தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. பெண் உட்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காரும்- தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட கார், ஆயில்பட்டியில் முன் சென்ற காரை முந்த முயன்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதோடு, பேருந்தும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்தவர், கல்லூரி மாணவிகள் என … Read more

தமிழக அரசு பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வலியுறுத்தி சென்னையில் பாஜகவினர் பேரணி

சென்னை: பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் டீசல் விலையைப் பொருத்தவரை கடந்த மே 21-ம் தேதி, நாடு முழுவதும் பெட்ரோல் மீதான கலால் வரியை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் பல்வேறு தரப்பிலும் … Read more

வேலூர்: மனைவி உயிரிழந்த சோகம்: மகளுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்கு முன்பு உயிரிழந்த மனைவி, வேதனையில் மகளுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் தினகரன் (52) இவரது மனைவி சிவக்குமாரி புற்றுநோய் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். மனைவியை இழந்த தினகரன் வேதனையிலும், மிகுந்த மன அழுத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு … Read more

இரவு வானில் விண்மீன்களை பார்த்து ரசிக்க 5 ஸ்டார்கேஸிங் ஆப்ஸ்!

இரவு வானத்தை, அதன் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரபஞ்சத்தைப் பார்ப்பதில் ஏதோ ஒரு உற்சாகம் இருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியால், இரவு வானத்தில் விண்மீன்கள் எங்கு உள்ளன என்பதைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உங்களை அனுமதிக்கும் பல நட்சத்திரங்களைப் பார்க்கும் ஆப்ஸ் உள்ளன. இங்கே, நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில சிறந்த நட்சத்திர ஆப்ஸ் (stargazing apps) பட்டியலை நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம். கூகுள் ஸ்கை கூகுள் மேப்ஸின் நட்சத்திர அனலாக் தான் கூகுள் ஸ்கை. கூகுள் ஸ்கை மூலம், ஹப்பிள் ஸ்பேஸ் … Read more

கேரள லாட்டரியில்.. தமிழக டாக்டருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ரூ.10 கோடி பரிசு.!

கேரளா லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்த டாக்டருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் பிரதீப்குமார் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் என்பவரும் கடந்த மே 15ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த தங்கள் உறவினரை அழைப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது அங்கு விற்பனையான விஷு பம்பர் லாட்டரியை ஏஜெண்டு ஒருவரிடமிருந்து அவர்கள் வாங்கியுள்ளனர். தற்போது அந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த லாட்டரி … Read more

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் … Read more

சந்தை வரி விதிப்பு தொடர்பான ஓபிஎஸ் அறிக்கை; உண்மைக்குப் புறம்பான கூற்றுகள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: “தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் விளை பொருட்களுக்கு கூடுதல் செஸ் விதிக்கப்படுவதாக தவறான புரிதலின் அடிப்படையில் அறிக்கை ஒன்றினை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அது முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரான கருத்து என்பதுடன் உண்மைக்குப் புறம்பான கூற்றுகளாகும்” என்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன மறுப்பு அறிக்கை: தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் 1987, … Read more

முதுமலையில் 'ஜீப் சஃபாரி' சென்றவர்களுக்கு திக்திக் நிமிடங்கள் – துரத்திய காட்டு யானை

முதுமலையில் சபாரி சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வனப்பகுதிக்குள் காட்டு யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சபாரி ஜீப் ஒன்றை காட்டு யானை துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வனப்பகுதி சாலையின் இருபுறங்களிலும் நின்ற காட்டு … Read more

புகையிலை பயன்பாட்டையே முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது – பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

மனித உயிர்களை மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் புகையிலையை ஒழிக்க உறுதியேற்போம் என்று, பா.மக. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் டிவிட்டர் பதிவில், “இன்று #WorldNoTobaccoDay. “புகையிலை: நமது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்” (Tobacco: Threat to our environment) என்பதை இந்நாளின் நோக்கமாக #WHO அறிவித்துள்ளது. உடல்நலக் கேடு மட்டுமின்றி விவசாயம், தயாரிப்பு, விநியோகம், குப்பை என அனைத்திலுமே புகையிலை பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், புகையிலையால் … Read more

பாம்பைக் கூட சமாளிப்போம்; பல்லின்னா பயம்… அப்போ நீங்க இதைப் பண்ணுங்க!

நம் வீட்டில் காணப்படும் பல்லி, ஒரு குளிர் ரத்தப் பிராணி. அண்டார்டிகா கண்டம் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பல்லிகள் காணப்படுகின்றன. சாதாரண வீட்டு பல்லிகள், விஷமற்றவை, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை. மேலும் அவை ஈக்கள், கொசுக்கள், கரையான்கள், கரப்பான் என பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. எனவே அவற்றை கொல்ல முயற்சிப்பதற்குப் பதிலாக அவற்றை துரத்துவது நல்லது. நீங்கள் பல்லிகளுக்கு பயப்படுகிறீர்கள் என்றால், உங்கள் வீடுகளில் பல்லிகள் வராமல் தடுக்கும் வழிகளை இங்கே பார்க்கலாம். வீட்டில் பல்லிகளை … Read more