தலைமைச் செயலகம் முன் தீக்குளித்த நபரிடம் வீடியோ வாக்குமூலம் சேகரிப்பு

தலைமைச் செயலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டம் திருவிளாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 75). இவர் நேற்று தலைமைச் செயலகம் முன்பு தனக்குத் தானே பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பிரிவு போலீசார் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றி இருந்தனர். பின் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது 59 சதவீத … Read more

மோடி அரசின் கொள்கைகள் தமிழர்களுக்கு எதிரானது – பாஜகவை சாடிய அதிமுக பொன்னையன்

 Arun Janardhanan பாஜகவுடன் அதிமுக தேர்தல் கூட்டணி அமைத்து ஐந்தாண்டுகள் ஆன நிலையில், அதிமுகவிற்குள் நிலவும் பாஜகவுக்கு எதிரான குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசின் தமிழக நலனுக்கு எதிரான கொள்கைகள் அதற்கு பின்னணியில் உள்ளது. தமிழக நலனுக்கு எதிரான கொள்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் சி பொன்னையன், பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநில வருவாயை திருடுகிறது. மேலும் தேர்தல் தோல்விக்கு சிறுபான்மை சமூகத்தின் ஆதரவை இழந்ததும், … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்று திறனாளிக்களுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 3 சட்டப் பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாரியத்தில் உறுப்பினராக அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி வெட்கடாசலம் இடம் பெற்றுள்ளார். மாநில அளவில் மாற்று திறனாளிகளின் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழக்கும் அமைப்பாக இவ்வாரியம் இருக்கும். மாற்று திறனாளிகளின் உரிமைகள், கொள்கைகளை … Read more

பாஜகவில் சசிகலாவை ஏற்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்: அண்ணாமலை

நெல்லை/திருச்சி: பாஜகவில் சசிகலாவை ஏற்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “அதிமுகவில் சசிகலாவை சேர்த்துவிட்டால் அக்கட்சி இன்னும் வலுவாக இருக்கும். பாஜகவுக்கு அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவரது வருகை பாஜகவினருக்கு உறுதுணையாக இருக்கும். அவரை அதிமுகவில் சேர்க்காவிட்டால், பாஜகவில் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம்” என்றார். பேட்டியின்போது, சசிகலாவின் பெயரைச் சொல்லாமல் … Read more

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பயணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது. அரசுப் பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தின் வைப்புத் தொகை கடந்த மார்ச் மாதம் வரை ரூ.53,555 கோடி ரூபாயாக உள்ளது. இந்தத் தொகை எல்.ஐ.சி.யின் பணத்திரட்சியுடன் கூடிய புதிய … Read more

Tamil News Live Update: தக்காளி விலை குறைந்தது.. கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை! தமிழகத்தில் நடைபெற்ற 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதன்படி 12ம் வகுப்பு தேர்வுகளில் 1.95 லட்சம், 11ம் வகுப்பு … Read more

அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் மின்சார ஸ்கூட்டி.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்.!

கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டி ஒன்று தீபிடித்து எரிந்துள்ளது . கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் ஆசீர் என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் சமீபத்தில் எலெக்ட்ரிக் … Read more

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2-வது நாளாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறைவால் பயணிகள் கடும் அவதி.!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2-வது நாளாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறைவால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலை முதல் காத்திருந்த பயணிகள் பேருந்துகள் வராததால் போக்குவரத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் குதித்தனர். கிடைத்த ஒரிரு பேருந்துகளில் ஏற பயணிகள் முண்டியடித்துக் கொண்டனர். குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் பட்சத்தில் முன்பதிவு பிரச்சினைகளால் அதிலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக பேருந்துகள் குறைந்தளவில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. Source link

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்தது தமிழகம்

சென்னை: தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை, மத்திய அரசால் 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், கரோனா பரவலால் அதன் அம்சங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை அமல்படுத்துவதில் மத்திய கல்வி அமைச்சகம் தீவிரம் காட்டிவருகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஆரம்பம் … Read more

திண்டிவனம் அருகே சோகம் – கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேரப்பிள்ளைகளுடன் மூதாட்டி பலி

கல்குவாரியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்துக்கு பள்ளி விடுமுறைக்காக சிறுவர்கள் சிலர் தங்களின் பாட்டி புஷ்பா என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டுக்கு வந்திருந்த தனது பேரப் பிள்ளைகளை மூதாட்டி புஷ்பா, பெருமுக்கலில் அமைந்துள்ள செயல்படாத கல்குவாரி குட்டைக்கு குளிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் குழந்தைகள் 3 பேரும் அடுத்தடுத்து குட்டையில் தவறி விழுந்துள்ளனர். இதை பார்த்து … Read more