சாலையில் நடந்து சென்ற எஸ்.ஐ., மனைவியிடம் நகை பறிக்க முயற்சி -24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலையில் நடந்து சென்ற எஸ்.ஐ மனைவியிடம் நகையை பறிக்க முயன்ற கொள்ளையனை சிசிடிவிக் காட்சிகளை கொண்டு போலீசார் 24மணி நேரத்தில் கைது செய்தனர். செய்யாறு பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் மனைவி அனுசியா, நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த ஒருவன் அனுசியா அணிந்திருந்த 12 சவரன் தங்க நெக்லசை பறிக்க முயன்ற போது அது காதில் இருந்த … Read more

ஆர்.டி.ஐ ஆர்வலரை நள்ளிரவில் விசாரித்த கோவை போலீஸ் – ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம்

கோவை: ஆர்.டி.ஐ சட்டம் மூலம் கேள்வி கேட்ட ஆர்வலரை நள்ளிரவில் விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை திருமலையாம்பாளையம் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். கல்லூரி பேராசிரியர். சமூக ஆர்வலரான இவர், சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘நான் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு … Read more

எம்.பி தேர்தல்: தமிழகத்திலிருந்து 6 பேரின் மனுக்கள் ஏற்பு…யார் யார்? முழு விவரம்

மாநிலங்களவை தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து மனுத்தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று மாநிலங்களவை வேட்பாளர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. திமுக வேட்பாளர்களான கல்யாண சுந்தரம், கிரி ராஜன், ராஜேஸ்குமார், அதிமுக வேட்பாளர்கள் சி.வி சண்முகம், தர்மர், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. … Read more

பிளஸ்-1 மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் மர்ம மரணம்: தண்டவாளத்தில் பிணமாக மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரின் 16 வயது மகள் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று பள்ளியில் இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.  அப்போது  திருச்சி சாலையில் உள்ள ரயில்வே … Read more

கட்டம் கட்டப்படும் PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா).! அமலாக்கத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தை முடக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கேரளாவில் கேரள மாநிலத்தில் நடைபெற்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே கேரள … Read more

வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மாயம்? இணையத்தில் வெளியான ஆடியோவால் வங்கியில் திரண்ட மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் ஊராட்சி வேளாண் வங்கியில் கிருஷ்ணன் என்பவர் அடகு வைத்த 4 சவரன் நகையை மீட்க சென்றபோது நகை இல்லாததால் வங்கி ஊழியர்கள் அவருக்கு புதிய நகைகள் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.  அங்கு அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை சரி பார்க்குமாறு கிருஷ்ணன் வெளியிட்ட ஆடியோ பதிவை தொடர்ந்து, ஏராளமானோர் தாங்கள் அடகு வைத்த நகைகளை காட்டுமாறு வேளாண் வங்கி ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 2 நாட்களாக வங்கி ஊழியர்கள் நகைகளை சரிபார்க்கும் பணிகளில் … Read more

காவிரியில் நீர் வரத்து குறைவு எதிரொலி: மேட்டூர் அணை நீர் மட்டம் 2 நாட்களில் ஓர் அடி சரிவு

மேட்டூர்: காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அணை நீர் மட்டம் இரண்டு நாட்களில் ஓர் அடி சரிந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை அளவை பொருத்து, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவுதமாக இருந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று (மே 31) வினாடிக்கு 2,770 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன் 1) மேலும் சரிந்து 2,006 கனஅடியாக நீர் வரத்து உள்ளது. அணையில் … Read more

'நாய் காதல் செய்யாதீர்கள்'- மதுரை பூங்காவில் வைக்கப்பட்ட சர்ச்சை பேனர் அகற்றம்

மதுரை ராஜாஜி பூங்காவில் ‘நாய் காதல் செய்தால் நடவடிக்கை’ என வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது. மதுரை காந்தி மியூசியம் அருகே மதுரை மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு பள்ளி கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் , பெண்கள் என ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்வர். இந்நிலையில், பூங்கா பராமரிப்பிற்காக நிர்வாகம் சார்பில் பல்வேறு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் 23-ஆம் தேதி பூங்கா வளாகத்திற்குள் வைக்கப்பட்ட பேனர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்; அமலாக்கத்துறை இயக்குநரகம் நடவடிக்கை

இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய ரிஹாப் இந்தியா அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணையின் பகுதியாக, பாப்புலர் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா, ரிஹாப் இந்தியா அறக்கட்டளையின் 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை இயக்குநரகம் முடக்கியுள்ளது. இந்த வங்கி கணக்குகளில் ரூ.68 லட்சட்துக்கு மேல் பணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் பணமோசடி நடவடிக்கைகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக 2021 டிசம்பரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா … Read more

#திருவண்ணாமலை || பேங்க்ல வேலை., ஊராட்சிமன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலவழகி பொய்யாமொழி.!

திருவண்ணாமலை அருகே வங்கிப் பணியில் வேலை கிடைத்ததால், பொறியியல் பட்டதாரியான ஊராட்சிமன்ற தலைவர். தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக பொறியியல் பட்டதாரி நிலவழகி பொய்யாமொழி இருந்து வந்தார். தற்போது அவருக்கு சென்னையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணி கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஊராட்சிமன்ற தலைவர் பதவியை நிலவழகி பொய்யாமொழி ராஜினாமா செய்து உள்ளார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை … Read more