அதிகரிக்கும் கரோனா தொற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று அதிகரித்துக் கொண்ட வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் கடந்த வாரம் … Read more

மத்திய அரசின் எந்த திட்டமும் எங்களுக்கு கிடைக்கவில்லை – தருமபுரி மலை கிராம மக்கள் வேதனை

தருமபுரி மாவட்ட காவிரி கரையில் உள்ள கிராமங்களில் பிரதம மந்திரி இலவச வீடு மற்றும் தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் கிராம மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர். தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையாக காவிரி ஆற்றின் கரையோரமாக உள்ளது ஏமனூர் கிராமம். மலைகளும் காவிரி ஆறும் சூழ்ந்து, மேட்டூர் அணையின் நீர் தேக்கத்தின் பகுதியில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதி மக்களின் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக விவசாயம் மற்றும் காவிரி ஆற்றில் மீன் பிடித்தல், ஆடு மாடு மேய்த்தல் … Read more

#BREAKING || தமிழக பாஜக எம்எல்ஏ., சற்றுமுன் கைது.! 

கன்னியாகுமரி அருகே குமாரசுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழாவின் போது, திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குமாரசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தேரோட்டம் நடைபெற இருந்தது.  இதில் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு பாஜக தரப்பில் இருந்து … Read more

சேவுகப்பெருமாள் ஆலயத்தில் நடந்த திகிலூட்டும் கழுவன் திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 2 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற திகிலூட்டும் கழுவன் திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர். சேவுகப்பெருமாள் ஐயனார் ஆலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில் உடல் முழுவதும் கருப்பு சாயம் பூசி, முகத்தை மறைக்கும் சடை முடி அலங்காரம், அரைஞான் கயிற்றில் சடைமுடி ஆடை, கோரமான முகத்துடன் திகிலூட்டும் தீவட்டியுடன் உலா வந்த கழுவனை இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டிப் பிடித்தனர்.  Source link

குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: புன்னகைப் பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினச் செய்தியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த இந்த தினம் கடைபிடிக்கபடுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், புன்னகை பூத்துக் குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் … Read more

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4775 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38200-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் சூழலை உருவாக்க பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் கணேசன் அறிவுறுத்தல்

சென்னை: தொழிலாளர் நலத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது: தமிழகத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் … Read more

மது போதையில் இருந்ததாக கூறி டிக்கெட் தர மறுப்பு.. தியேட்டர் ஊழியரை தாக்கிய கும்பல்!

திருவள்ளூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஊழியர்களை அடியாட்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. திருவள்ளூர் தேரடி பகுதியில் உள்ள ராக்கி திரையரங்கில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மது அருந்தி விட்டு வருபவர்களுக்கு திரையரங்கில் டிக்கெட்டுகள் கொடுப்பதில்லை என்பது வழக்கமாக உள்ள நிலையில், நேற்று மதியம் படம் தொடங்கி இடைவேளை விடும் தருணத்தில் வள்ளுவர் புரத்தைச் சேர்ந்த கோகுல் கொடியரசு என்பவரும் சுகன் என்பவரும் டிக்கெட் கேட்டதாக … Read more

கருமுட்டை விவகாரம்.. அமலுக்கு வரப்போகும் புதிய சட்டம்.! தமிழக அரசு அதிரடி.!!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை 8-க்கும் மேற்பட்ட முறை பெற்று விற்பனை செய்த வழக்கில், சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  போலி ஆதார் மூலம் வேறு ஏதேனும் சிறுமிகளிடம் சட்டவிரோதமாக கருமுட்டை பெறப்பட்டதா என்பது குறித்து கண்டறிய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல்கட்டமாக சேலம், … Read more

திரையரங்கில் இடைவேளையின் போது டிக்கெட் கேட்டு தகராறு… மதுபோதையில் ஊழியரை துரத்து துரத்தி அடித்த போதை ஆசாமிகள்

திருவள்ளூரில், தனியார் திரையரங்கில் டிக்கெட் கேட்டு மதுபோதையில் அடியாட்களுடன் வந்து தகராறில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், திரையரங்க ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருவள்ளூர் தேரடி பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் படம் பார்க்க வந்த 2 பேர், மதுபோதையில் டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது. திரைப்படம் இடைவேளையை நெருங்கியதாகவும், மது அருந்தியிருப்பதாலும், திரையங்க நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், டிக்கெட் தர இயலாது என திரையரங்க ஊழியர் கூறியதாக … Read more