மத்தி மீன்கள் விலை உயர்வு – போதிய மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்

மத்தி மீன்களுக்கு உரிய விலை கிடைத்தும், கடல் காற்று காரணமாக  போதிய அளவுக்கு மீன்கள் வலையில் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61  நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக விசைப்படகு மற்றும் இழுவைப்படகுகள் ஆழ்கடல் தொழிலுக்குச் செல்லாமல் படகுகளை பழுதுநீக்கம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையை  குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு … Read more

சுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது?

Foods for Diabetes in tamil: நீரிழிவு நோய் உலகெங்கிலும் உள்ள ஒரு முக்கிய கவலையாக உள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் உலகின் ஏழாவது பெரிய கொள்ளை நோயாக இது மாற வாய்ப்புள்ளது. உடலில் இரத்த சர்க்கரையின் சீரற்ற ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் வளர்சிதை மாற்றக் கோளாறு தான் நீரிழிவு நோய். இது தற்போது உலகளவில் 425 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது. 72.9 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். 2017 ஆம் ஆண்டில் இந்தியவில் சரியான … Read more

9 வயது பள்ளி சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்.. போக்சோவில் கைது.!

திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுக்கா சட்டுவநாதாங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியை, அதே பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர் சிறுமியின் ஆடைகளை களைந்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமியை தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் இனிமேல் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செய்யாறு … Read more

பரட்டை தலையில் பட்டி டிங்கரிங்… போலீசுக்கு பயந்து ஓடிய பட்டாக்கத்தி ரவுடி கைது..!

சென்னையில் பட்டாக்கத்தியை கொண்டு கேக் வெட்டிய பரட்டைத் தலை ரவுடி ஒருவர், போலீசுக்கு பயந்து தலைமுடியை வெட்டிக் கொண்டு பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை வைத்து சென்னை காவல்துறை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் வீடியோவை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 3 ஆயிரம் பக்க விசாரணை அறிக்கை – முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினார்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 3 ஆயிரம் பக்க விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று வழங்கினார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, அந்த ஆலையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீஸார் … Read more

பேரறிவாளனை விடுவிக்க அதிமுக அரசின் வரலாற்று நடவடிக்கையை மறைக்க முடியாது: ஓபிஎஸ்

பேரறிவாளனை விடுவிக்க அதிமுக அரசு எடுத்த வரலாற்று நடவடிக்கையை யாராலும் மறைத்துவிட முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் பசுமை வழிச் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை, பேரறிவாளன் அவரது தாய் அற்புதம்மாள் உடன் சந்தித்து நன்றியை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் பேரறிவாளனை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என தெரிவித்தார். ஒரு மாநில முதலமைச்சருக்கு இருக்கும் உரிமை … Read more

Rasi Palan 19th May 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 19th May 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 19th May 2022: இன்றைய ராசி பலன், மே 19ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

இன்றைய (19.05.2022) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.. வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி.!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.  தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை: தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. 161-வது சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதால், 142-வது சட்டப்பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தானு என்ற பெண், மனித … Read more

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை… இம்முறை எவ்வளவு?

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 3 ரூபாய் அதிகரித்து 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 7-ம் தேதி, தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது தற்போது இன்னும் உயர்ந்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, மார்ச் மாதத்தில் 50 … Read more