முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பி.ரவீந்திரநாத் திடீர் சந்திப்பு

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஸின் மகனும், அதிமுக எம்பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத், நேற்று சந்தித்தார். அப்போது பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு மனு அளித்தார். மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகள் மூலம் தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட 41 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகளை கண்காணிக்க, மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. … Read more

ஆறே மாதத்தில் பாலாற்று வெள்ளத்தில் மீண்டும் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்; மக்கள் அவதி

ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்போருக்கு போக்குவரத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழக ஆந்திர எல்லை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த பாலாற்று நீரில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த மாதனூர் – உள்ளி பகுதிகளை இணைக்க கூடிய தரைப்பாலம், அடித்து செல்லப்பட்டிருக்கிறது. இந்த தரைப்பாலம் கடந்த 6 … Read more

Tamil News Live Update: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு! சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3 உயர்ந்து ரூ. 1,018 ஆகவும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 8 … Read more

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் புரட்டி எடுக்க போகும் கனமழை.!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட உள்தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, … Read more

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் சென்னையில் கைது: டெல்லிக்கு அழைத்துச் சென்றது சிபிஐ

சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்னையில் கைது செய்தனர். 2009-2014 காலகட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, 263 சீனர்களுக்கு தடையில்லா விசா வழங்கப்பட்டதாகவும், இதன்மூலம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் கைமாறியதாகவும் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஆடிட்டர் பாஸ்கர ராமன் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்நிலையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய, 10 இடங்களில் உள்ள … Read more

`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜரான சபாநாயகரை தரிசிக்க அனுமதி தந்துள்ளது தமிழ்நாடு அரசு. முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு பல்வேறு பிரச்னைகள் காரணமாக கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து … Read more

இட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா?

How to make Ribbon Pakoda with Idli batter simple recipe in Tamil: இன்றைய கால கட்டத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. மாலை நேரத்தில் எல்லோரும் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புகிறோம். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பது, மிக்சர், காரசேவ், பக்கோடா போன்றவை தான். இவற்றின் தனித்துவமான ருசிக்காகவே இதனை எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இவற்றில் ரிப்பன் பக்கோடா பெரும்பாலானோருக்கு பேவரைட் ஸ்நாக்ஸ். ஆனால் இந்த ரிப்பன் பக்கோடாவை நீங்கள் … Read more

சென்னையில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 1000 கிலோ குட்கா பறிமுதல்.! ஆர்.கே.நகர் போலீசார் அதிரடி நடவடிக்கை.!

சென்னையில் ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ குட்காவை ஆர்.கே.நகர் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். ஆர்.கே.நகர் போலீசார் கொருக்குப்பேட்டை எழில் நகர் அருகே உள்ள சர்வீஸ் சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு ஷேர் ஆட்டோவில் இருந்து மூட்டை மூட்டையாக பொருட்களை இறுகிக் கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் சந்தேகம் அடைந்து அந்த மூட்டையை பிரித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட … Read more

கள்ளச்சாராயம் விற்பவர்களை முகநூல் நேரலையில் பதிவிட்ட அரசியல் கட்சி பிரமுகருக்கு பீர்பாட்டிலால் மண்டை உடைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கள்ளச்சாராயம் விற்பவர்களை முகநூல் நேரலையில் பதிவிட்ட அரசியல் கட்சி பிரமுகரை  பீர்பாட்டிலால்தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்மையகரம் கிராமத்தின் ஏரிக்கரைப் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 2பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Source link

60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க திட்டம்: மத்திய அரசு மீது இந்திய கம்யூ. தேசிய செயலர் டி.ராஜா குற்றச்சாட்டு

சென்னை: மத்திய பாஜக அரசு, 60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அளவிலான 24-வதுமாநாடு, அக். 14 முதல் 18 வரை ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இன்றைய அரசியல் சூழலில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ன் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராகப் போராட்டங்களை … Read more