IND vs ENG 2nd ODI: கோலிக்கு ஓய்வு… தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

IND VS ENG match at The Lord’s cricket stadium live news update in tamil: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், … Read more

கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூலை 15ஆம் தேதியன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் … Read more

அதிமுக தற்போது சாதி ரீதியான கட்சியாக மாறி வருவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

அரியலூர்: அதிமுக தற்போது சாதி ரீதியான கட்சியாக மாறி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டினார். அரியலூரில் அமமுக செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 14) நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசும்போது, ”தற்போது அதிமுகவில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்களையும் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளதாக வெளிவந்துள்ள ஆடியோவில், அதிமுகவில் நடப்பவை குறித்து உண்மையாக பேசியுள்ளார். ஆனால், அதனை அவர் … Read more

கோவை – திருச்சி மேம்பாலத்தில் விபத்து – 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நபர்

கோவை மாவட்டம் திருச்சி சாலை மேம்பாலத்தின் 40 அடி உயரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேம்பாலம் திறக்கப்பட்ட 2 மாதங்களில் இது மூன்றாவது உயிரிழப்பாகும்.  கோவை மாவட்டம் ஒப்பணக்கார வீதி பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆனந்தகுமார், ஒண்டிபுதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று வழக்கம்போல பணிக்கு ஒண்டிபுதூர் நோக்கி திருச்சி மேம்பாலத்தின்மீது அவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். அப்போது சுங்கம் பகுதியின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி … Read more

கேரள நெடுஞ்சாலை திட்டம்; சி.பி.எம் – பா.ஜ.க இடையே உரிமை போட்டி

Shaju Philip Jaishankar vs Vijayan: An elevated Kerala highway and a Centre-vs-Kerala gridlock: அவரது வழக்கமான பயணங்களின் தரத்தின்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரளா பயணம் என்பது குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்க வேண்டும். இருப்பினும், ஜெய்சங்கர் கேரளாவில் மூன்று நாட்கள் தங்கியிருப்பது பா.ஜ.க மற்றும் மாநிலத்தில் ஆளும் CPM இடையேயான மோதலின் சமீபத்திய புள்ளியாக மாறியுள்ளது. குறிப்பாக 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கேரளாவின் வளர்ச்சியில் யாருக்கு அதிக பங்கு என … Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி – தமிழக அரசு.!

தமிழகத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சுய உதவி குழுக்கள் மூலமாக சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு … Read more

வெடித்து தீப்பிழம்பானது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர் ராக்கெட்..!!

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் வகையில் அதிநவீன ஸ்டார் ஷிப் எனப்படும் விண்கலத்தை தயாரித்து வருகிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்த நிலையில், இந்த விண்கலத்துக்கான பூஸ்டர் பரிசோதனையில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.   இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியில் பூஸ்டர் 7 பரிசோதனை நடைபெற்றது. அப்போது, திடீரென அடிப்பாகத்தில் இருந்து புகை கிளம்பியது. சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் பூஸ்டர் வெடித்துச் சிதறியது. கடந்த ஆண்டுகளில் பூஸ்டர் மாதிரிகளை அந்நிறுவனம் பரிசோதித்து … Read more

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுக: அமைச்சர் பொன்முடி

சென்னை: “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மிகவும் காலதாமதமாகிறது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிகமான பாதிப்பை உருவாக்கும். எனவே தேர்வு முடிவுகளை இம்மாதத்திற்குள் உடனடியாக வெளியிட்டு மாணவர்களின் சேர்க்கைக்கு உதவிட வேண்டும்” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மிகவும் காலதாமதாகிறது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு அதிகமான பாதிப்பை உருவாக்கும்.எனவே தேர்வு … Read more

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 12ஆம் தேதி 4ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு அவருக்கு உடற்சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு … Read more

AIADMK Latest Updates: ஐகோர்ட்டில் இன்று அ.தி.மு.க வழக்கு; தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் மீண்டும் கடிதம்

AIADMK news in tamil: அ.தி.மு.க- வை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையிலான இரு அணிகளும் சட்ட ரீதியாக தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதில், வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அதிமுகவில் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். குறிப்பாக துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், 11 அமைப்புச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை அறிவித்தார். ஆனால், … Read more