பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் கரூர் பயணம்.!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். நேற்று முதலமைச்சர் ஆக பதிவேற்ற பிறகு மு க ஸ்டாலின் முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர்  மு க ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில் கரூர் பயணியர் மாளிகையில் இருந்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெறும் திருமாநிலையூர் மைதானத்திற்கு செல்கிறார். அதன் பிறகு விழா மேடையில் 80 ஆயிரத்து … Read more

தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க கட்டிகளை கொடுத்து மோசடி செய்த மர்ம கும்பல் – போலீஸ் விசாரணை

கோவையில் தங்க முலாம் பூசப்பட்ட  போலியான தங்க கட்டிகளை கொடுத்து ஐந்து லட்சம் ரூபாயினை மோசடி செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்த பாலு என்பவரின் ஓட்டலில் உணவு அருந்த சென்ற 3பேர் கொண்ட கும்பல் தங்களிடம் உள்ள தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்க முயற்சி செய்வதாக கூறியுள்ளனர். இதனை உண்மை என்று எண்ணிய பாலு அவர்கள் சொன்னபடி 5 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு சென்று  … Read more

யூ-டியூபர்' ஆகும் குழந்தைகள்: பெற்றோரை எச்சரிக்கும் மனநல ஆலோசகர்

மதுரை: தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவு. ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு ‘லைம் லைட்’, அதாவது சமுதாயத்தில் உள்ள அனைவரின் கவனமும் ஒருவர் மீது விழுவது. அந்த ‘லைம் லைட்டு’க்குள் தங்கள் குழந்தைகள் வேகமாக வரவேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத்தான் சிறு குழந்தைகள் வீட்டில் செய்யும் சிறு, சிறுசேட்டைகளைகூட பதிவு செய்துசமூக ஊடகங்களில் வைரலாக்குகிறார்கள். அதை பலரும் ரசிக்கிறார்கள். அதை பகிரவும் செய்கிறார்கள். இதில் தவறு இல்லை. மற்றவர்கள் … Read more

July Matha Rasi Palan 2022: ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Rasipalan 2nd July 2022, Saturday ராசிபலன் ஜூலை 2 சனிக்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 2nd July 2022: இன்றைய ராசி பலன், ஜூலை 2ம் தேதி 2022 … Read more

6வயது சிறுமியை கொடுமைப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த அத்தை-மாமா.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை.!

சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரை அவருடைய தாய் கைவிட்ட நிலையில் தந்தை, பாட்டி ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு தந்தை, பாட்டி ஆகியோர் இறந்த நிலையில், சிறுமியை அவரது அத்தை, சென்னை தி.நகரில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்து சென்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியை அவரது மாமா தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் அத்தையிடம் தெரிவித்தும், அவர் கண்டுகொள்ளவில்லை. இருவரும் சேர்ந்து சிறுமியை … Read more

ஏன்டா காசு காசுன்னு பிச்சி பிடுங்கறீங்க.. ? லஞ்சத்தில் அரசு ஆஸ்பத்திரி..! நிஜத்தில் இந்தியன் தாத்தா வரனும்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளியின் உறவினர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. தொட்டதற்கெல்லாம் பணத்தை லஞ்சமாக பெறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏழை எளியோரும், வறுமையால் வாடுவோரும் உயிர் காக்கும் உயர் சிகிச்சையை கட்டணமில்லாமல் பெற வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது. ஆனால் பெரும்பாலான அரசு … Read more

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு – தமிழகம் கொண்டுவர போலீஸார் நடவடிக்கை

சென்னை: தஞ்சையில் மாயமான, 300 ஆண்டுகள் பழமையான பைபிள், லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த பைபிளை மீட்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்ற கிறிஸ்தவ மத போதகர், 1682-ல் ஜெர்மனியின் சாக்சானி நகரில் பிறந்தவர். பாலே பல்கலை.யில் படித்த இவர், தூதரன் தேவாலயத்தில் மத போதகராகப் பணியாற்றினார். டென்மார்க் மன்னரின் வேண்டுகோளை ஏற்று, இவரும், கென்ரிக் என்பவரும் தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள … Read more

கிருஷ்ணகிரி.! பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் ராஜேந்திரன்(29). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவியுடன் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொள்வதாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த மாணவி இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் மாத்தூர் … Read more