விருப்ப இடமாறுதல் பெற்ற மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயனை மதுரை ‘மிஸ்’ செய்வது ஏன்?

மதுரை: மதுரை மாநகராட்சியின் 6-வது ஆணையாளராக மருத்துவரான கா.ப.கார்த்திகேயன் இருந்து வந்தார். இவர், தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கமிஷன் உறுப்பினர் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை தெற்கு மண்டல ஆணையாளராக இருந்த சிம்ரன்ஜீத் சிங்கொலோன் தற்போது மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கா.ப.கார்த்திகேயன், மதுரையின் மாநகராட்சி ஆணையாளராக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது குடும்பம் சென்னையில் இருந்து வந்தது. இவர் மட்டுமே மதுரையில் … Read more

TNTET தேர்வு; சிலபஸ் என்ன? தேர்வுக்கு தயாராவது எப்படி?

Tamilnadu TET exam syllabus and exam pattern in Tamil: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டெட் தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் எப்படி தயாரவது என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை … Read more

கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

தண்ணீரில் மூழ்கி 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் சென்ட்ரிங் வேலை செய்து  வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவியும், தினேஷ்பாபு(20) என்ற மகனும், கிருஷ்ணபிரியா(16) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் கிருஷ்ணபிரியா தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் குமாரகிரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சண்முகத்தாய், தனது … Read more

மக்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.. தமிழக காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. திருட்டு வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி துன்புறுத்தியதாக காவல்துறையினருக்கு எதிராக தனலட்சுமி என்பவர் புகார் அளித்தார். இதன் விசாரணையில், மனித உரிமை மீறல் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தனலட்சுமிக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டது. சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆணைய உறுப்பினர், சமூகத்தில் இருந்து தற்காத்து … Read more

சென்னை மாமன்றக் கூட்டத்துக்கு வந்து தனது தொகுதியின் அடிப்படை தேவைகளை கோரிய மாதவரம் எம்எல்ஏ

சென்னை: மாதவரம் தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என சென்னை மாமன்றக் கூட்டத்திற்கு வந்து தமது கோரிக்கைகளை முன்வைத்தார் எம்எல்ஏ சுதர்சனம். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்திற்கு வந்த எம்.எல்.ஏ. சுதர்சனம் பேசிகையில், “மாதவரம் தொகுதி, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், அப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப, மாதவரம் சுற்றுவட்டாரங்களில் வளர்ச்சி இல்லை. அத்தொகுதியில் ஏராளமான … Read more

பப்பாளியில் இவ்ளோ சுகர் இருக்கா? சுகர் பேஷியன்ட்ஸ் சாப்பிடலாமா?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத அல்லது இன்சுலினைத் தேவையான முறையில் பயன்படுத்தாத ஒரு நிலை தான் நீரிழிவு நோயாகும் இரத்த சர்க்ரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த பதிப்பு ஏற்படுகிறது. . தங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த சிலர் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள், இன்னும் சிலர் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு மூலம் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவார்கள். … Read more

#சேலம் || காதல் மனைவிக்காக ஊர் ஊராக நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது.!

சேலம் காதல் மனைவிக்காக பல ஊர்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞரையும் அவரின் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 26ஆம் தேதி சேலம் சூரமங்கலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 4 சவரன் நகையை இரண்டு நபர்கள் பறித்து சென்றனர்.  இது குறித்து அந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.  மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி … Read more

கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்.. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தகவல்..!

தமிழகத்தின் தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட  90 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link