பள்ளி மாணவியின் கருமுட்டை திருட்டா? தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு., கள்ளக்காதலன் சையது அலி உள்ளிட்ட 3 பேர் கைது.!

தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 வயது சிறுமி ஒருவரின் கருமுட்டைகளை திருட்டுத்தனமாக எடுத்து விற்பனை செய்த, சிறுமியின் தாய், அவரின் கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பிரபல கருத்தரிப்பு மருத்துவமனையில் சிறுமி ஒருவரை அழைத்துச் அழைத்துச் செல்லப்பட்டு, சிறுமியின் கருமுட்டை தானம் செய்யப்பட்டு, பணம் பெறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து … Read more

“தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் வதைபடுகின்றனர்” – சிறப்பு முகாம்களை மூட சீமான் வலியுறுத்தல்

திருச்சி: “தமிழத்தில் சிறப்பு முகாம் என்ற சித்ரவைதை முகாம்களை மூடுங்கள், க்யூ பிரிவை கலைத்து விடுங்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பேரறிவாளன் விடுதலையை யார் கொண்டாடியது? கொண்டாடியிருந்தால் என் தம்பி விடுதலையை நான்தான் கொண்டாடியிருக்க வேண்டும். பேரறிவாளன் நிரபாரதி இல்லை என்று கூறும் அண்ணாமலை, அமித் ஷாவுக்கும், மோடிக்கும் குஜராத் … Read more

கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாய உத்தரவு; உற்பத்தியாளர்களின் கோரிக்கை என்ன?

Anil Sasi  Explained: The case for six airbags: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனையில் சரிவை எதிர்கொண்டுள்ள பட்ஜெட் விலை கார் பிரிவில் அதன் தாக்கத்தை காரணம் காட்டி, பயணிகள் வாகனங்களில் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளது. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் குறிப்பிடத்தக்க சந்தை இருப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான … Read more

#தமிழகம் || மளிகை கடைக்குள் புகுந்து, பொதுமக்கள் முன்னிலையில் வியாபாரி கடத்தல்.! 

சேலம் அருகே மளிகை கடை உரிமையாளர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை, ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பட்டை கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராமன். வட மாநிலத்தை சேர்ந்த வியாபாரியான இவர், இன்று அதிகாலை வழக்கம் போல கடையை திறந்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார். அப்போது திடீரென கடைக்குள் புகுந்த 6 பேர் கொண்ட வட இந்திய மாநிலத்தை சேர்ந்த … Read more

நடிகர் ரஜினிகாந்துடன் அஜித் சந்திப்பு..? வைரலாகும் புகைப்படம் குறித்து விளக்கம்.!

நடிகர் ரஜினிகாந்தை அஜித் நேரில் சந்தித்ததாக இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியான நிலையில், அது போன்ற சந்திப்பு ஏதும் நிகழவில்லை என நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். இணையதளத்தில் உலா வரும் அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  Source link

வழக்கு நிலுவையில் இருந்தாலும் பாஸ்போர்ட் வழங்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: ”பாஸ்போர்ட் பெறுவதற்கு முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது ஒரு தடையல்ல” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”நான் மலேசியாவில் தொழில் செய்து வருகிறேன். நான் சொந்த ஊருக்கு வந்திருந்த 2017, 2018-ல் என் மீது 3 குற்ற வழக்குகள் பதிவானது. அதில் ஒரு வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையிலும், 2 வழக்குகள் … Read more

5 கிலோ நகை கொள்ளை வழக்கு: திணறும் தஞ்சை போலீஸ்; சி.சி.டிவி காட்சிகளை வெளியிட தயக்கம் ஏன்?

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே, கடந்த 31-ம் தேதி இரவு  5 கிலோ நகை மற்றும் ரூ.14 லட்சம் கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் சென்ற கொள்ளையர்கள் தொடர்பாக இதுவரை எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்ற நகை மொத்த வியாபாரியிடம் கடந்த 31-ம் தேதி இரவு  5 கிலோ நகை மற்றும் ரூ.14 லட்சம் … Read more

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதனுக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' – தமிழக அரசு.!

2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இவ்விருது ஒவ்வோர் ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, தேர்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில் 2021-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது … Read more

கல்வி அமைச்சர்களுக்கான தேசிய மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்தது தவறு – பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், தேசிய சராசரியை விட குறைந்துள்ளதாகவும், கல்வியின் தரத்தை உயர்த்துமாறு முதலமைச்சர் செயல்பட வேண்டுமென்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட அண்ணாமலை, கல்வி அமைச்சர்களுக்கான தேசிய  மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்தது தவறு என குறிப்பிட்டார் Source link

பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்ற மைக்கேல்பட்டி மாணவி யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் சிறப்பிடம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியைச் சேர்ந்த மாணவி, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வில் அகில இந்திய அளவில் 338-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரதான தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் 2 தினங்களுக்கு முன் வெளியானது. … Read more