போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை தொடர்பு கொண்டு பேசிய டிஜிபி சைலேந்திர பாபு..!
கோவையில் போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி நிறுவன ஊழியரை டி.ஜி.பி சைலேந்திர பாபு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். போக்குவரத்து காவலர் மீது மேற்கொண்ட நடவடிக்கையை தெரிவித்து ஊழியர் நலம் பெற வாழ்த்தியதாக சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சாலையில் நடந்து சென்ற பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற பள்ளிப்பேருந்தை பீளமேடு ஃபன் மால் அருகே நிறுத்தி ஓட்டுநரிடம் கேள்விகேட்ட ஸ்விக்கி ஊழியரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஷ் கைது செய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். Source link