சென்னையில் பட்டப்பகலில் பைனான்சியர் வெட்டிக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்.!

சென்னை அமைந்தகரை செனாய் நகரில், பைனான்சியர் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கள்ளகுறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சேத்துப்பட்டைச் சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகம் நேற்று ஷெனாய் நகர் ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதனையடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் சந்திரசேகர், ரோஹித் … Read more

பேரறிவாளன் விடுதலை, ஜிஎஸ்டி தீர்ப்புகளை இணைத்துப் பார்க்க வேண்டும்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜிஎஸ்டி தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால், இதைத்தான் நீங்கள் … Read more

நகைச் சீட்டு மோசடி: நகைக் கடையில் ஆய்வு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

சேலத்தில் நகைச் சீட்டு, நகை முதலீடு மோசடி வழக்கில் தொடர்புடைய நகைக் கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் சின்னக்கடை வீதி ராஜகணபதி கோயில் அருகே தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோருக்குச் சொந்தமான லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் இயங்கி வந்தது. தங்களது கடையில் நகைச் சீட்டு மற்றும் தங்கத்தை முதலீடு செய்தல் மற்றும் நகையையும், பணத்தையும் டெபாசிட் செய்தால் ஒரு பவுன் தங்கத்திற்கு மாதம் 600 ரூபாய் வட்டி வீதமும், ஒரு லட்சம் பணத்திற்கு … Read more

சித்தி- 2 என்ட் கார்ட்… ராதிகா எடுத்த முடிவு?

Tamil Serial Chithi 2 Going Off – Air Soon? : சின்னத்திரையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் சன்டிவிக்கு முக்கிய இடம் உண்டு. அதேபோல் சன்டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. சன்டிவிக்கு நிகராக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் விஜய் டிவியின் பல சீரியல்கள் சீசன் 2 ஒளிபரபரப்பாகி வருவதைபோல் சன்டிவியில் சித்தி 2 சீரியல் தொடங்கப்பட்டது. 90-ஸ் குழந்தைகளின் மனம் கவர்ந்த சீரியலகளில் ஒன்றான சித்தி 2 சீரியல் கடந்த 1999-ம் … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரபூர்வ இணையதளத்தில் உளவியலாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக முதுகலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணியின் பெயர் : உளவியலாளர் கல்வித்தகுதி : முதுகலை பட்டம் பணியிடம் : தமிழ்நாடு தேர்வு முறை : … Read more

மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசு ஏற்ற நிலையில் அவர் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதி.!

இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாமல் தவிக்கும் மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்ற நிலையில், அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபால் வீராங்கனையான சிந்து, கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன. எழுந்து நிற்க முடியாத நிலையிலும் மாணவி சிந்து, தன்னம்பிக்கையுடன் பொதுத் தேர்வு எழுதினார். சிந்துவின் மருத்துவ செலவை … Read more

‘இயல்’ வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஆ.இரா.வேங்கடாசலபதி, சந்துருவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: கனடா இலக்கியத் தோட்ட விருது பெறும் எழுத்தாளர் வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’- வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் – ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான … Read more

‘வீட்டிற்குள் அம்மா சேர்க்கவில்லை’ -தற்கொலைக்கு முயன்ற சின்னத்திரை நடிகர்

வீட்டிற்குள் தனது தாய் சேர்க்கவில்லை என சின்னத்திரை நடிகர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு பெர்னான்டோ. சின்னத்திரை மற்றும் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் காவலாளி வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய தாயும், தந்தையும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தந்தையுடன் வசித்து வந்த ஜெரால்டு, அவர் இறந்த பிறகு தாய் ஜோஸ்மீன் கமலா வீட்டில் வசித்து … Read more

இப்போ விதவைகள் கம்மி ஆகிட்டாங்களா? கனிமொழி- ஜோதிமணியை தெறிக்கவிட்ட கேள்வி

திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, செய்தியாளர் எழுப்பிய திமுக ஆட்சியில் விதவைகள் கம்மி ஆகிட்டாங்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியமால் புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திமுகவின் மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி எம்பி சண்மூக சுந்தரம், சேலம் எம்பி பார்த்திபன் உள்ளிட்டோர் நேற்று (மே 18) டெல்லியில் மத்திய … Read more

பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.!

10ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 2ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டிற்கான அரசு பொது தேர்வு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ மாணவிகள் பொது தேர்வை எழுதுகின்றனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு 3 ஆயிரத்து 936 … Read more