ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு ; அஞ்சலி செலுத்த குவிந்த பொதுமக்கள்

கடலூரில், கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. நேற்று கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி 4 சிறுமிகள், 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. 7 பேரில் 5 பேரின் உடல்கள் பண்ருட்டி அ.குச்சிபாளையம் கிராமத்தில் ஒரே இடத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 2 பேரின் உடல்களுக்கு குறிஞ்சிப்பாடி கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இறுதிச்சடங்கின் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்ட நிலையில், 200-க்கும் மேற்பட்ட … Read more

பெண் சிசுக்கொலை, கருமுட்டை வணிகத்தை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கடிதம்

சென்னை: “தமிழகத்தில் அதிகரிக்கும் பெண் சிசுக்கொலை மற்றும் கருமுட்டை விற்பனையைத் தடுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில் “தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக பாலினத் தேர்வின் அடிப்படையில் பெண் கருக்கலைப்பு நடந்துள்ளதாகவும், 7 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஸ்கேன் மையங்கள், மருத்துவர்கள் உட்பட அனைத்து … Read more

‘மீனாட்சி அம்மன் கோவிலில் திருநீறு கடை வச்சவர்தானே நீங்க..!’ செல்லூர் ராஜுவை போனில் கலாய்த்த பா.ஜ.க நிர்வாகி

பாஜக கூட்டம் காக்கா கூட்டம் என்றும் அதிமுகவினர் மீது துரும்பு விழுந்தாலும் தூணைக் கொண்டு எரிவோம் என்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் போனில் பேசிய பாஜக நிர்வாகி, “மீனாட்சி அம்மன் கோவிலில் திருநீறு கடை வச்சவர்தானே நீங்க…” என்று வஞ்சப் புகழ்ச்சியாக கலாய்த்துள்ளார். அண்மையில், பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல, பாஜக இரட்டை வேடம்போடுகிறது என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் விமர்சித்திருந்தார். இது பாஜகவினர் மத்தியில் கடுமையான சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக … Read more

ஆபாச விளம்பரம் : தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம்.! 

நாளொன்றுக்கு 88 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி விவரம் தெரிவிக்கிறது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் சிறுமி ஒருவர் அரசியல் பிரமுகர்களின் மகன்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது. இந்த சூழ்நிலையில், ஒரு வாசனை திரவியம் விளம்பரம் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விதமாக, இரட்டை அர்த்தத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படுக்கையறை மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் எடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில், ஒரு பெண் … Read more

அடகு கடையில் திருடிய லாக்கரை உடைக்க முடியாமல் குப்பை தொட்டியில் வீசி சென்ற மர்ம கும்பல்.!

மதுரையில் அடகு கடையின் லாக்கரைத் திருடி சென்ற மர்ம கும்பல் அதனை உடைக்க முடியாமல் குப்பை தொட்டியில் வீசி சென்றனர். ஜவஹர்புரத்தில் உள்ள ஒரு அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கர் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வந்துள்ளனர். அப்போது டி.ஆர்.ஒ பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் ஒரு லாக்கர் பெட்டி கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அடகு கடை உரிமையாளர் முன்னிலையில் அதனை திறந்து பார்த்தபோது 21,000 ரூபாயும், அரை கிலோ … Read more

ஆதீனம் பேச்சு | “ஆன்மிகப் பணியல்ல… அது  ஆர்எஸ்எஸ் பணி” – கே.பாலகிருஷ்ணன்

சென்னை: “மோடி ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஆதீனம் பேசுவது, ஆன்மிகப் பணியல்ல, அது ஆர்எஸ்எஸ் பணி” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆதீனம் அரசியல் பேசுவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் இஸ்லாமியர்களை குறிப்பிட்டு தேச விரோதிகள் என்பது என்ன விதமான அரசியல்? மோடி ஆட்சிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஆதீனம் பேசுவது, ஆன்மிகப் பணியல்ல, அது ஆர்எஸ்எஸ் பணி” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக,விஸ்வ … Read more

முகமது நபி பற்றி சர்ச்சை: அரபு நாடுகள் கருத்துக்கு இந்தியா பதில்

Krishn Kaushik  Remarks on Prophet Mohammad: As criticism grows, India rejects OIC’s comments as ‘narrow-minded’: சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) வெளியிட்ட அறிக்கைகளுடன், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது வெளியேற்றப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர்களான நூபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் கருத்துக்களுக்கு எதிராக இஸ்லாமிய உலகில் இருந்து விமர்சனங்கள் குவிந்துள்ள நிலையில், OIC யின் கருத்துகளை இந்தியா “தேவையற்றது மற்றும் குறுகிய … Read more

கோபி – மதுரை செல்லக்கூடிய அரசு பேருந்தை அலேக்காக தூக்கி சென்ற நீதிமன்ற அதிகாரிகள்.!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே, விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்காததால், தமிழக அரசின் அரசு பேருந்தை ஜப்தி செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஒத்தக்குதிரை பேருந்து நிலையம் அருகே, அரசு பேருந்து போன்ற மோதியதால் தாழைகொம்புதுறை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த வழக்கு ஈரோடு கோபிசெட்டிபாளையம் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கிருஷ்ணனின் குடும்பத்திற்கு 3 லட்சத்து 94 … Read more

ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 5 பேர் படுகாயம்.!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆம்னி கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றுக்கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்று திடீரென வலதுபுறமாக திரும்ப முயன்ற போது திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் வலது புறமாக திரும்பிய முயன்றது. அப்போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் ஆம்னி கார் மீது தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார் சாலையோரத்தில் இருந்த கடைக்கு புகுந்த நிலையில் … Read more

‘மதுரையின் நிரந்தர மாவட்டச் செயலாளரே’ – செல்லூர் ராஜூ போஸ்டரால் அதிமுகவில் சலசலப்பு

மதுரை: மதுரை மாநகரில் 22 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டச் செயலாளராக நீடிக்கும் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை வாழ்த்தி, அவரது ஆதரவாளர்கள் மாநகரின் ‘நிரந்தர மாவட்டச் செயலாளரே’ அடைமொழியுடன் ஓட்டிய போஸ்டர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரையில் அதிமுக வட்டாரத்திலிருந்து சிலர் பகிர்ந்தவை: “அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தவரை கட்சியிலும், ஆட்சியிலும் யாரும் நிந்தர அதிகார மையமாக இருக்க முடியாது. கட்சியில் ஜெயலலிதா கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு … Read more