தமிழக அரசை கண்டித்து பாஜக இன்று போராட்டம்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.!

தமிழக அரசை கண்டித்து இன்று தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21-ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும் குறிக்கப்பட்டன. இதனையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த … Read more

தமிழகம், புதுச்சேரியில் 4 நாள் மழைக்கு வாய்ப்பு – 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மே 31-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். ஜூன் 1, 2, 3-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் … Read more

கோழிக்கறி சோறு சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 40 பேருக்கு வாந்தி மயக்கம்

மணலூர்பேட்டை அருகே கோழிக்கறி சோறு சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளிகள் 40 பேருக்கு வாந்தி மயக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 40 பேர் ஒன்று சேர்ந்து நேற்றிரவு கோழிக்கறி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சாப்பிட்ட சிலமணி நேரத்திலேயே அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அனைவரும் மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை … Read more

Rasi Palan 31st May 2022: இன்றைய ராசிபலன்!

Rasi Palan 31st May 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 31st May 2022: இன்றைய ராசி பலன், மே 31ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

பிரபல பத்திரிக்கையாளர் விபத்தில் மரணம்.. முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்.!!

ஊடகத்துறையில் 19 ஆண்டுகாலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி ஹிந்து நாளிதழ்களில் பணியாற்றிய கார்த்திக் மாதவன் உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஊடகத்துறையில் 19 ஆண்டுகாலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி ஹிந்து நாளிதழ்களில் பணியாற்றிய கார்த்திக் மாதவன் அவர்கள் (29.5.2022) அன்று இரவு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிந்து … Read more

இரு சக்கர வாகனம் மோதி கீழே விழுந்த இளைஞர் மீது ஏறிய பேருந்து சக்கரம்.. தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

தருமபுரி அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி விழுந்த போது பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இலக்கியம்பட்டியைச் சேர்ந்த மாது என்பவர்  நேற்று காலை சொந்த வேலையாக  வெளியூர் சென்று மாலையில் வீடு  திரும்பினார். இலக்கியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவர் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கரவாகனம் மோதி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது பின்னால் வந்த அரசு … Read more

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை வெளிப்படுத்த டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் – ஜெயலலிதா பேரவை தீர்மானம்

சென்னை: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட திமுக அரசின் உண்மை நிலையை அம்பலப்படுத்த கிராமம்தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை பயிற்சி முகாமில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளர்களுக்கான 2 நாள் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. ஜெயலலிதா பேரவையின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடந்த இந்தபயிற்சி முகாமை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் வயிற்றில் மர்மப் பொருள் இருப்பதாக புகார்

காட்டுமன்னார்கோவில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் வயிற்றில் மர்ம பொருள் வைத்து தைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மாதர் சூடாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (36). இவருக்கு திருமணமாகி கணவர் பிரிந்து சென்ற நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு தொடர்பாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கர்ப்பப்பையில் நீர்கட்டி இருப்பதாகவும் அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய … Read more

ஒரே இடத்தில் 25 பேருக்கு கொரோனா…. சென்னையில் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்

தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சுமார் 78 நாள்களுக்கு பிறகு, கொரோனா பாதிப்பு 70ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 77 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 448 ஆக அதிகரித்துள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பிருந்த நிலைமையுடன் ஒப்பிட்டால், கொரோனா பாதிப்பு 12 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய பாதிப்புகளில் 80 சதவீதம் சென்னை, செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே … Read more

மதுரை – தேனி இடையே சிறப்பு ரயில்வே சேவை.. நாளை முதல் நேரம் மாற்றம்.!

ரயில்வே துறை சார்பில் மதுரை-தேனி இடையே முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் நேரத்தில் நாளை முதல் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. தற்போது மதுரை – தேனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில், சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், மதுரை-தேனி இடையே கடந்த மே 26-ம் தேதி முதல் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில்வே … Read more