Tamil News Live Update: மதுரையில் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.. 1,600 டன் குப்பைகள் தேக்கம்!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. பிளஸ் 2 வேதியியல் தேர்வு.. போனஸ் மதிப்பெண்! பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். பகுதி 1-அ, வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ, வினா எண் … Read more

6 மாதங்கள் காத்திருப்பு ஏன்? அவசர சட்டம் தேவை – தமிழகத்தின் மிகப்பெரிய உயிர்க்கொல்லிக்கு முடிவுகட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை  விவகாரத்தின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளை மேற்கொண்டு வந்த அரசு, இப்போதாவது புதிய சட்டம் இயற்றுவது தான் இச்சிக்கலுக்குத் தீர்வு என்ற நிலைக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் தெருவுக்கு வர … Read more

கள்ளக்குறிச்சி அருகே கறி விருந்து சாப்பிட்டு வாந்தி மயக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரை அடுத்த மேலந்தல் கிராமத்தில் கறி விருந்து சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோர் வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருக்கோவிலூரை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(37) என்பவர் கரும்பு வெட்டும் பணிக்கான மேஸ்திரியாக இருந்து வருகிறார். விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யும்போது, கரும்பு வெட்டி முடித்ததும், கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டிய தொழிலாளர்களுக்கு கறி விருந்து கொடுப்பது வழக்கம். அந்த … Read more

பாஜக பிரமுகர் ஓட்டிவந்த கார் மோதி விபத்து: துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலி

திருப்பாச்சேத்தி அருகே பாஜக பிரமுகர் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்தார். திருப்புவனம் வடகரையைச் சேர்ந்தவர் பிரபாகரன் (48). தீவிர பாஜக ஆதரவாளரான இவர், மோடி மீதான பற்றால் தனது பெயரை மோடி பிரபாகரன் என மாற்றிக் கொண்டுள்ளார். திருப்புவனம் பாஜக ஒன்றிய செயலாளராக உள்ள இவர், நேற்று தனது காரில் மானாமதுரையில் இருந்து 4 வழிச்சாலை வழியாக திருப்புவனம் சென்று கொண்டிருந்தார். அப்போது கொத்தங்குளம் விலக்கு என்ற இடத்தின் … Read more

தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்காதீர் – அமைச்சர் பதவி குறித்து உதயநிதி அறிக்கை

திண்டுக்கல் தி.மு.க கிழக்கு, மேற்கு மாவட்டத்தின் சார்பாகத் திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்திலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், பல இடங்களில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.!!

பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ப்ராஜெக்ட் ஃபெலோ காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எம்.எஸ்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சேலம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : பெரியார் பல்கலைக் கழகம் பணியின் பெயர் : ப்ராஜெக்ட் ஃபெலோ கல்வித்தகுதி : எம்.எஸ்சி பணியிடம் : சேலம் தேர்வு முறை : எழுத்து தேர்வு … Read more

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல்.. போலீசார் விசாரணை.!

சென்னையை அடுத்த மாங்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் வீட்டிற்குச் சென்ற மர்ம நபர்கள் கத்திமுனையில் அவரைக் காரில் கடத்திச் சென்றுள்ளனர். சுரேஷ்குமார் தனது வீட்டை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த நிலையில், முன்பணம் கொடுக்க சிலர் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி … Read more

அரசு நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் வந்துள்ளன மோடி பிரதமரான பிறகு ஊழல் குறைந்துள்ளது: பாமக தலைவர் அன்புமணி கருத்து 

விழுப்புரம்: அரசு நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் வந்துள்ளன. பிரதமராக மோடி வந்தபின் ஊழல் குறைந்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்பு மணி ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தப்பின் ஊழல் குறைந்துள்ளது. அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மொழி பற்றிய சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்தியாவை பொருத்தவரை எந்த ஒரு மொழியும் தேசிய மொழியும் … Read more

நெல்லை: முறைகேடாக கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்தியதாக 5 லாரிகள் பறிமுதல்

கேரளாவுக்கு முறைகேடாக கனிமவளங்களை கடத்திய 5 லாரிகளை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் பறிமுதல் செய்தார். நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி பாறை சரிந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளில் பாறை வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 6 குழுவினர் அந்த குவாரிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இன்று வரை இந்த குவாரிகளுக்கு கனிம வளங்களை ஏற்றிச்செல்ல … Read more

சென்னை விஐடி கல்லூரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில், மேலும் 42 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வளாகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் முதல், கொரோனா கிளஸ்டரைப் புகாரளிக்கும் நான்காவது கல்வி நிறுவனம் இதுவாகும். இந்த புதிய எழுச்சி மூலம், சென்னையை (33) விஞ்சும் வகையில், செங்கல்பட்டு (46) புதிய பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டமாக மாறியுள்ளது. தமிழகத்தில் திங்கள்கிழமை … Read more