திருவள்ளூரில் சிட்கோ திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் தடை

திருவள்ளூரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு தொழிற்பேட்டை திட்டத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) வியாழக்கிழமை தடை விதித்தது. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ) தொழிற்பேட்டை அமைக்க திருத்தணி அருகே 145.98 ஏக்கர் நிலத்தை முடிவு செய்தது. இந்த திட்டமானது கடந்த செப்டம்பர் மாதம் 2021 பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், காவேரிராஜபுரம் கிராமத்தில் பொருத்தமான நிலத்தை ஒதுக்கிட திருவள்ளூர் ஆட்சியரின் உதவியை சிட்கோ நாடியது. அதனை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, … Read more

மொபைல் ஆப் மூலம் இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்.. சென்னை காவல்துறை கடுமையான எச்சரிக்கை.!

மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என்று சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  சமீபகாலமாக மொபைல் ஆப் மூலம் வட்டிக்கு கடன் கொடுத்து அதிக வட்டி வசூலிக்கும் கும்பல் பெருகி வருகிறது. கடந்த ஆண்டு இது போல ஒரு மோசடி கும்பல் கைது செய்யப்பட்டது. இது போன்ற செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய நிலையில் ப்ளே ஸ்டோர் மற்றும் சமூக வலைதளங்களில் அதுபோல கடன் கொடுக்கும் செயல்கள் அதிகரித்து … Read more

பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செய்த தம்பதி.. <!– பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுநரை கொலை செ… –>

கோவை மாவட்டம் வடவள்ளியில் பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கால் டாக்ஸி ஓட்டுனரை கொலை செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். ஓணாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த  தனியார் டாக்சி ஓட்டுனர் சனு என்பவர் கடந்த 9ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி அமலோற்பவத்தை கைது செய்தனர். விசாரணையில் … Read more

4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை, திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை: பிளஸ் 2 திருப்புதல் தேர்வில் மாற்றமில்லை

தமிழகத்தில் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிளஸ் 2 திருப்புதல் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் தவறாமல் பள்ளிகளுக்கு வர வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 12 … Read more

சென்னை: வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகை கொள்ளை

வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் தங்கநகை கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் திருச்சியில் இருந்து திரும்பிய அவர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது … Read more

தினமும் 10 கிராம் வெந்தயம்… சூடான நீர்… சுகர் பிரச்னைக்கு இவ்வளவு எளிய தீர்வா?

benefits of methi or fenugreek seeds in tamil: டைப் – 2 நீரிழிவு என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் தொடர்ந்து உயர்வதன் உச்சக்கட்டமாகும். இது மோசமான இன்சுலின் உற்பத்தியின் விளைவாகும். இன்சுலின் என்பது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஒரு ஹார்மோன் ஆகும். இரத்தத்தில் காணப்படும் முக்கிய வகை சர்க்கரை. துரதிருஷ்டவசமாக, உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருந்தால், இன்சுலின் சப்ளை கடுமையாகக் குறைக்கப்படும். இதனால், இரத்த சர்க்கரை அளவு உயரும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் … Read more

பாஜக வினோஜ் முன்ஜாமீன் கோரி மனு.. பாஜக மீது தமிழக காவல்துறை குற்றச்சாட்டு.!!

பாஜகவினர் மீது தமிழக காவல்துறை குற்றசாட்டியுள்ளது. இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக போலீஸ் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக வினோஜ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் அரசியலுக்காக மதத்தை ஒரு கருவியாக தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பயன்படுத்து வருகிறார் என காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார். மேலும், மனுதாரர் தமிழக பாஜக இளைஞரணி தலைவராகவும், சமூக வலைதளத்தில் அதிகம் பின் தொடர்பவர்கள் நிலையிலும் உள்ளார்.  அரசு பொது அமைதியை குலைக்கும் … Read more

கோயில் அன்னதானத்தின் செலவினத் தொகை உயர்வு: அறநிலையத் துறை ஆணையர் அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் 754 கோயில்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அன்னதானத்துக்கான செலவினத்தொகையை உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்கு ஆணையர் குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கோயில்களிலும் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு ரூ.25 வீதம் என வரையறுக்கப்பட்டு, ஒரேமாதிரியான திட்ட அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போதைய விலைவாசி அடிப்படையில் ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு ரூ.35 … Read more