இறந்தவர் உடலை டோலி கட்டித் தூக்கிச் சென்ற கிராம மக்கள்.. அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் போதிய சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில், இறந்தவர் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெக்கனா மலைப்பகுதியில், அண்மையில் இறந்தவர் ஒருவரின் உடலை மக்கள் 7 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி சென்று அடக்கம் செய்ததாக பத்ரிக்கைகளில் செய்தி வெளியானது. இது குறித்து தாமாக முன்வந்து விசாரித்த மனித உரிமை ஆணையம், ஆறு … Read more

மதுரை கலெக்டர் ஆபீஸை சூழ்ந்த சாக்கடை கழிவுநீர் –  மனு அளிக்க வந்த மக்கள் அதிருப்தி

மதுரை: தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தால் இன்று சாக்கடை உடைந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தை கழிவுநீர் சூழ்ந்து தேங்கியது. அதனால், மனு அளிக்க வந்த மக்கள் சாக்கடை நீரை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் பணியாற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தூய்மைப்பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த … Read more

‘4 ஆண்டுகள் முயற்சிக்கு கிடைத்த பயனாக நினைக்கிறேன்‘ -யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த கோவை மாணவி

யுபிஎஸ்சி தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியானநிலையில், கோவையைச் சேர்ந்த சுவாதி ஸ்ரீ, 42-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான, 749 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு தேர்வுகள் நடைபெற்றன. முதன்மை எழுத்துத் தேர்வு, பிரதான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வெழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. … Read more

மதுரையில் தேங்கிய 850 டன் குப்பை: ஸ்தம்பிக்க வைத்த சுகாதார ஊழியர்கள்

Madurai Corporation sanitary workers strikes leads to storing waste in roads: மதுரை மாநகராட்சியில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், 850 டன் குப்பை தேக்கமடைந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் 4,500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணி மற்றும் குடிநீர் விநியோகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை மேலவாசலில் உள்ள தூய்மை பணியாளர் குடியிருப்பு வளாகத்தில், 28 … Read more

கதவை மூடிட்டு மசாஜ் செய்ய தடை.! மேலும் 26 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சென்னை மாநகராட்சி.! 

கதவுகள் பூட்டிய நிலையில் சென்னையில் உள்ள மசாஜ் மையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட தடை உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. சென்னையில் உள்ள மசாஜ் சென்டர்கள் அழகு நிலையங்களுக்கு இருபத்தி ஏழு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில்,  மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்  வாடிக்கையாளர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்  ஒருவருக்கு சேவை வழங்கிய பின் கைகள் மற்றும் கருவிகளை … Read more

பத்தாம் வகுப்பு மாணவனை அரை நிர்வாணமாக ஓடவிட்ட சக மாணவர்கள்.. என்ன காரணம்..?

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை அரை நிர்வாணமாக ஓடவிட்டு சக மாணவர்கள் தாக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் வீட்டிற்கு திரும்புவதற்காக பேருந்து நிலையம் வந்த மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரை நிர்வாணமாக ஓட ஓட விரட்டி அடித்தனர். இதையடுத்து, பேருந்து நிலையத்தில் கும்பலாக நின்ற பள்ளி மாணவர்களை  எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து … Read more

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்: தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை அலர்ட்

சென்னை: கொசுக்கள் மூலம் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் எவரேனும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் அதுகுறித்த விவரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் “க்யூலெக்ஸ்’ எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. இந்தக் கொசுக்கள் அசுத்தமான நீரில் வளரக் கூடியவை. 1937-இல் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த … Read more

மதுரை – தேனி ரயில் போக்குவரத்து கால அட்டவணை மாற்றம் – தென்னக ரயில்வே அறிவிப்பு

மதுரை- தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் போக்குவரத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை – தேனி- மதுரைக்கு ரயில் பயண நேரம் கூடுதல் ஆகியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் மதுரையிலிருந்து தேனிக்கு முன்பதிவில்லா தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கடந்த 26ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அதன்படி மதுரையில் இருந்து தேனிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் போக்குவரத்து கடந்த 27-ஆம் … Read more

டெல்டாவில் ஸ்டாலின்: நாகை, திருவாரூரில் செவ்வாய்க்கிழமை ஆய்வு

Stalin visits delta and inspects drain works: கல்லணையில் இருந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டம் பீமனோடை வடிகால் வாய்க்காலில் ரூ.14.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். காவிரி … Read more

இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. கைது செய்த போலீசார்.!

இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் (60 வயது) என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என ராசு அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த இளம் பெண் கர்ப்பமாக … Read more