திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்திருந்த தடை இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று நீக்கப்பட்டது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் மழை காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியைய் தாண்டியதால் அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் … Read more

சேலம் || ஏரியில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலம்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

ஏரியில் இருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் பூலவரி பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவர் அந்த பகுதியில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக பெற்றோர் தேடிவந்தனர். இந்நிலையில் கலையரசனின் வாகனம் அங்குள்ள ஏரியின் அருகே நிற்பதாக பெற்றோருக்கு தகவல் வந்தது.  இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை … Read more

பறிக்கிறத விட தப்பி ஓடுறதுல கூடுதல் வேகம்.. 6.6 கிலோ தங்க நகை அபேஸ்..!

தஞ்சையில் நகை வியாபாரிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 14 லட்சம் ரூபாய் ரொக்க பணம் இருந்த பையை 9 பேர் கொண்ட ஒயிட்காலர் கிரிமினல்ஸ் பறித்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது தஞ்சையை சேர்ந்த மணி என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நகை கடைகளில் ஆர்டர் எடுத்து சென்னையில் இருந்து மொத்தமாக தங்க நகைகளை வாங்கி … Read more

“பழைய பாணியால் மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படாது” – அரசுத் துறை செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: “மாநிலத்தின் வளர்ச்சி என்பது புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு நீங்கள் திட்ட செயலாக்கங்களிலும், கண்காணிப்புகளிலும் புகுத்துகிறீர்கள் என்பதில்தான் அமைந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக செய்து வருவதையே தொடர்ந்து செய்து வந்தால், புதிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்” என்று அரசுத் துறைச் செயலர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10-ஆவது தளத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிப்புகளின் தற்போதைய … Read more

மருத்துவ காரணங்களுக்காக முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கேட்டு நளினி மனு

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும், ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை … Read more

அம்மன் அவதாரம் எடுத்த ஷகிலாவின் மகள்… வரவேற்பை பெறும் புதிய போட்டோஷூட்

Actress Shakeela Daughter Milla Amman Getup Viral Photoshoot : நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா அம்மன் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. 80-90-களில் தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் கேரக்டரில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஷகிலா அதன்பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கவர்ச்சிப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த காலத்தில், … Read more

கோயம்புத்தூர் : பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு.!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரன் நகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவியை இருந்துள்ளார். இவர் அழகுக் கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சிவசக்தி ஈரோட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு பல்லடம் சாலையில் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிவ சக்தி தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து பேருந்தில் நடக்க முயற்சி செய்துள்ளார். … Read more

தஞ்சையில் 9 பேர் கொண்ட கும்பல் நகை வியாபாரியின் பையை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தஞ்சையில் தங்க நகை வியாபாரியிடம் இருந்து சுமார் ஆறரை கிலோ தங்கம், 14 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், வெள்ளை சட்டை அணிந்த 9 பேர் கொண்ட கும்பல் நகை வியாபாரியின் பையை பறித்துச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நகை வியாபாரியான மணி என்பவர் ஆர்டர் எடுத்த நகைகளை கொடுப்பதற்காக நகைகளையும் பணத்தையும் கருப்பு நிற பையில் வைத்து கொண்டு சென்றார். இதை நோட்டமிட்டு பின் தொடர்ந்த கும்பல், பேருந்து நிலையம் அருகே மணி … Read more

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு 

சென்னை: திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து … Read more

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு – அங்கன்வாடி ஊழியர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் நேற்று சத்துணவு சாப்பிட்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி பணியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தொண்டமான் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், நேற்று சத்துணவு சப்பிட்ட 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால், அச்சமடைந்த பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்தில் குவிந்தனர். பின்னர் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் தான் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டியநிலையில், அங்கு வந்த சுகாதாரத்துறையினர் குழந்தைகளுக்கு … Read more