பால்கனி இரும்பு கிரில் கேட்டில் சிக்கிக்கொண்ட குழந்தையின் தலை.. நீண்ட போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வீட்டின் பால்கனியில் உள்ள இரும்பு தடுப்பில் தலையுடன் சிக்கிக்கொண்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தாராசுரம் கடைவீதியில் வசித்தும் வரும் விஜய் ஆனந்த் என்பவரின் குழந்தை அரிபிரியன், பால்கனியில் உள்ள இரும்பு கிரில் கேட்டை பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது கம்பிகளுக்கு இடையே தலை சிக்கிக்கொண்டது. தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை தவித்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கம்பியை இழுத்து வளைத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. Source … Read more

99வது பிறந்தநாள் | ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள், முதல்முறையாக அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் … Read more

சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்; சேவையை தொடங்க உள்ள கார்டெலியா நிறுவனம்

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமையன்று சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். கப்பலின் பயணத்திட்டம், கட்டணம் குறித்து விரிவாக பார்க்கலாம். சட்டமன்றத்தில் அறிவித்தபடி, சொகுசு கப்பல் சுற்றுலா திட்டமானது சென்னையில் செயல்படுத்தப் படவுள்ளது. நாட்டின் பல்வேறு துறைமுகத்தில் சேவை வழங்கிவரும் கார்டெலியா (Cordelia) கப்பல் நிறுவனம், சென்னையிலும் தனது சேவையை தொடங்குகிறது. இரண்டு வகையான பயணத்திட்டங்களுடன், நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அம்சங்களுடனும் சேவை வழங்க வருகிறது கார்டெலியா. சென்னை … Read more

அடுத்த பிரச்சினையை தொடங்கிய ஜனார்த்தன்… பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Tamil Serial Pandian Stores Rating Update With promo : ஆரம்பமாகியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த பூகம்பம் இதை வைத்து இன்னும் ஒரு மாதத்திற்கு ஓட்டலாமே என்று சொல்லும் அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பான திருப்பதை ஏற்படுத்தியுள்ளது. சகோர ஒற்றுமை, கூட்டுக்குடும்பம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என அனைத்திற்கும் பெயர் பெற்ற பாண்டியன் ஸ்டோர்சில் தற்போது சகோத ஒற்றுமையை தவிர மற்ற அனைத்தும் இருக்கிறதா என்றால இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதில் சகோதர ஒற்றுமையே … Read more

உச்சநீதிமன்ற வழக்கை முடிக்க பாருங்க.! தமிழகத்தின் களநிலவரமே வேற., பட்டியலை அடுக்கிய ஓபிஎஸ்.! 

ஆன்லைன் விளையாட்டு மறைமுக லாட்டரி விற்பனை போன்ற சூதாட்டங்களை தடை செய்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர் செய்ய வேண்டும் என்று, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இணையதள விளையாட்டு என்று கூறி, பொது மக்களை ஏமாற்றி, பணம் கட்ட வைத்து, பிறகு பந்தயமாக மாற்றி, தொடர்ந்து விளையாடச் செய்து சூதாட்டத்திற்கு அடிமையாக்கக் கூடியதாகவும்; விபரீத விளைவுகளை உருவாக்கக் கூடியதாகவும்; உயிருக்கே … Read more

அடேங்கப்பா.. 6 அடி பாம்பை அசால்ட்டாக பிடித்து புற்றுக்குள் விட்ட சிறுமி… இணையத்தில் வைரல்.!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, தன் பிஞ்சு கைகளால் பாம்பு ஒன்றை பிடித்து புற்றுக்குள் விட்ட காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆலோரை பகுதியில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீ நிஷா என்ற அந்த சிறுமி, குடியிருப்புக்குள் புக இருந்த 6 அடி நீள சாரப் பாம்பை பக்குவமாகப் பிடித்து புற்றுக்குள் விட்டார். சிறுமியின் இந்த செயல் அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. Source link

கருணாநிதி பிறந்தநாள் | வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு முதல்வர் நேரில் விருது வழங்கி கவுரவிப்பு

சென்னை: மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதினையும், புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸூக்கு கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருதினையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 3) வழங்கினார். 2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் … Read more

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி – உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தோட்டக்கலைத் துறையின் சார்பாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரம்மாண்ட மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஊட்டி, கொடைக்கானல், குடகு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வண்ண … Read more

#Kalaignar99: கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் அரிய புகைப்படங்கள்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. (Express archive photo) தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் கருணாநிதி. இன்று கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை நீங்கள் பார்த்திராத கலைஞரின் அரசியல் பயணத்தின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ! (Express archive photo) இரண்டாவது மனைவி தயாளுவுடன் கருணாநிதி (Express archive photo) 5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 1969 முதல் … Read more

குறைவதை போல் குறைந்து ஒரேயடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம்.!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.   அதன்படி, சென்னையில் … Read more