உக்ரைன் – ரஷ்யா போர்; எப்படி நடக்கிறது போர் கைதிகள் பரிமாற்றம்?

Deutsche Welle  Russia-Ukraine War: How does a prisoner exchange work?: திங்கட்கிழமை இரவு மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான உக்ரேனிய வீரர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது, அவர்களில் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வீரர்கள் டொனெட்ஸ்க் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ரஷ்ய தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். உக்ரைனுக்கு அதன் ஹீரோக்கள் உயிருடன் தேவை என்று உக்ரேனிய அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகிறார். மேலும், … Read more

கல்குவாரி விபத்து.. கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம் – ஆட்சியர்

நெல்லை அருகே கல்குவாரியில் ராட்சதப் பாறை உருண்டு விழுந்த விபத்து தொடர்பாக, கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். அடைமிதிப்பான்குளம் குவாரி இடிபாடுகளில் சிக்கிய 6ஆவது நபரை மீட்கும் பணியை பார்வையிட்டபின் பேட்டியளித்த அவர், சிறிய அளவில் வெடிவைத்து பாறைகளை தகர்த்து மீட்புப் பணி நடைபெறுவதாக கூறினார். இதனிடையே, குவாரி உரிமையாளர் செல்வராஜின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மற்றும் அவரது மகனின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் … Read more

புதுச்சேரியில் ஆயுள் தண்டனைக் காலம் முடிந்த கைதிகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: அதிமுக

புதுச்சேரி: “பேரறிவாளன் தீர்ப்பை புதுவை அரசு முன்னுதாரணமாக எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஆயுள் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க அரசும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “ராஜீவ் கொலை குற்றவாளிகளை மாநில அரசு விடுதலை செய்யும் என 19.02.2014-ல் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில் … Read more

“அண்ணன் இல்லையென்றால் இது சாத்தியமில்லை”- வைகோவுக்கு பேரறிவாளன் நெகிழ்ச்சியுடன் நன்றி

சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளன் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தார் பேரறிவாளன். இந்த சந்திப்பின்போது மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர். வைகோ அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு துரை வைகோவிடம் பேசிக்கொண்டிருந்த பேரறிவாளன், வைகோ பொடோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் … Read more

தேர்வு இல்லாமல் தபால் துறை வேலை: 10-ம் வகுப்பு மார்க் எவ்வளவு தேவை?

India post recruitment 2022 for 38926 GDS posts cut off mark details: போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். இந்தநிலையில் 10 ஆம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வேலை … Read more

மாநிலங்களவை எம்பி தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு.!!

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை எம்பி பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் காலியாகும் 52 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த … Read more

கோவையில் தொல்பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோயம்புத்தூரில் பண்டைய கால தொல்பொருட்களின் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வ.உ.சி. மைதானத்தில், தொல்லியல் துறை மற்றும் செய்தித்துறை சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் கீழடி, பொருநை ஆற்றங்கரை மற்றும் மயிலாடும்பாறை அகழ்வாய்வில் கிடைத்த தொன்மையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த ஓவிய கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். Source link

“கொள்கை வேறு… கூட்டணி வேறு” – காங்கிரஸின் ‘வெள்ளைத் துணி’ போராட்டத்துக்குப் பின் கே.எஸ்.அழகிரி கருத்து

கடலூர்: “பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; ஆளுநர் காலம் தாழ்த்தியதால் அவர் விடுவிக்கப்பட்டார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் … Read more

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்கும் பணிகள் -சென்னை உயர் நீதிமன்றம் தடை

திருவண்ணாமலை கிரிவலப் பாதை அருகே மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணமலையில் கிரிவலப் பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “வேங்கிக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து கருணாநிதி … Read more

உங்கள் தினசரி சரும பிரச்சனைகளை தீர்க்கும் தயிர்.. எப்படி யூஸ் பண்றதுனு பாருங்க!

தற்போது கோடைக்காலம் நம் கதவுகளைத் தட்டிக் கொண்டிருப்பதால், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப சரும பராமரிப்பை மாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பிரதான உணவாக இருக்கும் தயிர், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அத்துடன் தோல் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது. தயிர் உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது, சருமத்தை மேம்படுத்துகிறது, இதில் நல்ல அளவு கால்சியம், பி-12 மற்றும் வைட்டமின் டி உள்ளது. இது எலும்புகள், பற்கள் மற்றும் ஒட்டுமொத்த … Read more