திருச்சி- சென்னை இடையே 4வது  விமான சேவையை தொடங்கிய இன்டிகோ

IndiGo airline launched its fourth frequency on the Chennai – Tiruch on Wednesday.திருச்சி- சென்னை இடையே 4 வது விமான சேவையை கடந்த புதன்கிழமை முதல் இன்டிகோ விமான நிறுவனம் தொடங்கி உள்ளது. கொரோனா பெருந்தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திருச்சியில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் உள்நாட்டு விமான சேவைகளும் அதிகரித்து வருகிறது. … Read more

#காரைக்குடி || பூட்டிய வீட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம கும்பல்.!

சிவகங்கை அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த கும்பலை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காரைக்குடி அருகே சுப்பிரமணியபுரத்தில் வசித்துவரும் ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்து இறுதினங்களுக்குமுன்  வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். நேற்று இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகை, ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் … Read more

ஆசிரியர்கள் வராததால் விடைத்தாள் திருத்தும் பணியில் பாதிப்பு.. பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை.!

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை விடுவிக்காத அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு, போதிய ஆசிரியர்கள் வராததால் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் விடுவிக்க அனுமதி தர வேண்டும் என அறிவுறுத்திய பள்ளி கல்வித்துறை, ஆசிரியர்கள் பணிக்கு வராமல் இருந்தால் … Read more

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து ஒரு மாதத்தில் 33 டன் காலி மது பாட்டில்கள் சேகரிப்பு: கோவை மண்டல டாஸ்மாக் மேலாளர் தகவல்

உதகை: கடந்த மாதத்தில் மட்டும் நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து 33 டன் காலி மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்குகின்றன. இதில் பல மதுக்கடைகள் கிராமப்புறங்கள், நீர்நிலைகள்,வனப்பகுதிகளையொட்டி அமைந்துள்ளன. இதனால், மது அருந்தியபிறகு காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் வனப்பகுதிமற்றும் நீர் நிலைகளில் வீசப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும்,யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் அபாயத்தை விளைவிக்கிறது. இதைத்தொடர்ந்து, வனப்பகுதியில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, சென்னை … Read more

விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் துவங்கி மே 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1-ஆம் தேதி துவங்கியது. ‘விடைத்தாள் திருத்தும் மையங்களில் போதிய வசதி இல்லை’ என்று குற்றம்சாட்டி தமிழகத்தில் பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் … Read more

Vikram Movie Review : கமலின் கமர்ஷியல் கம்பேக்… விக்ரம் படம் எப்படி?

Kamal Hassan, Vijay Sethupathi starrer Vikram Movie Review, Movie Launch Today LIVE Updates : மாநகரம் கைதி மாஸ்டர் என ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படத்தை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான திரைக்கதையுடன் இன்று வெளியாகியிருக்கும் படம் விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசன் 4 வருட இடைவெளிக்கு பிறகு கொடுத்துள்ள இந்த படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. 1986-ம் ஆண்டு இயக்குநர் ராஜகேசர் இயக்கத்தில் வெளியான படம் … Read more

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவு வெளியானது.!

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்துள்ளது. இந்த 6 இடங்களுக்கான தேர்தலில் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அரசியல் கட்சி சார்பாக ஆறு பேரும், சுயேச்சையாக 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், கட்சி சார்பாக அதிமுகவை பொறுத்தவரை … Read more

நீட் தேர்வு இல்லாமல் பயின்ற கடைசி பேட்ச்… 36 பதக்கங்களை வென்ற மாணவன்.!

பாட்டிக்கும், தந்தைக்கும் புற்று நோய் பாதித்த நிலையில், தாயும் நோயால் பாதிக்கப்பட்ட இக்கட்டடான சூழலிலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர் பிரசாந்த் 36 பதக்கங்களை வென்று அபார சாதனை படைத்துள்ளார். சென்னை மருத்துவ கல்லூரியின் 186 வது இளங்கலை பட்டப்படிப்பு நிறைவு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதக்கங்களை வழங்கினார். பிரசாந்த் என்ற மருத்துவ மாணவர் 19 பாடப்பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு 36 பதக்கங்களை வென்றார். அவரை அமைச்சர் மா. சுப்பிரமணியன் … Read more

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடல்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 172 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யதான் ஆகியோர் இன்று (ஜூன் 3) தொடங்கி வைத்தனர். அதன்பிறகு, செய்தியார்களிடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கில்தான் ‘மீண்டும் மஞ்சள் பை’ … Read more

புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் குவியும் வியாபாரிகள் – ரூ. 1 கோடி வரை ஆடுகள் விற்பனை

திருவிழாக்கள், மொய் விருந்துகள் தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகள் மற்றும் ஆட்டுவியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர் கோவில் திருவிழாக்களையொட்டி விற்பனை அமோகமாக நடைபெறுவதால் வரும் ஆடி, ஆவனி மாதங்கள் வரை விலையேற்றம் நீடிக்கும் எனத் தெரிகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM