ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற முதியவரால் பரபரப்பு…!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்ககுளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதியவர் ஒருவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை உடனடியாக மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்த சுப்பையா என்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமான நிலத்தை ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் அத்துமீறி ஆக்கிரமிப்பு … Read more

மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு.. நேரடியாக மக்களிடமே பேசிய முதல்வர்..

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக திருச்சி சென்ற அவர், திடீரென மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று, அதிகாரிகளிடம் மாநகராட்சியின் செயல்பாடு, பட்ஜெட், வருகை பதிவேடு, மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மக்களுக்கான சேவைகளை தாமதமின்றி விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக தீர்வு காண்பதாக முதலமைச்சர் … Read more

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் – அதிகாரிகள் தகவல்

சென்னை: பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் … Read more

வீட்டிலேயே சுகர் டெஸ்ட்… சிம்பிள் ஸ்டெப்ஸ் கவனிங்க!

Diabetes guide in tamil: நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நோயைக் கட்டுப்படுத்த பல வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் அது துயரத்தை அதிகரிக்கலாம். உங்கள் வீட்டில் இருக்கும் வசதிகளில் இருந்து குளுக்கோஸ் அளவை சரிபார்க்க கற்றுக்கொள்வது உங்கள் கவலைகளை ஒரு அளவிற்கு குறைக்கும். ஒரு சிறந்த இரத்த சர்க்கரை அளவு கொடிய இதயம் மற்றும் … Read more

நீதான் திருடனேன்னு ஒற்றுக்கொள்., அம்பலமாகிய தமிழக போலீசாரின் அத்துமீறல்.! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு.!

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டும் என்று, தமிழக காவல்துறைக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. திருட்டு வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி துன்புறுத்தியதாக, தமிழக காவல்துறையினருக்கு எதிராக தனலட்சுமி என்ற பெண், மாநில உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த புகாரில் மனித உரிமை மீறல் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியது.  மேலும், பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இழப்பீடு … Read more

ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு: சென்னையில் மார்க்சிஸ்ட் தவிர வேறு எந்தக் கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை

சென்னை: சென்னையில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக சிபிஎம் தவிர்த்து ஒரு கட்சி கூட தங்களின் ஆட்சேபனைகளை சென்னை மாநகராட்சியிடம் தெரிவிக்கவில்லை. தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தன. சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்றது. இதன்படி சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு … Read more

சிவாஜி தி பாஸ் மாதிரி ட்ரை பண்ணியிருக்கார்… லெஜெண்ட் ட்ரைலர் ரிலீஸ்

சரவணா ஸ்டோர் உரிமையாளரான அருள் சரணவன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் டிரெய்லர் வெளியானி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.   தனது நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் தற்போது தி லெஜண்ட்  என்ற படத்தில் நடித்துள்ளார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை தனது நிறுவத்தின் மூலம் தயாரித்துள்ளார். கடந்த 1997-ம் ஆண்டு அஜித் விக்ரம் நடிப்பில் வெளியான உல்லாசம் படத்தின் மூலம் இயக்குநர்களாக … Read more

கடலூர் : திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தீக்குளிப்பு.. சோகத்தில் குடும்பத்தினர்.!

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் ஆனந்த் குமார் (37 வயது) என்பவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ஆனந்த் குமாருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர் ஆனாலும் அவருக்கு ஏற்ற பின் அமையவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஆனந்த் குமார் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் … Read more

சேலத்தில் காதல் மனைவிக்காக தங்கையின் கணவனோடு சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பாசக்கார அண்ணன்..!

சேலம் உள்ளிட்ட பல ஊர்களில், பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை கைது செய்த போலீசார், 15 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். கடந்த 26-ம் தேதி, சேலம் சூரமங்கலம் அருகே கோவிலுக்குச் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 4 சவரன் நகையை, இருவர் பறித்து சென்றனர். புகாரின் பேரில், தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வாகன தணிக்கையின் போது நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர். விசாரணையில், இருவரும் … Read more

விருப்ப இடமாறுதல் பெற்ற மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயனை மதுரை ‘மிஸ்’ செய்வது ஏன்?

மதுரை: மதுரை மாநகராட்சியின் 6-வது ஆணையாளராக மருத்துவரான கா.ப.கார்த்திகேயன் இருந்து வந்தார். இவர், தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கமிஷன் உறுப்பினர் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை தெற்கு மண்டல ஆணையாளராக இருந்த சிம்ரன்ஜீத் சிங்கொலோன் தற்போது மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கா.ப.கார்த்திகேயன், மதுரையின் மாநகராட்சி ஆணையாளராக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது குடும்பம் சென்னையில் இருந்து வந்தது. இவர் மட்டுமே மதுரையில் … Read more