புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் – அருங்காட்சியகத்துடன் அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு
சென்னை: மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு புதுக்கோட்டை நகரில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான், தனது பதவிக் காலத்தில் மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். அரசுக்கு நிலம் வழங்கியவர் மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டையை முன்னேற்றும் வகையில், … Read more