் கோல்ஹே கொல்லப்பட்டார். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறிய பாஜகவின் நுபுர் ஷர்மாவை ஆதரிக்கும் சமூக ஊடகப் பதிவிற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக கோல்ஹே கொல்லப்பட்டதாக இப்போது புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள். இதுகுறித்து உமேஷ் கோஹ்லேவின்’ மகன் சங்கேத் கோஹ்லேவின் புகாரின் பேரில் அமராவதியில் உள்ள … Read more

இது விடியா திமுக அரசின் அடக்குமுறை.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!!

வேலூர் எம்பி கதிர் ஆனந்த், காட்பாடி மேம்பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பாகவே, அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு திறந்து வைத்ததாக புகார் அளிக்கப்பட்டது. வருவாய்த்துறை அளித்த இந்த புகாரின் பெயரில், மாவட்டச் செயலாளர் அப்பு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது கண்டித்து உறவினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு மீது காட்பாடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக மாவட்ட … Read more

மதுரையில் லோடு வேனை திருடி சென்னை கொடுங்கையூரில் தொழில் நடத்தி வந்த திருடன் கைது.!.

மதுரையில் லோடு வேனை திருடி சென்னை கொடுங்கையூரில் தொழில் நடத்தி வந்த திருடன் கைது செய்யப்பட்டான். மேல அனுப்பானடியை சேர்ந்த சரவணன் என்பவரது டாடா ஏஸ் வேன் கடந்த மாதம் 13ந் நேதி திருட்டு போனது. அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுட்டனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது உறவினர் ஒருவர் திருட்டு போன வேன் கொடுங்கையூரில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சென்னை வந்த சரவணன் … Read more

தடுப்பூசி செலுத்தி ஓராண்டுக்குப் பின் எதிர்ப்புசக்தி குறைகிறது – பூஸ்டர் தவணை அவசியம் என அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: கரோனா தடுப்பூசி செலுத்தி ஓராண்டைக் கடந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால் பூஸ்டர் தவணையை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை தினசரி தொற்று பாதிப்புள்ளது. தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து … Read more

இப்படியெல்லாமா கால்வாய் கட்டுவீங்க? ஆம்பூரில் சர்ச்சையில் சிக்கிய ஒப்பந்ததாரர்

ஆம்பூரில் சிமெண்ட் மின் கம்பத்தை அகற்றாமல் அதன் மீதே ஒப்பந்ததாரர் கால்வாய் கட்டியுள்ள நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆம்பூர் நகராட்சி சார்பில் கால்வாய் மற்றும் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் பெத்தலேகம் 4-வது தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் போது தெருவில் இருந்த சிமெண்ட் மின்சார கம்பங்களை அகற்றாமல் அதோடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் கடந்த சில … Read more

வழி நெடுக வரவேற்பு பெற்றபடி கரூர் பயணித்த ஸ்டாலின்!

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக இன்று   தனி விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார் . விமான நிலையத்தில் முதல்வரை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் தாமரை கண்ணன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் … Read more

மீண்டும் ஒன்றிணையும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி.?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.  கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் … Read more

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் தமிழகத்தில் மாணவர்கள் தேர்ச்சி குறைவு: தரமான புத்தகங்கள் வழங்க கல்வியாளர்கள் வலியுறுத்தல்

திருச்சி: மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் 2021-22-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்களை பள்ளிக் கல்வித்துறை ஆராய்ந்து, அதைநிவர்த்தி செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். நாடு முழுவதும் அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசியவருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் … Read more