சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு – அங்கன்வாடி ஊழியர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் நேற்று சத்துணவு சாப்பிட்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி பணியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தொண்டமான் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், நேற்று சத்துணவு சப்பிட்ட 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால், அச்சமடைந்த பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்தில் குவிந்தனர். பின்னர் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் தான் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியநிலையில், அங்கு வந்த சுகாதாரத்துறையினர் குழந்தைகளுக்கு … Read more

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய விஐடி… 163 பேருக்கு பாதிப்பு – அமைச்சர் மா.சு முக்கிய தகவல்

சென்னையில் கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுவருகிறது. ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகத்தை தொடர்ந்து சென்னை விஐடி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. இங்கு மட்டும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. விஐடி பல்கலைகழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான வடமாநில மாணவர்களும் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து, பரிசோதனை நடத்தப்பட்டது. தினந்தோறும், தொற்றால் … Read more

நினைத்து நினைத்து பார்த்தால்…, 'உயிரின் உயிரே'…, 7ஜி முதல் லெஜண்ட் வரை கேகே-வின் ஹிட் பாடல்கள்.!

இந்திய திரையுலகின் பிரபல பாடகர்களில் ஒருவரான கேகே-வின் திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட பல இந்திய மொழி படங்களின் பாடல்களைப் பாடியுள்ள கேகே., மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ள கேகே-வின் தமிழ் பாடல்கள் சிலவற்றை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். ஆனால் அதை கேகே தான் பாடினாரா என்று உங்களுக்கு … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்த 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களின் பரிசீலனை தமிழகச் சட்டப்பேரவைச் செயல் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது திமுகவின் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், அதிமுகவின் சி.வி.சண்முகம், தர்மர், காங்கிரசின் ப.சிதம்பரம் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் அன்று … Read more

“திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழக பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது?” – கே.எஸ்.அழகிரி

சென்னை: “பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவின் எட்டாண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கியிருக்கும் ரூபாய் 85 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு … Read more

நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழின் பங்குகள் விற்பனை தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், எம்.பி ராகுல் காந்தியும் ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் (ED) புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த முறைக்கேடு தொடர்பாக 2013 ஆம் ஆண்டு பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஐடி துறையினர் விசாரணை நடத்திட வழிவகுத்தது. நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் … Read more

மனைவியை பற்றி அவதூறாக பேசிய உறவினர்கள்.. தட்டிகேட்ட கணவன் அடித்து கொலை..!

மனைவியை தவறாக பேசிய தட்டிக்கேட்ட கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மதுராந்தகம் தண்டு பகுதியை சேர்ந்தவர் மோகன்.. இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்டு தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் மோகனின் சகோதர் அவரை காண அவரது வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது இரத்த வெள்ளத்தில் மோகன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த … Read more

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 3, 4, 5 ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை … Read more

தமிழகத்தில் 'தட்கல்' முறையில் பத்திரப்பதிவு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ‘தட்கல்’ முறையில் பத்திரப்பதிவு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த “தட்கல்” பத்திரப்பதிவு முறை செயல்படுத்தப்படவுள்ளது. தமிழக சட்டப் பேரைவைக் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பத்திரப்பதிவை விரைந்து மேற்கொள்ள வசதியாக ‘தட்கல்’ முறை கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரப்பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணையில், “தட்கல் பத்திரப்பதிவு நடைமுறை முதற்கட்டமாக 100 … Read more

சேலம்: யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது

சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இரண்டு பேரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் காவல்துறையினர் வாகன சோதனையின் போது, துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இரண்டு பேரும் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது, துப்பாக்கி தயாரிப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் அந்த இளைஞர்கள் வைத்துள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் கைது … Read more