TNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி?

TNPSC group 2 exam OMR shading and Time Management tips: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வில் ஓ.எம்.ஆர் ஷீட்டை எப்படி நிரப்புவது? தேர்வுக்கான கால அவகாசத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது குறித்து இப்போது பார்ப்போம். முதலில் தேர்வாணையம் அறிவித்துள்ளப்படி கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே தேர்வில் பயன்படுத்துங்கள். வேறு நிற பேனாக்களை பயன்படுத்த வேண்டாம். அடுத்ததாக, ஓ.எம்.ஆர் ஷீட் … Read more

பேரறிவாளன் விடுதலை ஆழ்ந்த வேதனை மற்றும் ஏமாற்றம்.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா.!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆழ்ந்த வேதனை மற்றும் ஏமாற்றத்தை அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மிகவும் மலிவான அரசியல் லாபத்துக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியை விடுதலை செய்யும் சூழ்நிலைக்கு அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் முடிவு ஆழ்ந்த வேதனை மற்றும் ஏமாற்றத்தை … Read more

இராமநாதபுரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை, மதுபோதையில் தாக்கிய 6 பேர் கொண்ட கும்பல் கைது.!

இராமநாதபுரம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை, மதுபோதையில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். குற்றப்பிரிவு காவலர்களான வசந்த், லிங்கநாதன் ஆகியோர் நரிப்பையூர் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த கும்பல் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதோடு, மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் காவலர்கள் இருவரும் காயமடைந்த(( நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது … Read more

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு:  சார்பு ஆய்வாளருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இவர்கள் இருவரையும் கடந்த 2020 ஜூன் 19ம் தேதி கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் … Read more

முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்

சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை  பேரறிவாளன், அற்புதம்மாள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் ஏற்கெனவே தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் மற்றும் … Read more

கர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்

Karnataka governor Thawar Chand Gehlot gives nod to ordinance for anti-conversion Bill: பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், மதமாற்ற எதிர்ப்பு மசோதாவுக்கு வழி வகுக்கும் மத சுதந்திர உரிமைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ ஆளுநரை சந்தித்து ஒப்புதல் வழங்குவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்த ஒரு நாள் கழித்து இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. கர்நாடகாவில் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் பாஜக … Read more

#திண்டுக்கல் || சஸ்பெண்ட் செய்யப்பட்ட விரக்தியில் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை..!

சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்திப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவர் 14வது பெட்டாயனில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜீவராஜ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் செய்யப்படுகிறது இருந்தவர்கள். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை வீட்டில் ஈடுபட்டால் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக … Read more

எவ்வித காரணமும்  கூறாமல்  கைது செய்யப்பட்டுள்ளேன்: எச்.ராஜா

சென்னை: எவ்வித காரணமும் கூறாமல் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். எச்.ராஜா இன்று பழனியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தபோது, திண்டுக்கல் எஸ்.பியான் தான் கைது செய்து செய்யப்பட்டதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ் பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன். (சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் … Read more

நெல்லை கல்குவாரி விபத்து – 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!

நெல்லை கல்குவாரி இடிபாடுகளில் அடையாளம் காணப்பட்ட 5 வது நபர் 30 மணி நேர தீவிர மீட்பு பணியினை தொடர்ந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் குவாரியில் கடந்த 14 ம்தேதி இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர் கல்குவாரிக்குள் சிக்கி கொண்ட நிலையில் மறுநாள் 15 ம் தேதி காலை ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்து நடந்த நேரத்தில் இருந்து கிட்டாச்சி … Read more

ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்?

ADMK MP OP Ravindranath meet CM Stalin at secretariat: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் மகனும் எம்.பி.,யுமான ரவீந்திரநாத், தேனி மக்களவை தொகுதிக்கான கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தார். தேனி மக்களவை தொகுதி எம்.பி.,யும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினார். முன்னதாக, மாநில வளர்ச்சிக்குழுக் கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விசிக … Read more