அண்ணாமலை புகார்; பொய்களை அடுக்கும் அமைச்சர்கள்: பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

Tamilnadu Milk association condemns Ministers for false information about health mix: கர்ப்பிணி பெண்களுக்கு ஹெல்த் மிக்ஸ் வழங்குவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் பொய்யான தகவல்களைத் தந்து உண்மையை மறைத்துள்ளதாக, அமைச்சர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் … Read more

கொரோனா காலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்.!

கொரோனா காலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், 11-ம் வகுப்பைச் சேர்ந்த 417 பேர், 12-ம் வகுப்பை சேர்ந்த 2 மாணவிகளுக்கும், 9-ஆம் வகுப்பை சேர்ந்த 37 மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பை சேர்ந்த 45 மாணவிகளுக்கும், … Read more

வீட்டின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த நான்கரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் வசிக்கும் ராஜு , அவரது குழந்தை கோபிகாவை, நேற்று மாலை பச்சையப்பன் தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அங்கிருந்த கம்பி மீது ஏறிய போது தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதில், படுகாயமடைந்த … Read more

கலைஞர் நூலகம் Vs எய்ம்ஸ்… மதுரையின் சாட்சிகள்: சு.வெங்கடேசன் எம்.பி ஒப்பீடு

சென்னை: “8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் கலைஞர் நூலகம், 40 மாதங்களாக ஒற்றை செங்கலோடு நிற்கும் ‘எய்ம்ஸ்’ இரண்டும் மதுரையின் சாட்சிகள் என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டார். அமைச்சர் ஏ.வ.வேலு, மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் மற்றும் மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “அறிவிக்கப்பட்ட 8 … Read more

ஆழியார் அணை கரையோரம் சுற்றித்திரியும் காட்டுயானை கூட்டம் – வனத்துறை எச்சரிக்கை

ஆழியார் அணை கரையோரம் சுற்றித்திரியும் காட்டு யானை கூட்டம் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொள்ளாச்சி அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான், வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து ஆழியார் அணையை நோக்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் ஒன்று ஆழியார் … Read more

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு; இந்தியாவுக்கு கடைசி இடம்

Environment Performance Index: India fails green test, finishes at bottom: சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு-2022 (EPI) இல், தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு என்பது, சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் நாடுகளின் நிலைத்தன்மையை அளவிடும் ஒரு சர்வதேச தரவரிசை பட்டியலாகும். 18.9 என்ற சொற்ப மதிப்பெண்களுடன், பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்குப் பின்னால், தரவரிசையில் இந்தியா 180வது இடத்திற்கு வந்துள்ளது. … Read more

அமைச்சரின் விளக்கம் உண்மை நிலையை மறைக்கும் செயல் – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு அறிக்கை.!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், அவை அரசு பள்ளிகளில் இருந்து அங்கன்வாடிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்திருக்கிறார். அமைச்சரின் இந்த விளக்கம் உண்மை நிலையை மறைக்கும் செயல்; இது யாரையும் திருப்திப்படுத்தாது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் … Read more

உணவுப் பாதுகாப்பில் குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடம்!

உணவுப் பாதுகாப்புத் தரவரிசையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையில் உள்ள அலுவலர் எண்ணிக்கை, உணவுச் சோதனைக் கட்டமைப்பு, கண்காணிப்பு, பயிற்சி, நுகர்வோர் அதிகாரமளித்தல் உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு உணவுப் பாதுகாப்புத் தரவரிசையை உணவுப் பாதுகாப்புத் தர ஆணையம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கான தரவரிசையில் 82 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத் இரண்டாமிடத்திலும் மகாராஷ்டிரம் மூன்றாமிடத்திலும் உள்ளன. Source link

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2-வது நாளாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டாவது நாளாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள். இதன் ஆய்வறிக்கை இந்து அறநிலைத்துறை ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் புகழ் பெற்ற தலமாகும். இக்கோயிலிலுள்ள கனகசபையில் பக்தர்கள் ஏரி சாமி தரிசனம் செய்ய பொது தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதனைக் கண்டித்து பக்தர்கள் தெய்வத்தமிழ் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதனை அடுத்து தமிழக அரசு … Read more

'ஆபரேஷன் கந்துவட்டி' – காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கந்துவட்டி பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள ஆபரேஷன் கந்துவட்டி என்ற சிறப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள கந்துவட்டி … Read more